தவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்| Dinamalar

தவறுதலாக ஓட்டு போட்டதால் கைவிரலை துண்டித்த தொண்டர்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (10)

புலந்த்ஷஹர்: உத்தர பிரதேச மாநிலம், புலந்த்ஷஹர் லோக்சபா தொகுதியில், நடந்த ஓட்டுப்பதிவின்போது, பகுஜன் சமாஜ் கட்சிக்கு பதில், தவறுதலாக, பா.ஜ.,வுக்கு ஓட்டு போட்ட நபர், தன் கைவிரலை தானே துண்டித்தார்.






உ.பி., மாநிலத்தில், 80 லோக்சபா தொகுதிகள் உள்ளன. ஏற்கனவே, எட்டு தொகுதிகளுக்கு தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், நேற்று முன்தினம், புலந்த்ஷஹர் தொகுதி உட்பட எட்டு லோக்சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. புலந்த்ஷஹர் தொகுதியில், பா.ஜ., சார்பில், முன்னாள், எம்.பி., போலா சிங்கும், பகுஜன் சமாஜ் - சமாஜ்வாதி கூட்டணியில், யோகேஷ் வர்மாவும் போட்டியிட்டனர்.





பகுஜன் சமாஜ் வேட்பாளருக்கு, ஓட்டு போட வந்த, பவன் குமார், 25, என்ற தலித் இளைஞர், பகுஜன் சமாஜ் கட்சியின், யானை சின்னத்துக்கு பதில், பா.ஜ.,வின் தாமரை சின்னத்தை அழுத்திவிட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த, பவன் குமார், ஓட்டுச் சாவடியில் இருந்து வெளியில் வந்ததும், தன்னுடைய தவறுக்கு தண்டனையாக, வலது கையில் உள்ள ஆள்காட்டி விரலை, கத்தியால் துண்டித்தார். இந்த சம்பவம் குறித்த, 'வீடியோ'வை, பவன் குமார், சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X