ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள்சேர்ப்பு ; 3 பேர் கைது!| Dinamalar

ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள்சேர்ப்பு ; 3 பேர் கைது!

Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (2)
ஐஎஸ்ஐஎஸ்-க்கு ஆள்சேர்ப்பு ; 3 பேர் கைது!

ஐதராபாத் : ஐஎஸ்ஐஎஸ் அமைப்பிற்கு ஆள் சேர்த்தது தொடர்பான தீவிரவாத வழக்கு ஒன்றில், ஹைதராபாத்தில் 3 பேரை கைதுசெய்து என்ஐஏ விசாரித்து வருகிறது.
ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் முயற்சிகளில் ஒரு குழு ஈடுபட்டு வந்தது 2016ம் ஆண்டு கண்டறியப்பட்டு, அந்த முயற்சிகள் முறியடிக்கப்பட்டன. அபுதாபி தீவிரவாதக் குழு எனக் குறிப்பிடப்படும் இந்த வழக்கில், 3 பேர் கடந்த ஆண்டு என்ஐஏ எனப்படும் தேசிய புலனாய்வு நிறுவனத்தால் கைது செய்யப்பட்டனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய விவரங்களின் அடிப்படையில், ஹைதராபாத் புறநகர்ப் பகுதியில் 3 வெவ்வேறு இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று அதிகாலை சோதனை நடத்தினர். இதில் 3 பேரை கைதுசெய்து என்ஐஏ அலுவலகம் கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X