பதிவு செய்த நாள் :
தேர்தல் பிரசார களத்தில் பாடல்கள்
பா.ஜ.,வுக்கு பார்வையாளர்கள் அதிகம்

லோக்சபா தேர்தலில் வெற்றி பெறுவதற்கு, அரசியல் கட்சிகள், 'யூ டியூப்' சமூக வலைதளத்தில், பாடல்களை பதிவேற்றம் செய்கின்றன. இதில், பா.ஜ., பாடல்களை அதிகபட்சமாக, ஒரு கோடி பேர் பார்த்துள்ளனர்.

தேர்தல், பிரசார களம், பாடல்கள், பா.ஜ.,  பார்வையாளர்கள், அதிகம்



லோக்சபா தேர்தலில், ஒவ்வொரு கட்சியும், ஒவ்வொரு விதமான பிரசார யுக்திகளை பயன்படுத்துகின்றன.பா.ஜ., சார்பில், 'சலோ பிர் ஏக் பார் மோடி சர்கார் பனாதே ஹே' என்ற ஹிந்தி பாடல் வெளியிடப்பட்டுள்ளது. 'வாருங்கள், மீண்டும் ஒரு முறை மோடி அரசை உருவாக்குவோம்' என்ற பொருளில் உள்ள, இந்த பாடலை, பா.ஜ.,வின், யூ டியூப் பக்கத்தில், 35 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.


அதேநேரம், பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., ஆதரவாளரான, லட்சுமி துபே என்ற, 29 வயது பெண் பாடகி, மோடி ஆதரவு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பாடல், பா.ஜ.,வின்

அதிகாரப்பூர்வ பாடலை விட அதிக வரவேற்பை பெற்றுள்ளது.'மீண்டும் மோடியை கொண்டு வர வேண்டும்' என்ற பொருளில் உள்ள,ஹிந்தி பாடலை, 40 லட்சத்திற் கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர். இந்த பாடல், ஹிந்துத்வா ஆதர வாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

காங்கிரஸ் சார்பில், பிரபல பாலிவுட் பாடல் ஆசிரியர், ஜாவித் அக்தர் எழுதிய பாடல், யூடியூபில் வெளியிடப்பட்டுள்ளது. 'அப் ஹோகா நியாய்' என்ற ஹிந்தி ஸ்லோகனில்,'இப்போது நியாயம் கிடைக்கும்' என்ற பொருளில் பாடல் உள்ளது. 'நானும் இந்தியன் தான்' என்ற பொருளில், 'மே ஹி தோ ஹிந்துஸ்தான் ஹூன்' தலைப்பில் வரும், இந்த பாடலை, ஒரு லட்சத்துக்கும் குறைவானோர் தான் பார்த்துள்ளனர்.

ஆந்திராவில், தேர்தல் முடிந்தாலும், ஜெகன் மோகனின், 'ஜெகன் வருகிறார்... நமக்கு ஜெகன் வேண்டும்' என்ற பொருள்படும், 'ரவாலி ஜெகன்... கவாலி ஜெகன்' என்ற பாடல், யூடியூபை கலக்கிக் கொண்டிருக்கிறது.


பீஹாரில், அரசியல் கட்சிகளை கலங்க அடித்து வரும், கம்யூ., வேட்பாளரும், டில்லி, ஜே.என்.யூ., மாணவர் சங்க முன்னாள் தலைவருமான, கன்ஹையா குமாரின் பிரசார பாடல்கள், இளைஞர் களிடம் துாள் பறக்கிறது.'கன்ஹையா குமார்

Advertisement

வருகிறார் ஒவ்வொருவருக்கும் செங்கொடியின் சலாம்' என்ற பொருளில், 'ஆயா ரே, ஆயா ரே, ஆயா ரே, கன்ஹையா குமார்... ஹர் மன் லால் சலாம்' என்ற பாடல், பீஹார்இளைஞர்களை வசீகரிக்கிறது.

மத்திய பிரதேசத்தில், காங்கிரஸ் முதல்வர், கமல்நாத் தனியாக பிரசார பாடல் வெளியிட்டு உள்ளார். தேசத்தின் இதயப்பகுதி யில் இருந்து, டில்லி வரை என்ற, 'தேஷ் கே தில் ஸே தில்லி தக்' என்ற பாடல் அங்குள்ள காங்கிரசாரிடம் பிரபலமாகியுள்ளது.இதேபோல, உ.பி.,யில் அகிலேஷ் யாதவ்; காஷ்மீரில் உமர் அப்துல்லா; குஜராத்தில் அமித்ஷா என, பலருக்கும் தேர்தல் பிரசார பாடல்கள் வெளியிடப்பட்டு உள்ளன; அவை, பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஏப்-201916:08:05 IST Report Abuse

Natarajan Ramanathanஅனைத்து கட்சி பிரசார பாடல்களையும் கேட்டேன். பிஜேபி மற்றும் ஜெகன் பாடல்கள் இரண்டும் நன்றாக இருக்கிறது. மற்றவை சுமார். காங்கிரஸ் பாடல் மட்டும் ஏன் இவ்வளவு மோசமாக இருக்கிறது?

Rate this:
blocked user - blocked,மயோட்
20-ஏப்-201908:30:18 IST Report Abuse

blocked userதைரியமான முடிவுகளை எடுக்கவேண்டும் என்றால் பாஜக... சொதப்பவேண்டும் என்றால் காங்கிரஸ்... தினமும் குஸ்தி என்றால் மூன்றாவது அணி...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X