பொது செய்தி

தமிழ்நாடு

72 ஆண்டுகளுக்கு பின் சாதித்துக்காட்டிய பள்ளி

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (7)
Advertisement

தொண்டாமுத்தூர்: தொண்டாமுத்துார் வட்டாரத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில் புதிய சாதனை படைத்துள்ளன.

பிளஸ் 2 தேர்வு முடிவு நேற்று வெளியானது. கடந்தாண்டை காட்டிலும், தேர்ச்சி விகிதம் குறைவு என்றாலும், கிராமப்புற அரசு பள்ளிகள் புதிய சாதனை படைத்துள்ளன. கடந்தாண்டு, 99 சதவீதம் பெற்றிருந்த, தொண்டாமுத்துார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இந்தாண்டு, 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது.

மத்வராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கடந்தாண்டு, 63 சதவீதமே தேர்ச்சி பெற்று மாவட்டத்தில் கடைசி இடத்தில் இருந்தது. ஆசிரியர்களின் தொடர் முயற்சியால் இந்தாண்டு, 100 சதவீத தேர்ச்சி அடைந்துள்ளது. ஆலாந்துறை அரசு மேல்நிலைப்பள்ளி, கடந்த மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக, 100 சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது.

தொண்டாமுத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, 1947 முதல் செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி, 100 சதவீத தேர்ச்சி பெற்றதில்லை. 72 ஆண்டுகளுக்கு பின், 100 சதவீத தேர்ச்சி பெற்றதால், ஆசிரியர்கள், மாணவர்கள் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
22-ஏப்-201906:03:22 IST Report Abuse
Bhaskaran இந்தப்பள்ளி ஆசிரியர்களுக்கு ரொக்கப்பரிசு கொடுத்து பாராட்ட வேண்டும் அதேநேரத்தில் தேர்ச்சிவிழுக்காடு குறைந்துள்ள பள்ளிகளின் வாத்தியாருக்கு மெமோ மற்றும் ஊதியம் cut செய்யவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
Dr. Suriya - Adis Ababa,எத்தியோப்பியா
20-ஏப்-201910:51:40 IST Report Abuse
Dr. Suriya மாணவர்களுக்கும் ஆசிரிய பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel
20-ஏப்-201909:12:39 IST Report Abuse
ருத்ரா ஆசிரியர்களுக்கும் பள்ளிக்கு பெருமை சேர்த்த கல்விச் சுடர்களுக்கும் வாழ்த்துக்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X