தவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (10)
Advertisement

புலந்த்ஷஹர்: உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷஹர் லோக்சபா தொகுதியில், நடந்த ஓட்டுப்பதிவின்போது, பகுஜன் சமாஜ் கட்சிக்கு பதில், தவறுதலாக, பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்ட நபர், தன் கைவிரலை தானே துண்டித்தார்.


உ.பி., மாநிலத்தில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே, எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், நேற்று முன்தினம், புலந்த்ஷஹர் தொகுதி உட்பட எட்டு லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. புலந்த்ஷஹர் தொகுதியில், பா.ஜ., சார்பில், முன்னாள், எம்.பி., போலா சிங்கும், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், யோகேஷ் வர்மாவும் போட்டியிட்டனர்.


பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு, ஓட்டு போட வந்த, பவன் குமார், 25, என்ற தலித் இளைஞர், பகுஜன் சமாஜ் கட்சியின், யானை சின்னத்துக்கு பதில், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை அழுத்திவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த, பவன் குமார், ஓட்டுச் சாவடியில் இருந்து வெளியில் வந்ததும், தன்னுடைய தவறுக்கு தண்டனையாக, வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலை, கத்தியால் துண்டித்தார். இந்த சம்பவம் குறித்த, 'வீடியோ'வை, பவன் குமார், சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
இந்தியன் kumar - chennai,இந்தியா
20-ஏப்-201917:51:30 IST Report Abuse
இந்தியன் kumar கை விரலை வெட்டி ellaa பத்ரிக்கையிலும் கால் பதித்து vittaar இந்த மூடன்
Rate this:
Share this comment
Cancel
skv - Bangalore,இந்தியா
20-ஏப்-201916:33:35 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> ஒன்னா நம்பர் கேனக்கிறுக்கன் கண்ணாபின்னானு திரியுறானுகளே
Rate this:
Share this comment
Cancel
20-ஏப்-201908:41:04 IST Report Abuse
சௌக்கிதார் வேலங்குடியான் விரல், கண், மூளை, உண் உடம்பு எல்லாமே தான் காரணம்.... அடேய் நீ இன்னும் உயிரோட இருக்கியே???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X