ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள்சேர்ப்பு ; 3 பேர் கைது!

Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement
ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள்சேர்ப்பு ; 3 பேர் கைது!

ஐதராபாத் : ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான தீவிரவாத வழக்கு ஒன்றில், ஹைதராபாத்தில் 3 பேரை கைதுசெய்து என்ஐஏ விசாரித்து வருகிறது.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் முயற்சிகளில் ஒரு குழு ஈடுபட்டு வந்தது 2016ம் ஆண்டு கண்டறியப்பட்டு, அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அபுதாபி தீவிரவாதக் குழு எனக் குறிப்பிடப்படும் இந்த வழக்கில், 3 பேர் கடந்த ஆண்டு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய விவரங்களின் அடிப்படையில், ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனை நடத்தினர். இதில் 3 பேரை கைதுசெய்து என்ஐஏ அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ganapati sb - coimbatore,இந்தியா
24-ஏப்-201911:16:59 IST Report Abuse
ganapati sb உலகின் பல்லாயிரம் ஆண்டு பயணத்தில் சில நுறு ஆண்டு முன்பு தோன்றிய அப்ரஹாமிய மதங்களின் பெயரால் வன்முறை செய்வதும் வியாபாரம் செய்வதும் அவசியமற்றது
Rate this:
Share this comment
Cancel
20-ஏப்-201919:29:23 IST Report Abuse
karthik இதெல்லாம் பேசவே தேவை இல்லை. எண்கவுண்டர் போடனும் . அப்பதான் திருந்துவாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X