அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
உச்ச வரம்பை உதறிய வேட்பாளர்கள்
தேர்தலில் 50 மடங்கு அதிக செலவு

திருப்பூர்: லோக்சபா தேர்தலில், தமிழகத்தில் அரசியல் கட்சி வேட்பாளர்கள் சராசரியாக, தேர்தல் கமிஷன் அளித்த உச்சவரம்பை காட்டிலும், 50 மடங்கு அதிகமாக செலவு செய்துள்ளனர்.

உச்ச வரம்பு, வேட்பாளர்கள், தேர்தல், அதிக செலவு



லோக்சபா தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர், 70 லட்சம் ரூபாய் வரையிலும், சட்டசபை தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர், 28 லட்சம் ரூபாய் வரையிலும் செலவு செய்யலாம் என, தேர்தல் கமிஷன், உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது.

தமிழக தேர்தல் களத்தில் நிஜத்தில் என்ன நடந்தது என்று சாமானியர்களுக்கு நன்றாகவே தெரியும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீட்டுக்கும், பிரசாரம் ஓய்வதற்கான தேதிக்கும் இடையில், 15 நாள் இடைவெளி இருந்ததாக கணக்கில் கொண்டால், பிரதான கட்சி வேட்பாளர்கள் குறைந்தபட்சம் தினமும், இரண்டு கோடி ரூபாயாவது செலவு செய்தாக வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அப்போது

தான், அது முழுமையான தேர்தல் பிரசாரமாக அமைந்திருக்கும்.இல்லாவிட்டால், கட்சி தொண்டர்கள் முதல், கூட்டங்களுக்கு அழைத்து வரப்படும் நபர்கள் வரை, யாரையும் அரசியல் கட்சி வேட்பாளர்களால் திருப்திப்படுத்த முடியாது என்பதே நிலை.


சாதாரண தெருமுனை கூட்டங்களுக்கு அழைத்து வரவே, ஒருவருக்கு,குறைந்தபட்சம், 200 ரூபாய் தர வேண்டியிருக்கிறது. ஒரு லோக்சபா தொகுதிக்கு, சராசரியாக 1,500 ஓட்டுச்சாவடிகள். ஓட்டுப்பதிவு நாளில், ஒரு சாவடிக்கு, 20 ஆயிரம் ரூபாய் செலவு என்றால் கூட, மூன்று கோடி ரூபாயை தாண்டி விடும். அப்படியிருந்தும், ஓட்டுச்சாவடி முகவர்கள் மற்றும் கட்சியினரை, அந்த வேட்பாளரால் திருப்தி கொள்ளச் செய்வது என்பது கடினமே.

இதனால்தான், பெரிய கட்சிகள், பணத்தைத் தண்ணீராக வாரியிறைக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்கின்றன. மேலும், கட்சிகளும் செலவுக்கென பெருந்தொகையை ஒதுக்குகின்றன.
இந்த முறை தமிழகத்தில் ஒரு ஓட்டின் விலை, 300 ரூபாய் முதல் 5,000 வரைவிலை போயுள்ளது. தேசிய கட்சிகளைக் காட்டிலும், அ.தி.மு.க., ---- தி.மு.க., -- அ.ம.மு.க., போன்ற கட்சிகள்தான், ஓட்டுக்கு அதிக விலை கொடுத்துள்ளன. இந்தச் செலவையும் கணக்கில் கொண்டால், வேட்பாளரின் கணக்கு எகிறிவிடும்.

தேர்தல் செலவு கணக்கை, தேர்தல் கமிஷன்

Advertisement

கண்காணிக்கிறது. இது நேர்மையானதாக இருந்தால், ஒரு எம்.பி., கூட விதிமுறை மீறாதவராக இருப்பாரா என்பது சந்தேகமே. வாக்காளர்களுக்கு பணம் கொடுக்காமல், செலவு செய்தால் கூட, ஒரு லோக்சபா தொகுதிக்கு குறைந்தபட்சம் ஒரு வேட்பாளர், ரூ.30 கோடியாவது செலவு செய்திருக்க வேண்டும்.

தமிழகத்தில் லோக்சபா தேர்தலில் தொகுதிக்கு, 100 கோடி ரூபாய் மற்றும் அதைத் தாண்டி செலவு செய்துள்ள வேட்பாளர்கள் பலர். சராசரியாக பார்த்தால், தேர்தல் கமிஷன் அளித்த உச்சவரம்பை மீறி, அரசியல் கட்சி களின் வேட்பாளர்கள், 50 மடங்கு அதிக செலவு செய்திருக்கின்றனர்.பணத்தை வாரியிறைப் பதை பார்த்துவிட்டு, வேட்பாளர்களுக்கு உச்சவரம்பு என்று தேர்தல் கமிஷன் நிர்ணயிப்பது, எவ்வளவு பெரிய போலித்தனம்!


Advertisement

வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mindum vasantham - madurai,இந்தியா
20-ஏப்-201910:29:38 IST Report Abuse

mindum vasanthamபல தொகுதில 300 ரூபா தான் கொடுத்திருக்காங்க ராஜா , தமிழிசை கம்யூனிஸ்ட் வேட்பாளர் செலவு செய்யவில்லை

Rate this:
blocked user - blocked,மயோட்
20-ஏப்-201908:34:17 IST Report Abuse

blocked userசெலவு செய்தது உறுதி செய்யப்பட்டால் - இவர்களை அடுத்த முறை தேர்தலில் போட்டியிட அனுமதிக்கக்கூடாது...

Rate this:
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201908:28:33 IST Report Abuse

Srinivasan Kannaiyaஇதுவும் மீன் வியாபாரமதான்... கொஞ்சம் கூடமாட ஆகும்

Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X