பதிவு செய்த நாள் :
'இரு கட்ட ஓட்டுப் பதிவிற்கு பின்
மம்தா துாக்கமின்றி தவிக்கிறார்'

புனியாத்புர்: ''மேற்கு வங்கத்தில், இரு கட்ட ஓட்டுப்பதிவிற்குப் பின், வந்த தகவல்களால், அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி, துாக்கம் இழந்து தவிக்கிறார்,'' என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

ஓட்டு பதிவு, மம்தா,



மேற்கு வங்கத்தில், முதல்வர், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.இங்குள்ள, தெற்கு தினஜ்பூர் மாவட்டத்தில், பா.ஜ., வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற, தேர்தல் பிரசாரத்தில், மோடி பேசியதாவது:மம்தா, 'அம்மா, நிலம்,

மக்கள்' எனகூறி, மக்களை ஏமாற்றுகிறார். நடந்து முடிந்த இரு கட்ட ஓட்டுப் பதிவின் விபரங்களை கேட்டு,அவர் துாக்கமிழந்து தவிக்கிறார்.

மே.வங்கத்தில், தன் கட்சி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய, அண்டை நாடான, வங்கதேச பிரமுகர்களின் உதவியை நாடுகிறார்.இது பெரும் அவமானம். சிறுபான்மையினரை திருப்தி படுத்தவே, இப்படிசெய்கிறார்.

பாலகோட் ராணுவ தாக்குதலுக்கு, ஆதாரம் கேட்பதற்கு பதிலாக, சாரதா சிட் மோசடியில் ஈடுபட்டோருக்கு எதிரான சாட்சியங்களை, அவர் சேகரிக்கலாம்.இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து, பீஹாரில், அராரியா பகுதியில் நடந்த பிரசாரத்தில், மோடி, காங்கிரசை கடுமையாக சாடினார்.

அங்கு அவர் பேசியதாவது: இரு கட்ட ஓட்டுப் பதிவு நடந்து முடிந்த பின்,

Advertisement

எதிர்க்கட்சிகள் அரண்டு போயுள்ளன. அண்டை நாட்டில் புகுந்து, நம் ராணுவ வீரர்கள் நிகழ்த்திய தாக்குதலுக்கு,ஆதாரம் கேட்கும் துணிவை, எதிர்க் கட்சியினர் இழந்து விட்டனர்.காங்., ஆட்சியில், தேச நலனை விட, ஓட்டு வங்கி அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

என் அரசு, இட ஒதுக்கீட்டையே முடிவுக்கு கொண்டுவந்து விடும் என, பொய்களை பரப்புகின்றனர். மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த நாடு, 'ஓட்டு பக்தி, தேச பக்தி' என்ற இரண்டு வகை அரசியலை பார்த்துள்ளது. ஓட்டு பக்தி காரணமாகவே, காங்., ஆட்சியில், மும்பை தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தான் மீது தாக்குதல் ஏதும் நடத்தப்படவில்லை.

ஆனால், என் ஆட்சியில், உரி தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்குள் நுழைந்து, துல்லியத் தாக்குதல் நடத்தபட்டது.அது போல, புல்வாமா தாக்குதலுக்கு பின், பாலகோட் தாக்குதல் நடத்தப்பட்டது.இவ்வாறு அவர் கூறினார்.


Advertisement

வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
25-ஏப்-201904:30:42 IST Report Abuse

meenakshisundaramதமிழகத்துக்கு அனுப்பவும் இங்கேயும் ஒரு கேஸ் இருக்கு ,ரெண்டு பேரும் சேர்ந்து பொழுது களிக்கலாம்.

Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-201919:41:14 IST Report Abuse

Malick Raja

Rate this:
jannett warrior - chennai,இந்தியா
21-ஏப்-201913:17:56 IST Report Abuse

jannett warriorமம்தாவுக்கு தூக்கம் போய்விட்டது என்று கவலைப்படும் பிரதமரே நாட்டில் உள்ள மக்களுக்கு பணமதிப்பிழப்பு செய்ததிலிருந்தே தூக்கம் போய்விட்டதே

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X