பொது செய்தி

இந்தியா

'நோட்டா'வுக்கே எங்கள் ஓட்டு: பாலியல் தொழிலாளர்கள் முடிவு

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (12)
Share
Advertisement

கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலத்தில் பாலியல் தொழிலாளர்கள், வரும் லோக்சபா தேர்தலில், 'நோட்டா'வுக்கு ஓட்டு போட முடிவு செய்துள்ளனர்.latest tamil newsமே.வங்கத்தில் முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள, 42 லோக்சபா தொகுதிகளுக்கு, ஏப்ரல், 11ல் துவங்கி, மே, 19 வரை, ஏழு கட்டங்களாக, தேர்தல் நடக்கிறது. ஐந்து தொகுதிகளுக்கு, தேர்தல் முடிந்துவிட்டது. மீதமுள்ள, 37 தொகுதிகளுக்கு, ஐந்து கட்டங்களில் தேர்தல் நடக்கவுள்ளது.


சிவப்பு விளக்கு:


கோல்கட்டாவின் வடக்கு பகுதிக்கு, அடுத்த மாதம், 19ல், தேர்தல் நடக்கவுள்ளது. இந்த தொகுதியில், ஆசியாவின் மிகப் பெரிய சிவப்பு விளக்கு பகுதியான, சோனாகாச்சி உள்ளது.சோனாகாச்சி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் தொழிலாளர்கள் குடும்பங்களுடன் வசிக்கின்றனர். மொத்தம், 50 ஆயிரம் ஓட்டுகள் உள்ளன.


latest tamil newsஇது குறித்து பாலியல் தொழிலாளர்கள் கூறியதாவது: தேர்தல் சமயத்தில், ஓட்டு கேட்டு வரும் அரசியல்வாதிகள், வெற்றி பெற்ற பின், எங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதில்லை. பத்து ஆண்டுகளுக்கும் மேலாக, எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை; அனைவருக்கும் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படவில்லை.


புறக்கணிப்பு:


முறையான அடையாள அட்டை இல்லாததால், நாங்களும், எங்கள் குழந்தைகளும், அரசு திட்டங்களை பெற முடியவில்லை.எனவே, வரும் லோக்சபா தேர்தலில், எங்களை விரும்பாத, அரசியல் தலைவர்களை புறக்கணிக்கும் வகையில், 'நோட்டா' சின்னத்தில் ஓட்டளிக்க முடிவு செய்துள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SIVA. THIYAGARAJAN - POLUR -TIRUVANNAMALAI,இந்தியா
21-ஏப்-201902:08:17 IST Report Abuse
SIVA. THIYAGARAJAN அப்படி போட்டு வென்று என்ன செய்யப்போகிறார்கள் என்பதால் நோட்டாவுக்கு போடுகிறோம் என்பது அவர்களின் கொள்கை. ஜனநாயகமே நாட்டிற்கு வேண்டாம் என்றுகூட போடலாம் அல்லவா>>>>
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
20-ஏப்-201916:34:45 IST Report Abuse
Natarajan Ramanathan இதில் பெரும்பாலானோர் வங்கதேசத்தில் இருந்து இங்கு வந்து தொழில் செய்பவர்கள். சில லட்சங்கள் சேர்ந்தவுடன் அங்கு சென்று அடுத்த பேட்ச் பெண்களை அனுப்புவார்கள். இதுதான் நடக்கிறது.
Rate this:
Cancel
சத்யமேவ ஜெயதே - Ahmadabad,இந்தியா
20-ஏப்-201911:50:57 IST Report Abuse
சத்யமேவ ஜெயதே நோட்டாவில் வோட்டு போட்டவன் சுகமாக இருந்ததில்லை. இது இராமாயண காலம் முதல் உண்டு. கைகேயி ராமனை காட்டுக்கு போ என்று சொன்னபோது தசரதன் நோட்டாவை தட்டி விட்டதால் அவனே இறக்க நேரிட்டது. சூதாட்டத்தின் போது மன்னன் திருதராஷ்ட்ரன் மவுனியாக இருந்து நோட்டாவை தட்டியதால் அவனது கண் முன்னே (குருடனாக இருந்தும்) ஒவ்வொருவராய் இறப்பதை காண நேரிட்டது. மன்னன் பிரிதிவிராஜை முஹம்மது கோரி ஆக்கிரமித்து கொடுமை படுத்திய போது அடுத்த அரசர்கள் நோட்டாவை தட்டி மவுனியாக இருந்ததால் கோரியும் அவனது அடிமைகளும் இந்தியாவை இரக்கமற்ற முறையில் அறுநூறு ஆண்டுகள் ஆண்டனர். ஜான்சி ராணி போன்ற இந்திய அரசுகளை ஆங்கிலேய ஆதிக்கம் போரிட்டு கொன்ற போது இணைந்து போராடாமல் நோட்டவை தட்டியதால் இந்தியாவே அடிமையாகி சுரண்டப்பட்டது. நோட்டாவை தட்டியதால் மத்திய பிரதேசத்தில் நல்லாட்சி கொடுத்த சிவராஜ் சிங் சவுகான் பனிரெண்டு இடங்களை இழக்க நேர்ந்து ஆட்சியை இழந்தார். பின் வந்த காங்கிரஸ் ஆறு மாதங்களில் ஊழல் ஊழல், மின் வெட்டே இல்லாத மாநிலத்தில் மின் வெட்டு, யூரியா தட்டுப்பாடு இல்லாத மாநிலத்தில் பிச்சைகாரர்கள் போல நடத்தப்படும் விவசாயிகள் என்று நோட்டாவை தட்டியதன் பலனை இன்று அனுபவிக்கிறார்கள். ஆக நோட்டாவை தட்டாதீர்கள். உங்களையும் உங்கள் தலைமுறையையும் அழிய விடாதீர்கள். இன்று மோடி ஆட்சியை போல வேறு ஒருவரின் ஆட்சி இல்லை. அதனால் அவர்களுக்கு வோட்டு போடுங்கள். உங்களின் வாழ்வு நல்வாழ்வாக மலரும். நன்றி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X