ராகுல், பிரியங்கா பேச்சை மொழிபெயர்த்த பெண் ; காங்.,நிம்மதி

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (13)
Advertisement
ராகுல், மொழிபெயர்ப்பு சிக்கல், ஜோதிராதிகா

திருவனந்தபுரம் : காங்கிரஸ் தலைவர் ராகுல் பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்து பெண் மொழிபெயர்ப்பாளர் அசத்தினார். இதனால், மொழிபெயர்ப்பாளர் சிக்கல் தீர்ந்து காங்., நிம்மதியடைந்துள்ளது.
ஜோதிராதிகா விஜயகுமார் என்ற பெண், வயநாடு தொகுதி பத்தனாபுரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுலின் ஆங்கிலப்பேச்சை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். அவரது துல்லியமான மொழிபெயர்ப்பு மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
ஏற்கனவே, ராகுலின் பேச்சை மொழிபெயர்த்த மூத்த தலைவர் பி.ஜே.,குரியன் சொதப்பியதோடு, அது பெரும் காமெடியாக மாறிப்போனது. முன்னதாக தமிழகத்தில் கன்னியாகுமரியில் தங்கபாலு, கிருஷ்ணகிரியில் பேராசிரியர் பழனித்துரை ஆகியோரின் மொழிபெயர்ப்பும் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.
இதனால், காங்., தலைவர்கள் ராகுலின் பேச்சை மொழிபெயர்ப்பதற்கென்றே பெரும் மெனக்கிடலை சந்தித்தனர். இந்த நிலையில் ஜோதியின் மொழிபெயர்ப்பால், கேரள காங்கிரசார் நிம்மதிப்பெருமூச்சு விடுகின்றனர்.
ஜோதிராதிகா, வழக்கறிஞர் மற்றும் திருவனந்தபுரம் ஐ.ஏ.எஸ்., அகாடமியில் சமூகவியல் பேராசிரியர். அவரது சிறந்த மொழிபெயர்ப்பை அடுத்து திருவனந்தபுரம் கூட்டத்தில் ராகுல் பேச்சை மொழிபெயர்க்கவும் காங்கிரசார் அழைத்துச்சென்றனர். இன்று வயநாட்டில் பிரசாரம் செய்த பிரியங்காவின் பேச்சையும் இவரே மொழி பெயர்ப்பு செய்தார்.
கடந்தாண்டு கேரளா, செங்கனுார் எம்.எல்.ஏ., தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் தலைவர் விஜயகுமார் என்பவரது மகள் தான் இந்த ஜோதி. இவுருக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு பெருகி வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
23-ஏப்-201919:14:56 IST Report Abuse
sankar அவர் பேசும் உரை பெரிய விஷயம் ஒன்றும் இல்லை - நம்ம சுடலை மாதிரி சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லுகிறார்
Rate this:
Share this comment
Cancel
Jaya Ram - madurai,இந்தியா
21-ஏப்-201913:27:36 IST Report Abuse
Jaya Ram இனிமேல் அவர் பெரிய ஆளாக காங்கிரஸில் கருதப்படுவார்
Rate this:
Share this comment
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
21-ஏப்-201903:51:14 IST Report Abuse
J.V. Iyer பெண் மொழிப்பெயர்ப்பாளரோ ?? அம்மடி, ராகுல் இந்திய பிரஜை அல்ல. அவரின் எம்.பில் பட்டமும் உண்மையல்ல. பொய் .. பொய்.. பொய்.அவரால் அமேதி, வயநாட்டில் வெற்றியபற முடியாது.. பாவம்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X