சம்பவம் செய்தி

தமிழ்நாடு

லாரி மோதி 3 இளைஞர்கள் பரிதாப பலி

Added : ஏப் 20, 2019
Advertisement

சிவகங்கை : ஒரே டூ வீலரில் சென்ற 3 இளைஞர்கள், லாரி மோதி பரிதாபமாக சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
சிவகங்கை, தாக்கியார் நகரை சேர்ந்த பாண்டி மகன், நவீன், 19, அதே பகுதியை சேர்ந்த மாயாண்டி மகன் ஈஸ்வரன், 18, முத்திருளு மன் மகேஷ்குமார் ஆகிய மூவரும் ஒரே டூ வீலரில் மதியம் 3 மணி அளவில் திருப்புவனத்திலிருந்து சிவகங்கை நோக்கி சென்று கொண்டிருந்தனர். நல்லாகுளம் அருகில் சிவகங்கையிலிருந்து மதுரை நோக்கி வந்த லாரி, இளைஞர்கள் சென்ற டூ வீலர் மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே இளைஞர்கள் மூவரும் பலியாகினர். இவர்கள் ஹெல்மெட்டும் அணியவில்லை. சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X