சம்பவம் செய்தி

தமிழ்நாடு

சேலத்தில் 60 பேரை கடித்து குதறிய வெறிநாய்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (16)
Advertisement
 சேலத்தில் 60 பேரை கடித்து குதறிய வெறிநாய்

சேலம்: சேலம், குகை, புலிக்குத்தி தெருவில், இரு நாட்களுக்கு முன், வெறிநாய்க் கடியால், ஏழு பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று காலை, 6:15 மணிக்கு, களரம்பட்டி, கிச்சிப்பாளையம், பச்சப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில், ஒரு வெறிநாய், 60 பேரை, அடுத்தடுத்து விரட்டிச் சென்று கடித்துக் குதறியது.

பாதிக்கப்பட்டவர்கள், அரசு மருத்துவமனைக்குச் சென்றனர். ஒரே நேரத்தில், அதிகளவில் அவர்கள் வந்ததால், மருத்துவர்களால், உரிய நேரத்தில் சிகிச்சையளிக்க முடியவில்லை. இதனால், பாதிக்கப்பட்டவர்கள், மணிக்கணக்கில் காத்திருந்து, சிகிச்சை பெற்றனர்.ஆனால், உயர்ரக, 'ரிக்' ஊசிமருந்து இல்லாததால், கடிக்கு ஆளானவர்களை, மூன்று நிலையாக பிரித்து, சாதாரண நாய்க்கடிக்கு பயன்படும், 'ரேபி பியூர்' ஊசி மருந்து போட்டு, நிலைமையை சமாளித்தனர்.

இந்நிலையில், சில இளைஞர்கள், வெறி பிடித்த கறுப்புநிற நாயைத் தேடி கண்டுபிடித்து, அடித்தே கொன்றனர். சத்தியமூர்த்தி நகரில், இறந்துக் கிடந்த நாயை, அப்புறப்படுத்த வந்த மாநகராட்சி வாகனத்தை, மக்கள் சிறைபிடித்து, ஊழியர்களிடம் வாக்குவாதம் செய்தனர்.

மக்கள் கூறுகையில், 'வெறிநாய்களை பிடிக்க, மாநகராட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிகளவில் பாதிப்பது குழந்தைகள் தான். இனியாவது, தெரு நாய்களை பிடிக்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
20-ஏப்-201910:45:00 IST Report Abuse
ஆப்பு எங்கே போனாங்க விலங்கு ஆர்வலர்கள்.... அப்புறம், நாய்கள் காலபைரவரின் வாகனம்...அவற்றை ஒண்ணும் பண்ணாதீங்க...கண்ணக் குத்திருவாரு.
Rate this:
Share this comment
Chowkidar NandaIndia - Vadodara,இந்தியா
20-ஏப்-201912:44:40 IST Report Abuse
Chowkidar NandaIndiaபக்ரீத் பண்டிகை அன்று ஆட்டை கொன்று தின்னாவிடில் சாமிக்குற்றம் ஆகிவிடும், நடுரோட்டில் ஒட்டகத்தை வெட்டி தின்னாவிடில் தெய்வம் கோபித்துக்கொள்ளும் என்று சொல்பவர்கள் மிகவும் நல்லவர்கள் தானே....
Rate this:
Share this comment
Pannadai Pandian - wuxi,சீனா
20-ஏப்-201919:36:23 IST Report Abuse
Pannadai Pandian...
Rate this:
Share this comment
Cancel
Manikandan Sivalingam - delhi,இந்தியா
20-ஏப்-201910:02:51 IST Report Abuse
Manikandan Sivalingam
Rate this:
Share this comment
Cancel
Pa.Arumugam - Fremont,யூ.எஸ்.ஏ
20-ஏப்-201909:38:08 IST Report Abuse
Pa.Arumugam எல்லாம் சரிதாங்க ..ஆனால் மாநகராட்சி ஊழியர்கள் நாய்களைப் பிடிக்கவந்தால் ப்ளூ-கிராஸ் நண்பர்கள் ஊழியர்கள் மீதே குற்றம் சுமத்துகிறார்கள் ..என்னதான் செய்வது ? அவனவன் பாதிக்கப்படும் போதுதான் கஷ்டம் தெரிகிறது.. கடுமையான கிரிமினல் கொலைகாரர்களை காவல்துறையினர் தங்கள் உயிரைப் பணயம் வைத்து என்-கௌண்ட்டர் செய்தால் மனிதஉரிமை ஆணையம் வந்து மனிதஉரிமைகள் பற்றி ஆதங்கப்படுகிறது..அரசு என்ன செய்யமுடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X