காஷ்மீரில் பயங்கரவாதி சுட்டுக் கொலை

Added : ஏப் 20, 2019
Advertisement

ஸ்ரீநகர், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், பாரமுல்லா மாவட்டத்தில், நேற்று காலை, பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையில் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.ஜம்மு - காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சி நடக்கிறது. சில தினங்களுக்கு முன், புல்வாமா மாவட்டத்தில், சி.ஆர்.பி.எப்., முகாம் மீது, பயங்கரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர்.
இதில் ஒரு வீரர் காயமடைந்தார்.இதையடுத்து, மாநிலம் முழுவதும், பயங்கரவாதிகளை தேடும் பணியில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.இந்நிலையில், நேற்று காலை, பாரமுல்லா மாவட்டம், சோபோர் பகுதியில், பாதுகாப்பு படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, பாதுகாப்பு படையினரை நோக்கி, பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்பு படையினரும்,பதில் தாக்குதல் நடத்தினர்.

இரு தரப்பினருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.சம்பவம் நடந்த இடத்தில் இருந்து, துப்பாக்கி மற்றும் ஏராளமான வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டதாக, பாதுகாப்பு படை அதிகாரிகள் தெரிவித்தனர்.தொடர்ந்து, அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X