சம்பவம் செய்தி

தமிழ்நாடு

புதுக்கோட்டையில் பஸ்கள் நிறுத்தம்

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (35)
Advertisement

புதுக்கோட்டை: புதுக்கோட்டை யில் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் தொடர்பாக வாட்ஸ்அப்பில் பரவிய தகவலால் வன்முறை வெடித்தது. இதனை தொடர்ந்து அரசு பஸ்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மேலும் வன்முறை பரவாமல் தடுக்க இப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.






புதுக்கோட்டையில் இருந்து 30 கி.மீ. தொலைவில் பொன்னமராவதி உள்ளது. இங்கு ஒரு பிரிவினர் தொடர்பான சர்ச்சை வீடியோ வாட்ஸ்அப்பில் பரவியது. இதனை பரப்பியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி 1000 க்கும் மேற்பட்டோர் நேற்று இரவில் சாலைகளில் மரங்களை வெட்டி போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நடந்த கல்வீச்சு சம்பவத்தில் 4 போலீசார் காயம் அடைந்தனர். மேலும் அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டன.

டிஐஜி லலிதா லட்சுமி மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவம் நடந்த பகுதிக்கு சென்று பாதுகாப்பு பணிகள் செய்து வருகின்றனர். பொன்னமராவதியில் தற்போது வரை பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. பல இடங்களில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.







1000 பேர் மீது வழக்கு



ஆலங்குடியில் அரசு போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை நகர பகுதிகளிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததாக 1000 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
muthu Rajendran - chennai,இந்தியா
21-ஏப்-201916:16:47 IST Report Abuse
muthu Rajendran தேர்தலுக்காக மதத்தை சொல்லி பிரித்தார்கள் பின்பு மதத்திற்குள் சாதி சொல்லி பிரிக்க பார்க்கிறார்கள் அரசியல் வியாதிகள்.ஆண்டாண்டு காலமாக அறிவியல் ரீதியாக எந்த ஒரு வித்தியாசமும் இல்லாத மனிதர்களை சாதி என்று பிரித்து பார்ப்பது எவ்வளவு கொடுமை .நாம் கற்ற கல்வியும் பண்பும் இதை கற்றுத்தரவில்லை என்றால் நாம் மனிதர்கள் என்று சொல்வதற்கே தகுதி இல்லாதவர்கள். காக்கை குருவி எங்கள் சாதி என்று பாரதி உயிரினங்களை எல்லாம் ஒன்றாய் பார்த்தான். ஆனால் நாமோ? வேதனைப்பட வேண்டிய விஷயம்
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
20-ஏப்-201920:26:14 IST Report Abuse
Pugazh V சமுதாய கலாச்சார சீரழிவு களின் கோரமுகம் மெல்ல வெளிப்படுகிறது.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
20-ஏப்-201919:32:23 IST Report Abuse
Malick Raja முதலில் செய்யவேண்டியது வாட்ஸ் அப் வலைதளத்தில் செய்திபரப்பியவர்களை பிடித்து சுட்டுத்தள்ளவேண்டும் .. இது ஒரு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் .. சாதியின் பெயரால் கீழ்த்தரமான மனிதர்கள் மட்டுமே இதுபோன்ற வாட்ஸ் அப் பகிர்ந்துள்ளது வெளிப்படை .. சில கயவர்களினால் நல்லதொரு சமுதாயத்தின் பெயர் கெடுக்கப்படுகிறது .. இரு சமுதாய மக்களும் மனிதர்கள்தான் .. இரு சமுதாயமும் ஒன்றோடொன்று இருந்துதான் கடந்த வாரம் வரை வாழ்ந்தது . ஏன் இந்த ஈனத்தனம் வாட்ஸ் அப் மூலம் வந்தது .. இருவரும் தமிழினமே .. நம்மிலா இப்படி . வேதனை விலக விளைவோம் .. அணைத்து தமிழ்மக்களும் ஒரே இனம் .. நாமெல்லாம் தமிழர்கள் என்பதை கலைகளை களைந்து மனிதநேயம் போற்றுவோம்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X