அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'சட்டசபை தேர்தலுக்கு கண்டிப்பாக வருவேன்!'

சென்னை:லோக்சபா தேர்தல் முடிந்த சூட்டோடு, ''சட்டசபை பொதுத் தேர்தல், எப்போது வந்தாலும், கண்டிப்பாக வருவேன். என் ரசிகர்களின், அரசியல் ஆர்வத்தை அறிவேன்; அவர்களை ஏமாற்ற மாட்டேன்,'' என, சென்னையில், நேற்று நடிகர் ரஜினி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.


கடந்த, 2017 டிச., 31ல், சென்னையில், ரசிகர்களை அழைத்துப் பேசிய, ரஜினி, அரசியலுக்கு வருவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பை, அவர் வெளியிட்டு, ஓராண்டைக் கடந்து விட்ட போதிலும், அரசியலுக்கான ஆரம்பக் கட்ட வேலைகளை கூட, அவர் முழுதாக முடிக்கவில்லை.

தன் பெயரிலான, ரசிகர்கள் மன்றத்தை மட்டும், மக்கள் மன்றமாக மாற்றினார். அதற்கு, மாவட்ட வாரியாக, நிர்வாகிகளை நியமித்தார். அடிக்கடி, அவர்களுடன் சந்தித்து, அரசியல் பற்றி விவாதங்கள் நடத்தினார்.அந்த வேகத்தில், அரசியல் கட்சியை ஆரம்பித்து விடுவார் என, அவரது ரசிகர்களும்,

பொதுமக்களும் எதிர்பார்த்தனர். ஆனால், அந்த திட்டத்தை அப்படியே கிடப்பில் வைத்து, சினிமாவில் நடிப்பதில் தீவிரம் காட்ட துவங்கி விட்டார்.

இந்த அறிவிப்பு வெளியான பின், நான்கு படங்களில் நடித்து முடித்து விட்டார். தற்போது, கைவசம் இரண்டு படங்கள் வைத்துள்ளார். இனிமேலும், அவர் நடிப்பதற்கான வாய்ப்புகளே அதிகம் இருப்பதாக தெரிகிறது.இந்நிலையில், லோக்சபா தேர்தலுக்கும், தமிழகத்தில் காலியாக உள்ள, 22 சட்டசபை தொகுதிகளுக்கும், இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், லோக்சபா தேர்தலும், 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும், 18ம் தேதி நடந்து முடிந்தது.

இந்த தேர்தலிலேயே, ரஜினி களமிறங்க வேண்டும் என, அவரது ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால்,'சட்டசபை பொதுத் தேர்தல் தான், நம் குறிக்கோள்' எனக் கூறி, சினிமாவில் நடிக்க போய் விட்டார். லோக்சபா தேர்தலில், தன் ஆதரவு யாருக்கு என்பதையும், அவர் அறிவிக்க மறுத்து விட்டார். அதனால், அவரது மக்கள் மன்ற பணிகள் தொய்வடைந்து உள்ளன.

இச்சூழ்நிலையில், ரசிகர்களை உற்சாகப்படுத்தும் விதமாக, 'சட்டசபை பொதுத் தேர்தலை கண்டிப்பாக சந்திப்பேன்' என, நேற்று அறிவித்துள்ளார். மும்பையில், 'தர்பார்' படப்பிடிப்பில் இருந்த ரஜினி, ஓட்டுப்பதிவுக்காக, சென்னை வந்திருந்தார்.

Advertisement

ஓட்டுப்பதிவு முடிந்ததும், நேற்று மீண்டும் மும்பை புறப்பட்டார்.அப்போது, நிருபர்களின் கேள்விகளுக்கு, ரஜினி அளித்த பதில்:

என் ரசிகர்களின் அரசியல் ஆர்வம் புரிகிறது; அவர்களை ஏமாற்ற மாட்டேன். சென்னையை பொருத்தவரை, தொடர் விடுமுறை காரணமாக, நிறைய பேர் வெளியூர் சென்றிருக்கலாம். அதனால், ஓட்டு சதவீதம், 15 - 25 சதவீதம் குறைந்திருக்கலாம். சட்டசபை இடைத்தேர்தல் முடிவுகள், அடுத்த மாதம், 23ம் தேதி தெரியும்; அதுவரை காத்திருக்கலாம்.

தமிழக சட்டசபைக்கு, 234 தொகுதிகளுக்கும், எப்போது தேர்தல் வந்தாலும், நிச்சயமாக எதிர்கொள்வேன். அரசியல் ஆர்வத்துடன் உள்ள, என் ரசிகர்களை ஏமாற்ற மாட்டேன். மீண்டும் மோடி, பிரத மர் ஆவாரா என்பது, மே, 23ம் தேதி தெரியும்.

மற்ற தேர்தல்களை விட, இந்த தேர்தலில் வன்முறை குறைவு தான். தேர்தல் ஆணையம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. பணப் பட்டுவாடா குறித்து, தேர்தல் ஆணையம் தான் பதிலளிக்க வேண்டும்.இவ்வாறு, ரஜினி கூறினார்.

'அடுத்த ஓட்டு ரஜினிக்கே!'


தமிழகத்தில், லோக்சபா தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு முடிந்த நிலையில், 'அடுத்த ஓட்டு ரஜினிக்கே' என்ற, 'ஹேஷ்டேகை' அவரது ஆதரவாளர்கள் உருவாக்கியுள்ளனர்.தற்போது, ரஜினி நடித்து வரும், 'தர்பார்' உட்பட, கூடுத லாக, ஒரு படத்தை நடித்து முடிக்க திட்டமிட்டு உள்ளார். 2021 சட்டசபை தேர்தலுக்குள், கட்சி பெயர் மற்றும் சின்னத்தை அறிவித்து, அரசியல் களத்தில் இறங்க உள்ளார்.

இந்நிலையில், ரஜினி ஆதரவாளர்கள், 'அடுத்த ஓட்டு ரஜினிக்கே' என்ற, ஹேஷ்டேகை, 'டுவிட்டரில்' உருவாக்கி, அதை, இந்திய அள வில் முன்னிலைப்படுத்தி உள்ளனர். அதில், 'அடுத்த ஓட்டு தலைவருக்குத் தான்' எனக் கூறி, ரஜினி படத்துடன் பகிர்ந்து வருகின்றனர். '2021ம் ஆண்டுக்காக காத்திருக்கிறோம்' என, அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில், 'ரீ-டுவிட்' செய்து வருகின்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (72)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - Trichy,இந்தியா
22-ஏப்-201910:33:33 IST Report Abuse

Tamilஅட பதறுகளா? ரஜினி அரசியலுக்கு சரி பட்டு வர மாட்டார். அவரது வயதும் ஓத்துழைக்காது. அது அவருக்கு நன்றாகவே தெரியும். படம் ஓடுவதற்காக அப்போப்போ அரசியல் பூச்சாண்டி காட்டி கொண்டிருப்பார். பொய் புள்ள குட்டிங்களா படிக்கச் வைங்கப்பா.

Rate this:
Vasanth - Chennai,இந்தியா
22-ஏப்-201916:44:42 IST Report Abuse

Vasanthஅது எப்படி ஒருவரை நேரில் கூட பார்க்காமல் .... சம்பளம் இவ்வளவு, வரி இவ்வளவு, பாக்கி இவ்வளவு, வீட்டின் மதிப்பு இவ்வளவு, இன்னும் இத்தனை கோடி சம்பாதிக்க திட்டமிட்டுள்ளார், இந்த நேரத்தில் இதைத்தான் நினைப்பார், இதைத்தான் நினைத்து பேசினார். எப்படி உங்களால் கூசாமல் இப்படி கூற முடிகின்றது? இது எல்லாமே youtube , twitter , facebook போன்றவற்றில் மற்றவர்களுடைய பதிவுதானே நீங்கள் இங்கு கூறுகின்றீர்கள். அந்த பதிவே வேறு எவரோ கூறியதை கேள்விப்பட்டு போடப்பட்டதுதானே. முதலில் உங்கள் வாழ்க்கை பற்றி கவலை படுங்கள். மற்றவர்களின் கவலை உங்களுக்கு வேண்டாம். ரஜினி ரசிகர்களை விட அவருக்கு எதிராக கருத்து போடுபவர்கள்தான் அவரைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களை ரஜினியின் அடிமைகள் என கூறுவது தப்பே இல்லை. ...

Rate this:
ashokperumal - puducherry,இந்தியா
22-ஏப்-201906:48:47 IST Report Abuse

ashokperumalரசிகர்களுக்காக வருவியா

Rate this:
Vasanth - Chennai,இந்தியா
20-ஏப்-201923:56:46 IST Report Abuse

Vasanthஇங்கு எத்தனை எத்தனை பேர் ரஜினியின் அரசியல் வரவிற்காக காத்துக்கொண்டிருக்கிறார்கள். ரஜினி ரசிகர்களை விட, அவருக்கு எதிராக கருத்து போடுபவர்கள்தான் அதிகம் அவரை நினைக்கிறார்கள், எதிர்பார்க்கிறார்கள். மிகவும் சந்தோஷமாக உள்ளது. ரஜினி ரசிகர்கள் கண்ணியமும், நல்ல எண்ணங்களையும் உடையவர்கள். சட்டசபை தேர்தல் 2021'ல் வந்தாலும் அல்லது அதற்கு முன் வரும் சூழல் வந்தாலும் அவர் உடனே களமிறங்க தயாராக உள்ளார். அதுவரை அவர் தொழிலை ஓய்வின்றி செய்கிறார். ரஜினி ரசிகர்களும் என்றும் தன் பெற்றோர்கள், குடும்பத்தை கவனித்து நல்ல விஷயங்களை மட்டுமே உறுதியுடன் செய்வோம்...

Rate this:
மேலும் 68 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X