அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
'போக்கு காட்டிய' அ.தி.மு.க.,வினர்
புகார் அளிக்க கூட்டணி கட்சிகள் திட்டம்

லோக்சபா தேர்தல் பணியில் சரிவர ஈடுபடாத நிர்வாகிகளின் பட்டியலை, அ.தி.மு.க., தலைமையிடம் வழங்க, கூட்டணி கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

அ.தி.மு.க., கூட்டணி கட்சிகள், திட்டம்


லோக்சபா மற்றும் 18 சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கு, அ.தி.மு.க., தலைமை யிலான கூட்டணியில், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - த.மா.கா., - புதிய தமிழகம், புதிய நீதி கட்சி உள்ளிட்டவை இடம்பெற்றன.

தேர்தல் ரத்துபண பட்டுவாடா புகாரால், வேலுார் லோக்சபா தொகுதியில் மட்டும், தேர்தல் ரத்தானது. மற்ற அனைத்து தொகுதிகளுக்கும், 18ம் தேதி, ஓட்டுப்பதிவு நடந்தது. மே, 23ல், எண்ணிக்கை நடக்கிறது.

இந்நிலையில், மே, 19ல் நடக்கும், நான்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் குறித்து ஆலோசிக்க, கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற் கும் கூட்டத்தை, அடுத்த வாரம், சென்னையில் நடத்த, அ.தி.மு.க., திட்டமிட்டுஉள்ளது.

தவிடுபொடியானது



இது குறித்து, பா.ம.க., நிர்வாகி ஒருவர் கூறிய தாவது:ஜெயலலிதா இல்லாததால், எளிதில் வெற்றி என்ற கனவில் இருந்த, தி.மு.க.,வின் திட்டம், அ.தி.மு.க., அமைத்த மெகா கூட்டணியால், தவிடுபொடியானது. இதனால், தேர்தல் முடிவு, இரு கூட்டணிக்கும் சமமாக இருக்கும் என்ற தகவல் வருவதால், யாருக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என, மக்கள் மட்டுமின்றி, கட்சியினரே குழப்பத்தில் உள்ளனர்.

இந்நிலையில், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலுார், ஒட்டப்பிடாரம் ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ல், இடைத்தேர்தல் நடக்கிறது. தலைவர்கள் திட்டம்இந்த தேர்தலிலும், அ.தி.மு.க.,வுக்கு, கூட்டணி கட்சிகள் ஆதரவு

Advertisement

தெரிவித்துள்ளன. இதனால், அக்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தை, அடுத்த வாரம் நடத்த, அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது.

அப்போது, முதல்வர், இ.பி.எஸ்., துணை முதல் வர் பன்னீர்செல்வத்திடம், லோக்சபா தேர்தல் பணியில் சரியாக ஈடுபடாத, அ.தி. மு.க., மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏ.,க்களின் பட்டியலை வழங்க, கூட்டணி கட்சி தலைவர்கள் திட்டமிட்டு உள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201917:08:05 IST Report Abuse

sankarPollachi சம்பவத்தை அப்புறம் பார்க்கலாம் முதலில் அதிமுக ஜெயிக்கட்டும் என்று சொந்த பந்தாக்களுக்கு சொல்லி ஒட்டு வாங்கி இருக்கிறார்கள் . கொங்கு பெல்டல் திமுகவுக்கு சங்கு தான் . பொள்ளாச்சி வேண்டுமானால் இழுபறி வரலாம் மத எல்லா கொங்குதொகுதியிலும் அதிமுக ஜெயிக்கும் Coimbatore பிஜேபி ஜெயிக்கும். நீலகிரி ராசா பணத்தை இறைத்திருக்கிறார் . தூத்துக்குடியில் கனிமொழி பணத்தை இறைத்திருக்கிறார்

Rate this:
வந்தியதேவன் - காஞ்சிபுரம்,இந்தியா
20-ஏப்-201920:31:07 IST Report Abuse

வந்தியதேவன்////கொங்கு பெல்டல் திமுகவுக்கு சங்கு தான் .//// அண்ணாத்தே... சங்கு யாருக்கு என்பதும்... சடங்கு யாருக்கு என்பதையும்... அடுத்த மாதம் இருபத்திமூன்றாம் தேதி காலை தெரியுமுங்கோ...? நீங்க பழைய நினைப்புலயே இருக்கீங்க...? அது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருந்த காலம்... அது அ.தி.மு.க.வின் பொற்காலம்.... இப்ப அ.தி.மு.க.வின் கற்காலம்...முங்கோ... சங்கு யாருக்கு என்பதை உணர்வீர்கள்...? ...

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஏப்-201916:28:44 IST Report Abuse

Natarajan Ramanathanதீயமுக அழிய வேண்டும் என்ற ஒரே புனித நோக்கத்திற்காக இந்தமுறை பிஜேபியின் கூட்டணி கட்சிக்கு எங்கள் குடும்பத்தில் அனைவரும் மொத்தமாக ஓட்டளித்தோம்.

Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
20-ஏப்-201915:59:47 IST Report Abuse

Mani . Vஇந்தியா, ஏலம் ஒரு தரம்........ ரெண்டு தரம்......... மூணு தரம்....... (அப்பாடா நாம் எல்லோரும் சேர்ந்து நல்ல விலைக்கு விற்றுவிட்டோம்).

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X