குடியுரிமை, கல்வித் தகுதி: ராகுலுக்கு, பா.ஜ., கேள்வி

Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement

புதுடில்லி, 'தன் குடியுரிமை மற்றும் கல்வித் தகுதி குறித்த உண்மையை, காங்., தலைவர், ராகுல் வெளியிடுவாரா' என, பா.ஜ., கேள்வி எழுப்பி உள்ளது.காங்கிரஸ் தலைவர், ராகுல், உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் போட்டியிடுகிறார்.

வேட்பு மனுவில், கல்வித் தகுதி மற்றும் குடியுரிமை குறித்து, ராகுல் தவறான தகவல்கள் அளித்துள்ளதாக, சிலர் பிரச்னையை எழுப்பியுள்ளனர். இது குறித்து, தொகுதியின் தேர்தல் அதிகாரி விசாரித்து வருகிறார்.இந்தப் பிரச்னை குறித்து, பா.ஜ., செய்தித் தொடர்பாளர், ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் கூறியுள்ளதாவது:ராகுல் மீது, மிகப் பெரிய குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. இது மிகவும் முக்கியமான பிரச்னை. அவர் இந்தியக் குடியுரிமை பெற்றுள்ளாரா அல்லது பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளாரா என்பது குறித்து விளக்க ேவண்டும்.கடந்த, 2004ல், பிரிட்டனில் உள்ள ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்தபோது, பிரிட்டன் குடியுரிமை பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

அதேபோல், பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் பல்கலையில், எம்.பில்., படித்துள்ளதாக கூறியுள்ளார்.அதிலும், அவர் பொய்யான தகவல் கூறிஉள்ளார். விசாரணையில், அவர் குறிப்பிட்ட ஆண்டில், ராகுல் வின்சி என்பவர் தான் பட்டம் பெற்றுள்ளார்.இந்தப் பிரச்னை குறித்து, தேர்தல் அதிகாரி விசாரணைக்கு அழைத்தபோது, ராகுலின் வழக்கறிஞர் கால அவகாசம் கேட்டுள்ளார். தன் கல்வித் தகுதி மற்றும் குடியுரிமை குறித்த உண்மை தகவல்களை, ராகுல் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
natarajan s - chennai,இந்தியா
21-ஏப்-201907:37:05 IST Report Abuse
natarajan s இவனுக திரு மோடி மற்றும் ஸ்மிரிதி இரானியின் கல்வி தகுதி பற்றி கேள்வி கேட்டார்கள் அவர்கள் இவரது கல்வி தகுதியை கேள்வி கேட்கிறார்கள். ஆனால் திரு. சாமி சில வருடங்களுக்கு முன்பே திரு ராகுல் இந்த நாட்டின் பிரதமர் ஆக முடியாது என்று ஒரு செய்தியாளர் சந்திப்பில் கூறினார். அதன் பின்னணி என்ன என்று இனி தெரியவரும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X