பொது செய்தி

இந்தியா

ராகுல் மீது லலித் மோடி பாய்ச்சல்: திருடன் என கூறுவதாக ஆவேசம்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 19, 2019 | கருத்துகள் (40)
Advertisement

புதுடில்லி: 'மோடிகள் எல்லாம் திருடர்கள்' என, காங்கிரஸ் தலைவர் ராகுல் கூறியதற்கு, கடும் கண்டனம் தெரிவித்துள்ள, ஐ.பி.எல்., முன்னாள் தலைவர் லலித் மோடி, ராலுக்கு எதிராக வழக்கு தொடரப் போவதாக கூறியுள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






கர்நாடகாவில், சமீபத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய, காங்கிரஸ் தலைவர் ராகுல், 'மோடிகள் எல்லாம் திருடர்கள்' என கூறினார். ஐ.பி.எல்., எனப்படும், இந்தியன் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டி அமைப்பின் தலைவராக இருந்த, லலித் மோடி, மோசடி வழக்கில் சிக்கியதையும், நிரவ் மோடி, வங்கியில் கடன் வாங்கி விட்டு, திருப்பிச் செலுத்தாமல், வெளிநாட்டுக்கு தப்பி ஓடியதையும் குறிப்பிட்டு, அவர் பேசினார்.


வழக்கு


இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி, கடும் கண்டனம் தெரிவித்தார். 'ராகுல், பிற்படுத்தப்பட்ட, மோடி சமூகத்தினரை இழிவு படுத்தும் வகையில் பேசியுள்ளார்' என்றார்.இது தொடர்பாக, பீஹார் துணை முதல்வரும், பா.ஜ., மூத்த தலைவருமான, சுஷில் குமார் மோடி, ராகுலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்நிலையில், லலித் மோடி கூறியுள்ளதாவது: மோடி சமூகத்தை சேர்ந்த அனைவரையும் அவமதிக்கும் வகையில், ராகுல் பேசியுள்ளார். இதற்காக, ராகுல் மீது வழக்கு தொடர முடிவு செய்துள்ளேன். இந்த நாட்டை, 50 ஆண்டுகளாக கொள்ளை அடித்த, ராகுல் குடும்பத்தினர், மோடி சமூகத்தினரை இழிவாக பேசுவது, கேலிக்குரியது. இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.






ரூ.470 கோடி


லலித் மோடி, ஐ.பி.எல்., தலைவராக இருந்தபோது, 470 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்தது. இதையடுத்து, லலித் மோடி, பிரிட்டன் தலைநகருக்கு தப்பி ஓடினார். அவரை நாடு கடத்துவதற்கான முயற்சியில், மத்திய அரசு ஈடுபட்டுள்ளது குறிப்பிடத் தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sandru - Chennai,இந்தியா
20-ஏப்-201918:09:07 IST Report Abuse
Sandru கொள்ளைக்காரனான தன்னை சாதாரணமாக திருடன் என்று சொன்னதால் லலித் மோடி கோவம் அடைந்திருக்கிறார்.
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
20-ஏப்-201916:17:08 IST Report Abuse
skv<srinivasankrishnaveni>
Rate this:
Share this comment
Cancel
Saleem - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
20-ஏப்-201915:08:39 IST Report Abuse
Saleem லண்டனுக்கு தப்பி ஓடியவர்கள் சொல்வதற்கும் கூவுகிறார்கள் ....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X