அபிநந்தனுக்கு வீர் சக்ரா விருது: விமானப்படை பரிந்துரை

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (22)
Share
Advertisement
புதுடில்லி: பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் வர்த்தமானுக்கு, வீரதீர செயலை பாராட்டி வழங்கப்படும் வீர் சக்ரா விருது வழங்க விமானப்படை அவரது பெயர் பரிந்துரைத்துள்ளது.புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை மிக்-21விரட்டி சென்று சுட்டு வீழ்த்திய போது பாக்.,ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சர்வதேச நாடுகளின்

புதுடில்லி: பாகிஸ்தான் விமானத்தை சுட்டு வீழ்த்திய அபிநந்தன் வர்த்தமானுக்கு, வீரதீர செயலை பாராட்டி வழங்கப்படும் வீர் சக்ரா விருது வழங்க விமானப்படை அவரது பெயர் பரிந்துரைத்துள்ளது.



latest tamil news




புல்வாமா தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் எப்-16 போர் விமானத்தை மிக்-21விரட்டி சென்று சுட்டு வீழ்த்திய போது பாக்.,ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து சர்வதேச நாடுகளின் நெருக்கடி காரணமாக அவர் விடுதலை செய்யப்படார். பின்னர் உடல்பரிசோதனை செய்ததுடன் தொடர் சிகிச்சைக்கு பின்னர் பணியில் சேர்க்கப்பட்டார்.


latest tamil news




பணியிட மாற்றம்

இந்நிலையில் அவருக்கு பாதுகாப்பு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதிய விமானப்படை அபிநந்தனை, பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் விமானப்படை தளத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து அபிநந்தனுக்கு உத்தரவு அனுப்பப்பட்டு விட்டதாகவும், அவர் விரைவில் புதிய பணியிடத்திற்கு செல்வார் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


பரிந்துரை


போர் காலத்தில் சிறப்பாக பணிபுரியும் வீரர்களுக்கு வழங்கப்படும் வீர்சக்ரா விருதை அபிநந்தனுக்கு வழங்க.வேண்டும் என விமானப்படை சார்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
21-ஏப்-201911:53:53 IST Report Abuse
அசோக்ராஜ் என்னமோ தெரியவில்லை. இவர் படத்தைப் பாத்தால் மோடியும் நிர்மலாவும் கூடவே ஞாபகத்திற்கு வந்துவிடுகிறார்கள். Remembrance by association நன்றாக வேலை செய்கிறது.
Rate this:
babu - ,
21-ஏப்-201919:39:09 IST Report Abuse
babu...
Rate this:
Cancel
Hafees Ali - No.6, Dubai Kurukkusandhu, DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
21-ஏப்-201910:49:24 IST Report Abuse
Hafees Ali
Rate this:
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201908:28:14 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆனால் சின்ன சநதேகம்... பால்கோட் சம்பவத்தில் இருந்து கொண்டேதான் இருக்கிறது...அதை தீர்க்கமுடியுமா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X