'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா?

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (13)
Advertisement
'ராம்பூர் ராணி'யாக மீண்டும் ஜெயப்ரதா?

நடிகை ஜெயப்ரதா, 58, தெலுங்கு, தமிழ், ஹிந்தி போன்ற பல மொழிகளில் நடித்திருந்தாலும், தமிழ் திரையுலகம் அவரை, எப்போதோ மறந்து விட்டது.

ஆனால், ஹிந்தி மொழி பேசும் வட்டாரங்களில், இப்போதும், 'ஹாட் டாபிக்' ஜெயப்ரதா தான்!உ.பி.,யின் ராம்பூர் தொகுதியில், 2004, 2009ம் ஆண்டுகளில், பா.ஜ.,வின் வேட்பாளராக களம் இறங்கி, முறையே, 35 மற்றும் 38 சதவீத ஓட்டுகளை பெற்று, எம்.பி.,யான போதும், அவர் விவாதப் பொருளாகவே விளங்கினார்.அதன் பிறகு, 2014 தேர்தலில், சமாஜ்வாதி முன்னாள் பொதுச் செயலர், அமர் சிங்கின், ராஷ்ட்ரிய லோக்தளத்தின் சார்பில், பிஜ்னோர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அப்போதும், 'இவருக்கு நல்லா வேணும்' என, வசை பாடப்பட்டார்.'நடிகை என்பதால், வேட்டையாடப்படுகிறேன்...' என, அவ்வப்போது அவர் புலம்பினாலும், அவருக்குள் இருக்கும், 'மாஸ்' தான், விவாதப் பொருளாக அவர் இருக்க காரணம்.அமர் சிங் கட்சி போணியாகாதால், மீண்டும், பா.ஜ.,வுக்கு தாவிய ஜெயப்ரதா, இப்போது, அக்கட்சி வேட்பாளராக, ராம்பூர் தொகுதியில் போட்டியிடுகிறார்.




உ.பி.,யில், முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள, 14 லோக்சபா தொகுதிகளில், ராம்பூரும் ஒன்று. இந்த பகுதி, முஸ்லிம் நவாப்களின் ஆதிக்கத்தில் இருந்தது. கலைப்பொருட்கள் தயாரிப்பிடம்; விதவிதமான உணவுப் பொருட்களின் தாயகம் என, பல விஷயங்கள் இந்த தொகுதிக்கு பெருமை சேர்க்கின்றன.'இந்த தேர்தலில், பா.ஜ.,வுக்கு வெற்றிக்கனியை பறித்துத் தருவேன்' என, உறுதியாக, தீவிரமாக பிரசாரம் செய்யும் ஜெயப்ரதாவை எதிர்த்து, சமாஜ்வாதி சார்பில், அசம் கான் போட்டியிடுகிறார்.வாயைத் திறந்தாலே சர்ச்சை தான் என்ற ரீதியில் பேசி வரும், மாநில முன்னாள் அமைச்சர், அசம் கான், கடுமையாக ஜெயப்ரதாவை விமர்சித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் அவர், ஜெயப்ரதாவின் உள்ளாடை குறித்து பேசியது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது;

தேர்தல் ஆணையம் அவருக்கு, வாய்ப்பூட்டு உத்தரவு போட்டது.காங்கிரஸ் சார்பில், முன்னாள், எம்.எல்.ஏ., சஞ்சய் கபூர் போட்டியிடுகிறார். எனினும், ராம்பூரில், ஜெயப்ரதாவுக்கும், அசம் கானுக்கும் தான் போட்டி என்ற நிலை காணப்படுகிறது.பா.ஜ.,வின் தற்போதைய, எம்.பி., டாக்டர் நைபால் சிங், மீண்டும் போட்டியிட, வாய்ப்பு கேட்டார்; கட்சி மேலிடம் மறுத்து விட்டது. 'மகனுக்காவது தாருங்கள்' என்றார். மறுத்த மேலிடம், ஜெயப்ரதாவை அறிவித்துள்ளது.

இதனால், அதிர்ச்சி அடைந்துள்ள, நைபால் சிங் ஆதரவாளர்கள், ஜெயப்ரதாவுக்கு எதிராக, உள்ளடி வேலையில் இறங்கியுள்ளனர். எனினும், மாநிலத்தை ஆளும், பா.ஜ., முதல்வர், யோகி ஆதித்யநாத், மத்தியில் ஆளும், பிரதமர் மோடியின் செல்வாக்கால், ஜெயப்ரதா எம்.பி., ஆகி விடுவார் என, அந்த தொகுதி மக்கள் நம்புகின்றனர். இங்கு, 23ல் ஓட்டுப்பதிவு!- கே.எஸ்.நாராயணன் -நமது சிறப்பு நிருபர்-

Advertisement


வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
20-ஏப்-201920:40:46 IST Report Abuse
Bhaskaran இன்னும் இந்தப்பாட்டிக்கு அரசியல் ஆசை எதுக்கு இவரை கட்சியில்சேர்த்த காவிக்கும் விவஸ்தயில்லை
Rate this:
Share this comment
Cancel
Siva Rama Krishnanan - Mayur Vihar,இந்தியா
20-ஏப்-201917:33:35 IST Report Abuse
Siva Rama Krishnanan வேற ஆளே இல்லையா
Rate this:
Share this comment
Cancel
தாண்டவக்கோன் - Kolhapur Circle, Belgaum,இந்தியா
20-ஏப்-201911:45:22 IST Report Abuse
தாண்டவக்கோன் //அவருக்குள் இருக்கும், 'மாஸ்' தான்// எந்த மாஸு?
Rate this:
Share this comment
V Venkatachalam - Chennai,இந்தியா
20-ஏப்-201916:45:04 IST Report Abuse
V Venkatachalam...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X