சம்பவம் செய்தி

தமிழ்நாடு

திவாரி மகன் கொலையா? போலீசார் விசாரணை

Added : ஏப் 19, 2019
Advertisement
திவாரி, மகன், கொலையா?, போலீசார், விசாரணை

புதுடில்லி, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர், மறைந்த, என்.டி.திவாரியின் மகன், ரோஹித் சேகர் திவாரியின் மர்ம மரணம் குறித்து, டில்லி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரோஹித் சேகர் திவாரி, ஐந்து ஆண்டு களாக போராடி, மரபணு சோதனையில், திவாரி தன் தந்தை என, நிருபித்தவர். உத்தரகண்டில் வசித்து வந்த இவர், காங்கிரசில் சேருவதற்காக, சில தினங்களுக்கு முன், டில்லிக்கு வந்துள்ளார்.
இந்நிலையில், அவர் இரு தினங்களுக்குமுன், உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லும்போது மரணம்அடைந்தார்.ஆனால், அவர், மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டபோது, ஏற்கனவே இறந்து இருந்தார், என, அவரை அழைத்து வர ஆம்புலன்ஸ் அனுப்பிய, மேக்ஸ் மருத்துவமனை, அறிக்கைவழங்கியுள்ளது.
இதையடுத்து, ரோஹித் சேகர் திவாரியின் மர்ம மரணம் குறித்து, டில்லி குற்றப்பிரிவு போலீசார், வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின், ரோஹித் சேகர் திவாரியின் மரணம் இயற்கையாக நிகழ்ந்ததா, கொலையா அல்லது தற்கொலையா என்பது தெரியவரும் என, போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X