பொது செய்தி

தமிழ்நாடு

பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர்: கருணை மனங்கள் உருக்கம்

Added : ஏப் 19, 2019
Advertisement
 பறவைகளின் தாகம் தீர்க்க தண்ணீர்: கருணை மனங்கள் உருக்கம்

திருப்பூர்:தண்ணீர் தேடி அலையும் பறவைகளை காப்பாற்ற மரங்களின் கிளைகள், வீட்டு மாடிகளில் தேங்காய் சிரட்டையில் தண்ணீர் வைத்து பாதுகாக்கும் முயற்சியில் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் நகரில், மார்ச் மாதம் துவக்கத்தில் இருந்தே அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் அளவுக்கு கோடை வெயில் கொளுத்தி வருகிறது.
வெயிலின் தாக்கத்தால் நகர மக்கள் பகல் நேரங்களில் வீடுகளை விட்டு வெளியில் வர தயங்குகின்றனர். உஷ்ணத்தை தவிர்ப்பதற்காக குளிர்பானம், இளநீர் கடைகளை மக்கள் நாடி செல்கின்றனர். இது ஒருபுறமிருக்க, சிட்டுக்குருவிகள் மற்றும் காகம் உள்ளிட்ட பறவையினங்கள் கோடை வெயிலால் தண்ணீரை தேடி அலைகின்றன.இதனால், தாகத்தில் பறந்து செல்லும் பறவைகளின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தன்னார்வலர்கள் பல்வேறு முயற்சியில் ஈடுபட்ட வருகின்றனர். ஆங்காங்கே உள்ள மரங்களில் உள்ள கிளைகளில் மண் கலசம் மற்றும் தேங்காய் சிரட்டை வைத்து தண்ணீர் நிரப்பி வருவதுடன், தானியங்களை உணவுக்காக வைக்கின்றனர்.
தண்ணீர் இருப்பதை அறிந்து ஏராளமான பறவைகள், இந்த தண்ணீரை பருகி தாகம் தீர்ந்த நிலையில் திரும்பி செல்கின்றன. தன்னார்வலர்களின் இந்த முயற்சிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தும் வருகின்றனர்.தன்னார்வலர்கள் கூறுகையில், 'கோடை வெயில் தகிக்கத் தொடங்கிய சூழலில், பறவைகளுக்கான நீராதாரங்கள் அனைத்தும் வறண்டு விட்டன. மனிதர்கள் மட்டுமின்றி விலங்குகளும் உடலில் நீர் வறட்சியால் அவதிப்படுகின்றன. அதனால், மண்பானை, சிரட்டை உள்ளிட்டவைகளை பயன்படுத்தி, தண்ணீர் வைக்கப்படுகிறது,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X