பதிவு செய்த நாள் :
வியூகம்!
ஆட்சியை பிடிக்க ராகுல் வகுக்கும் ரகசிய...:
தேர்தல் முடிவுக்கு பிறகு, கூட்டணியில் மாற்றம்

புதுடில்லி:லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர், ஆட்சியை பிடிப்பதற்காக, ஐக்கிய முற்போக்கு கூட்டணியில், சில மாற்றங்கள் செய்ய, காங்கிரஸ் தலைவர் ராகுல், ரகசிய வியூகங்கள் வகுத்துள்ளதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் மற்றும் திரிணமுல் காங்கிரசின் ஆதரவை நாட, காங்., முடிவு செய்துள்ளதாக, அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆட்சி, ராகுல், ரகசிய வியூகம், தேர்தல் முடிவு, கூட்டணியில் மாற்றம்

நாடு முழுவதும் உள்ள, 543 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல், ஏப்., 11ல் துவங்கி, மே, 19 வரை நடைபெறுகிறது. ஓட்டு எண்ணிக்கை மே, 23ல் நடைபெற்று, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பின்னடைவு


இந்நிலையில், ஏப்., 11 மற்றும் 18 ஆகிய தேதிகளில், இரண்டு கட்ட ஓட்டுப்பதிவுகள் முடிந்துவிட்டன. இன்னும், ஐந்து கட்ட ஓட்டுப் பதிவுகள் நடைபெற உள்ளன.பா.ஜ., தலைமை யிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்., தலைமையிலான, ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆகியவை, ஆட்சியை பிடிக்க, தேர்தல் களத்தில் தீவிரமாக போராடி வருகின்றன.

இந்நிலையில், இந்த தேர்தலில், யாருக்கு எவ்வளவு, 'சீட்' கிடைக்கும் என்பது குறித்து, காங்., தலைமை, சமீபத்தில் கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தி உள்ளது.

இதைத் தவிர, அக்கட்சியின் தலைவர் ராகுல், தனியார் நிறுவனம் ஒன்றின் உதவியுடன், தனிப்பட்ட முறையில், ரகசியமாக ஒரு கருத்துக் கணிப்பை நடத்தி முடித்துள்ள தாக வும், அந்த முடிவுகளின் அடிப்படையில், அவர்,

சில வியூகங்களை வகுத்துள்ளதாகவும், கட்சியினர் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து, காங்., வட்டாரங்கள் கூறியதாவது:கடந்த, 2014, லோக்சபா தேர்தலின் போது இருந்த அளவுக்கு, மாபெரும் மோடி அலை, இந்த தேர்தலில் இல்லை. இது, பா.ஜ., வெல்லப் போகும் தொகுதிகளின் எண்ணிக்கையில் மிகப் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும். ஐ.மு., கூட்டணி கட்சிகளுடன் ஒப்பிடும் போது, தே.ஜ., கூட்டணியில் உள்ள மாநில கட்சிகளுக்கு, மக்கள் செல்வாக்கு குறைந்துள்ளது. எனவே, பா.ஜ., எதிர்பார்க்கும் எண்ணிக்கை நிச்சயம் கிடைக்காது என, ரகசிய ஆய்வில் தெரியவந்துள்ளது.

தமிழகத்தை நம்பும் காங்.,



பா.ஜ., 200க்கும் குறைவான இடங்களில் வெற்றி பெறும்பட்சத்தில், அவர்களால் நிச்சயம் பெரும் பான்மையை எட்டிப்பிடிக்க முடியாது என்பது, காங்.,கின் கணக்காக உள்ளது.பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், கர்நாடகாவில் மத சார்பற்ற ஜனதா தளம் ஆகியவை, கணிசமான, 'சீட்'களை பெற்றுத் தரும் என காங்., நம்பினாலும், இந்தமுறை தமிழகத்தை பெரிதாக நம்பி, ராகுல் களம் இறங்கி இருக்கிறார்.

தமிழகத்தில், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், 35 இடங்களை பெற்றுத் தரும் என்பது அவரது நம்பிக்கை.மேலும், கேரளா, பஞ்சாப் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில், காங்.,குக்கு தனிப்பட்ட முறையில், கணிசமான இடங்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. அதே நேரத்தில், மஹாராஷ்டிராவில், தேசியவாத காங்., எதிர்பார்த்த வெற்றியை பெறாது என்ற அச்சமும் உருவாகி உள்ளது.

காங்., தலைமையின் கணக்குப்படி, 135 முதல், 145, 'சீட்'கள் வரை, அக்கட்சி தனித்து பிடிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.காங்., - பா.ஜ., நேரடியாக மோதிக் கொள்ளும், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத், உத்தரகண்ட்,ஹிமாச்சல பிரதேசம் ஆகிய மாநிலங்களில், காங்.,குக்கு கணிசமான இடங்கள் கிடைத்தால், இந்த எண்ணிக்கை 160 வரை உயர வாய்ப்புள்ளது.

மேலும், கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் சேர்த்து, ஐ.மு., கூட்டணிக்கு, 200 முதல் 210 இடங்கள் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 543 'சீட்'களில், ஆட்சி அமைக்க, 272

Advertisement

இடங்கள் தேவை. இப்போதைக்கு இந்த எண்ணிக்கை கிடைக்காது என்ற நிலையில், ஐ.மு., கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு திரட்ட காங்., தயாராகி வருகிறது.

கூட்டணி



இந்த விவகாரத்தில், சமாஜ்வாதி கட்சி தலை வரான அகிலேஷ் யாதவை, காங்., பெரிதாக நம்புகிறது.அதோடு, மம்தா பானர்ஜி தலைமை யிலான திரிணமுல் காங்., மற்றும் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் ஆகிய கட்சி கள் வைக்கும் கோரிக்கைகளை பொருத்து, அவர்களின் ஆதரவையும் பெற்று ஆட்சி அமைக்கும் வியூகத்தையும், காங்., வகுத்து உள்ளது.

அதோடு, தேர்தலுக்கு பிறகு, ஆந்திராவில், ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்.,குடன் கூட்டணி அமைக் கும் முயற்சியிலும், காங்., ஈடுபட்டுள்ளது. இவ்வாறு, கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

வயநாடு, 'கை' கொடுக்குமா?



காங்., தலைவர் ராகுல், உ.பி., மாநிலம் அமேதி லோக்சபா தொகுதியுடன் சேர்த்து, கேரளாவின் வயநாடு தொகுதியிலும், போட்டியிடுகிறார். இங்கு, ராகுலை வீழ்த்த, இடது ஜனநாயக முன்னணியினர், தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர். தங்கள் பிரசார உத்திகளில் மாற்றங்கள் செய்துள்ளனர்.

வயநாட்டில், 90 சதவீத மக்கள், விவசாயத்தை நம்பி உள்ளனர். எனவே, 1990களில் காங்., அரசு கொண்டு வந்த உலகமயமாக்கல் கொள்கை யினால் தான், கேரள விவசாயிகள் இன்று பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர் என்ற குற்றச் சாட்டை முன்வைக்க தொடங்கி உள்ளனர்.


Advertisement

வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
oce - tokyo,ஜப்பான்
26-ஏப்-201912:00:56 IST Report Abuse

oceபூட் ட கேஸ்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
26-ஏப்-201912:00:21 IST Report Abuse

oceராகுல் நீ வய நாட்டில் வழ வாழா கொழ கொழா.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
26-ஏப்-201911:58:55 IST Report Abuse

oceபிஜெப்பிக்கு 420 முதல் 430 சீட்டுகள் வரை கிடைக்கும். இந்த தடவை மோடிஜியின் பாராளுமன்றம் மிக்க வலுவானதாக இருக்கும்.

Rate this:
மேலும் 35 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X