பொது செய்தி

இந்தியா

அவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (4)
Advertisement
அவசர கால உதவி எண் 112 : இணைந்தன 20 மாநிலங்கள்

புதுடில்லி, அவசர கால உதவிக்கு, நாடு முழுவதும் ஒரே எண்ணை அழைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 20 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், இதில் இணைந்துள்ளன.தற்போது, நம் நாட்டில், அவசர காலங்களில் போலீஸ் உதவியை நாடுவதற்கு, 100, தீயணைப்பு துறைக்கு, 101 என, தனித்தனி தொலைபேசி எண்கள் உள்ளன.
ஆனால், அமெரிக்கா போன்ற நாடுகளில், அனைத்து வகையான அவசர உதவிகளுக்கும், ஒரே எண் தான் அமலில் உள்ளது. வெளிநாடுகளைப் போல, நம் நாட்டிலும், அனைத்து அவசர கால உதவிகளுக்கும், ஒரே எண்ணை அழைக்கும் திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்படி, 112 என்ற ஒரே எண்ணை, அனைத்து அவசர உதவிகளுக்கும் பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.




ஆனால், அனைத்து மாநிலங்களிலும், இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள் எழுந்தன.முதல் கட்டமாக, ஹிமாச்சல், ஆந்திரா, உத்தரகண்ட், பஞ்சாப், கேரளா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உ.பி., தெலுங்கானா, தமிழகம், குஜராத், ஜம்மு - காஷ்மீர், நாகாலாந்து உள்ளிட்ட, 20 மாநிலங்கள், இந்ததிட்டத்தில் இணைந்து உள்ளன.அதேபோல், புதுச்சேரி உள்ளிட்ட யூனியன் பிரதேசங்களும், இந்த திட்டத் தில் இணைந்துள்ளன.இது குறித்து, மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:அவசர கால உதவிக்கு, சர்வதேச நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட எண், 112. அதனால், இந்த திட்டத்தை, நம் நாட்டிலும் நடைமுறைப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.மொபைல் போன்களில், 112 என்ற எண் உள்ள, தனி, 'பட்டன்' வசதியை ஏற்படுத்தும்படி, சம்பந்தப்பட்ட மொபைல் நிறுவனங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் போன்களில் உள்ள, ஜி.பி.எஸ்., வசதி மூலம், அவசர கால அழைப்பு, எந்த இடத்திலிருந்து வருகிறது என்பதையும் அறிந்து கொள்ள முடியும்.சாதாரண மொபைல் போன்கள் வைத்திருப்போர், 5 அல்லது 6 ஆகிய எண்களை, தொடர்ந்து அழுத்துவதன் மூலம்,அவசர கால உதவியை பெற முடியும். மேலும், ஸ்மார்ட் போன்கள் பயன்படுத்துவோர், இதற்கான பிரத்யேக, 'ஆப்' எனப்படும் செயலியையும் பதிவிறக்கம் செய்ய முடியும்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chandkec - singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201903:34:49 IST Report Abuse
chandkec உலக நாடுகளை போல மற்ற வசதிகளை முதலில் செய்ய பாருங்கள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201907:57:33 IST Report Abuse
Srinivasan Kannaiya அதே சமயம் வாகணம் , போன், ஆள்கள் எல்லாமே நல்ல தகுதியுடன் இருக்கவேண்டும்... முக்கியமாக பெட்ரோல்/டீசல் போட காசு கொடுக்கோணும்
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
20-ஏப்-201907:55:48 IST Report Abuse
Srinivasan Kannaiya 112. யை கூப்பிட்டால் 111. போடமாட்டீங்களே
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X