அரசியல் செய்தி

தமிழ்நாடு

கிடப்பில் போடப்பட்ட மேம்பால ரயில் பாதை திட்டம்

Added : ஏப் 20, 2019
Advertisement

'ஆதம்பாக்கம் - பரங்கிமலை மேம்பால ரயில் பாதை கட்டுமான பணியை, விரைவாக முடிக்க வேண்டும்' என, வேளச்சேரி, திருவான்மியூர், பெருங்குடி பகுதி மக்கள் சார்பில், ரயில்வேக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.வேளச்சேரி - பரங்கிமலை இடையே, 495 கோடி ரூபாய் செலவில், 4.5 கி.மீ., மேம்பால ரயில் பாதை அமைக்கும் பணி, 2007ல் துவக்கப்பட்டு, 12 ஆண்டுகளாக நடந்து வருகிறது.இப்பாதையில், ஆதம்பாக்கம் - பரங்கிமலை ரயில் நிலையம் இடையே, 500 மீட்டர் பாதைக்கான நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட பிரச்னையில், நில உரிமையாளர்கள், நீதிமன்றத்தை நாடியதால், பாதை அமைக்கும் பணி, கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இப்பாதைக்கு, கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களின் உரிமையாளர்கள், கூடுதல் இழப்பீடு கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இதில், 'இப்பாதை கிடப்பில் போடப்பட்டுள்ளதால், ஆண்டுக்கு 6 சதவீதம் வரை, செலவு தொகை உயர்கிறது. அரசின் தரப்பில் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட இழப்பீடு தொகை, போதவில்லை என கருதினால், புதிய சட்டத்தின் கீழ், நில உரிமையாளர்கள் நிவாரணம் கோரலாம்' என, ஜனவரியில் உயர் நீதிமன்றம் தெரிவித்தது.மனுவை தள்ளுபடி செய்தது
இதையொட்டி, மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் ரயில்வே அதிகாரிகள், துரிதமாக செயல்பட்டு, நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, பாதை பணியை விரைவாக முடிக்க, பல தரப்பினரும் எதிர்பார்த்துள்ளனர்.இது குறித்து, வேளச்சேரி, பெருங்குடி, திருவான்மியூர் பொதுமக்கள் மற்றும் ரயில் பயணியர் தரப்பில், ரயில்வேக்கு விடுத்துள்ள கோரிக்கை வருமாறு:வேளச்சேரி - பரங்கிமலை ரயில் பாதை பணி முடிந்து, ரயில் போக்குவரத்து துவங்கப்பட்டால், தென் சென்னையில், வாகன போக்குவரத்து நெருக்கடி குறையும்.
கடற்கரை - தாம்பரம்மின்சார ரயில் போக்குவரத்தில், நெருக்கடி குறையும். கடற்கரையில் இருந்து மேம்பால ரயிலில், பரங்கிமலை வந்து அங்கிருந்தும் பயணியர் தாம்பரம் செல்லும் வசதி கிடைக்கும். பரங்கிமலை வழியாக, மெட்ரோ ரயிலிலும் செல்லும் வாய்ப்பு ஏற்படும். தென் சென்னை மக்கள், விமான நிலையம், கோயம்பேடு, திருமங்கலம் பகுதிகளுக்கு எளிதாக செல்லக்கூடிய நிலை ஏற்படும்.அரசுக்கும், இத்திட்டம் சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகளுக்கும், இந்நிலை தெரிந்தும், ரயில் பாதைக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான செலவு கருதி, 12 ஆண்டுகளாக, காலதாமதம் செய்கின்றனர்.
நில உரியைாளர்கள் புதிய சட்டத்தின் கீழ், நிலம் வழிகாட்டி மதிப்பீட்டின்படி இழப்பீடு வழங்கினால், ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளனர்.இத்திட்டத்தின் பயன்பாடு கருதி, அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கி, பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்து, பாதை கட்டுமான பணியை விரைந்து முடிக்க, அரசும், ரயில்வே திட்டப்பிரிவு அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கோரிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து, நில உரிமையாளர்களிடம் கேட்டதற்கு, 'எங்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இழப்பீடு வழங்கி, இப்பாதை பணியை விரைவாக முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X