பாலியல் புகார் செய்தியால் பரபரப்பு; நீதித்துறையை சீர்குலைக்க சதி: தலைமை நீதிபதி

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (143)
Advertisement

புதுடில்லி: நீதித்துறையை சீர்குலைக்க சதி நடப்பதாக சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி நீதிபதி கோகாய் கவலை தெரிவித்துள்ளார். சுப்ரீம் கோர்ட் முன்னாள் பெண் ஊழியர் ஒருவர் தலைமை நீதிபதி மீது பாலியல் புகார் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது.






இது தொடர்பாக நீதிபதி கோகாய் கூறியிருப்பதாவது:
சுயநலமில்லாத என் சேவையில் இது போன்ற ஒரு குற்றச்சாட்டு நம்பமுடியாதவை. என் மீது புகார் கூறியுள்ள பெண் மீது பல குற்ற வழக்குகள் உள்ளன. இந்த சதிக்கு பின்னால் ஒரு பெரும் சக்தி உள்ளது. நீதித்துறை சுதந்திரம் கேள்விக்குறியாகி உள்ளது. இது போன்ற அச்சுறுத்தல் இருந்தால் நீதித்துறைக்கு நல்லவர்கள் வர முடியாமல் போய்விடும்.

இது போன்ற குற்றச்சாட்டுக்கு தரம் தாழ்ந்து பதில் சொல்ல விரும்பவில்லை. 20 ஆண்டுகால நீதிபதி பணிக்கு இதுதான் எனக்கு கிடைத்த சான்று. இது வரை எனது வங்கி கணக்கில் ரூ.6 லட்சத்து 80 ஆயிரம் சம்பாதித்துள்ளேன். பணம் விஷயத்தில் என்னை சிக்க வைக்க முடியாததால் இது போன்ற சூழ்ச்சி நடக்கிறது.

அடுத்த வாரம் ஒரு முக்கிய வழக்கு விசாரிக்க வேண்டியுள்ள நிலையில் இது போன்று அச்சுறுத்தல் வருகிறது. என்னை சிலர் நிர்பந்தப்படுத்த முயற்சிக்கின்றனர். இது தொடர்பாக எனது சகோதரர்கள் மற்றும் மூத்த நீதிபதிகள் எனக்காக இல்லாமல் தன்னிச்சையாக முடிவு செய்யட்டும்.





சுப்ரீம் கோர்ட்டில் இளநிலை உதவியாளராக பணியாற்றிய பெண் ஒருவர் தலைமை நீதிபதி கோகாய் மீது பாலியல் புகார் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக பல்வேறு நீதிபதிகளுக்கும் அவர் கடிதம் எழுதி இருந்தார். இது குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி விசாரிக்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.


ஊடகங்கள் பொறுப்பு


இந்நிலையில் இது சுப்ரீம் கோர்ட்டில் அவசர பிரச்சனையாக விவாதிக்கப்பட்டது. தலைமை நீதிபதி ரஞ்சன்கோகாய், நீதிபதிகள் அருண் மிஷ்ரா, சஞ்சீவ்கண்ணா உள்ளிட்டோரை கொண்ட 3 பேர் பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்தது. இது மிரட்டும் செயல் என்றும், இது குறித்து எவ்வித உத்தரவும் பிறப்பிக்க போவதில்லை என்றும் நீதிபதிகள் அருண் மிஷ்ரா, மேத்தா கூறியுள்ளனர். இதனை ஊடகங்களின் பொறுப்பில் விடுவதாகவும். ஊடகங்கள் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (143)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramamoorthy P - Chennai,இந்தியா
23-ஏப்-201912:37:06 IST Report Abuse
Ramamoorthy P நீதிபதிகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவர்களாக இருத்தல் வேண்டும் அத்துடன் ஆன்மிக சமூக பாரம்பரிய விஷயங்களில் நிபுணர் குழுவின் முடிவினை கேட்டு தீர்ப்பு வழங்கிட வேண்டும் தீபக் மிஸ்ராவின் சிலபல தீர்ப்புகள் சமூக சிந்தனையுடன் ஒத்து போகாத ஒன்று
Rate this:
Share this comment
Cancel
Muru - BRISBANE,ஆஸ்திரேலியா
23-ஏப்-201908:46:50 IST Report Abuse
Muru சட்டம் தன் கடமையை செய்யும்
Rate this:
Share this comment
Cancel
Divahar - tirunelveli,இந்தியா
22-ஏப்-201913:08:19 IST Report Abuse
Divahar ஏற்கனவே ஒரு நீதி கொலை செய்யப்பட்ட விவகாரத்திலும் பிரச்னை இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் இதற்கு முன்னாலும் பிரச்னை வந்துள்ளது. இதுவும் நீதி துறை சுர்ஜிக்கல் அட்டாக் ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X