எக்ஸ்குளுசிவ் செய்தி

இந்தியா

பதிவு செய்த நாள் :
சாதனை நாயகன்!
தேர்தல் சாதனை நாயகன் சேஷன்!

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா என கூறப்படும், இந்திய லோக்சபா தேர்தல் திருவிழா, இரண்டாம் கட்டத்தை தாண்டி உள்ளது; இன்னும், ஐந்து கட்ட தேர்தல் பாக்கி உள்ளது.

 தேர்தல் ,சாதனை, நாயகன், சேஷன்!

தேர்தல் முடிந்த மாநிலங்களில், எப்போது, 'ரிசல்ட்' வரும் என, மக்கள் காத்திருக்கின்றனர்.
தேர்தல் நடக்க வேண்டிய இடங்களில்,எப்போது ஓட்டுப்பதிவு நாள் வரும் என,மக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.

இந்நிலையில், தேர்தல் என்றாலே கலவரம், வன்முறை, குடிகாரர்கள் தொல்லை, வழிப்பறி என்ற நிலையை மாற்றி, தேர்தலை திருவிழா போன்று கொண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் இருப்பவர், முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர், டி.என்.சேஷன். சென்னை அருகே உள்ள, குருகுலத்தின் முதியோர் இல்லத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கும் சேஷன், மக்களின் மகிழ்ச்சியான தேர்தல் திருவிழாவை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறார்.


கடந்த, 1955ம் ஆண்டு, இந்திய சிவில் சர்வீசஸ் தேர்வில், நாட்டிலேயே முதல் தேர்வராக

வெற்றி பெற்ற, சேஷன், பல பதவிகளை நிறைவு செய்து, தேர்தல் ஆணையத்தின் உயரிய பதவியை அடைந்தார்.இவர், கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். அங்கே சொந்த வீடு, சொத்துகள் இருந்தாலும், சென்னையில், 'செட்டில்' ஆகி விட்டார்.


கோவை, திண்டுக்கல் மாவட்ட உதவி கலெக்டர், மதுரை மாவட்ட கலெக்டர், போக்குவரத்து துறை இயக்குனர், தமிழக வேளாண், தொழில் துறை செயலர், பாதுகாப்பு துறை செயலர், அமைச்சரவை செயலர் என, பல பதவிகளை வகித்தவர்.இவரது நேர்மைக்கு கிடைத்த பாராட்டாக, முன்னாள் பிரதமர், சந்திரசேகர் காலத்தில், 1990ல், தேர்தல் ஆணையராக நியமிக்கப்பட்டார்.


அப்போது, ராஜிவ் கொலை உள்ளிட்ட, பல முக்கிய விவகாரங்களும், அதையொட்டி அரசியல் மாற்றங்களும், பல தேர்தல்களும் அடுக்கடுக்காக வந்தன;அனைத்தையும் திறமையாக சமாளித்தவர்.சட்ட பிரிவுகளில் உள்ள தேர்தல் வழிமுறைகளை, அக்குவேறு, ஆணி வேராக பிரித்து போட்டார்.


தேர்தல் ஆணையத்துக்கு எல்லா அதிகாரமும் உண்டு என்பதை, நீதிமன்றம் வரை சென்று, உறுதிப் படுத்தி, இந்திய தேர்தல் முறையை உலகமே திரும்பி பார்க்க வைத்தவர்.தேர்தல் பிரசாரத்துக்கு குறிப்பிட்டநேரம் ஒதுக்கீடு,பிரசாரம் செய்வோருக்கு அனுமதி கடிதம், வேட்பாளர் மற்றும் கட்சி தலைவர்களுடன் செல்ல வாகன கட்டுப்பாடு, சுவர் விளம்பர தடை, கட் - அவுட்டுக்கு தடை.திருமண நிகழ்ச்சிகளில் ஓட்டுக்கு பணம் கொடுக்க தடை, தெருக்களில் ஒலி பெருக்கி கட்டி பொதுமக்களுக்கு இடையூறு செய்ய தடை, சாலைகளில் அரசியல்

Advertisement

பேரணி நடத்திபிரசாரம் செய்ய தடைஎன, அடுக்கடுக்கான சட்டங்களை போட்டு, உலகையே திரும்பி பார்க்க வைத்தார்.

காங்கிரசை சேர்ந்த மூத்த தலைவர், உத்தர பிரதேச கவர்னர், மோதிலால் ஓரா, தன் மகன், மத்திய பிரதேச வேட்பாளராக நின்றபோது, அவருக்காக பிரசாரம் செய்தார். அப்போது, கவர்னர் பதவியை துஷ்பிரயோகம் செய்ததாக, ஓட்டுப்பதிவை தள்ளி வைத்து உத்தரவிட்டார் சேஷன்!

இதனால், மோதிலால் ஓரா பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.சேஷனை கண்டால், அரசியல் கட்சி தலைவர்களும் அதிரும் அளவுக்கு, கடும் சட்ட திட்டங்கள் கொண்டு வந்தார்.இதற்காக, பல்வேறு விமர்சனங்களை சந்தித்தாலும், ஜனநாயக கோட்டையில், சேஷன் என்ற சிங்கம் செய்த சாதனைகள், இந்திய தேர்தலை, இன்று இளைஞர்கள் கொண்டாடும் திருவிழாவாக மாற்றியிருக்கிறது என்பதே உண்மை!
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
21-ஏப்-201914:45:53 IST Report Abuse

Bhaskaranகாங்கிரஸ் சார்பில் குஜராத்தில் தேர்தலில் நின்று தோற்றதையும் சொல்லியிருக்கலாம்

Rate this:
vns - Delhi,இந்தியா
21-ஏப்-201900:44:54 IST Report Abuse

vnsசேஷனைப்போன்று மன உறுதியோடு அரசியல் வாதிகளை அடக்கி வைக்க அவரைப்போன்ற நாட்டு பற்றுள்ள, ஊழல் செய்ய முடியாத, 'மேன்மையான' மனிதர்களுக்கே முடியும். ஈ.வே.ரா., என்னும் கூட்டத்திற்கு நியாயம், நேர்மை, ஒழுக்கம், கண்ணியம் நாட்டுப்பற்று, சுய ஒழுக்கம் என்ன என்றால் தெரியாது

Rate this:
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201923:08:52 IST Report Abuse

Pugazh Vஅன்று தேர்தல் கமிஷனரை ஆட்சியாளர்கள் மதித்தனர். நெருக்கடி கொடுத்ததில்லை. இன்று? ஒருவரை தேடிப்பார்த்து தேர்தல் கமிஷனராக்குகிறார்கள். அவரும் ஆட்சியாளர்கள் சொல்படி நடக்கிறார்.

Rate this:
மேலும் 25 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X