வேட்பு மனு ராகுல் தவறான தகவல் : தேர்தல் அதிகாரி விசாரணை

Updated : ஏப் 20, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (28)
Advertisement
வேட்பு மனு, ராகுல், தவறான, தகவல்,  தேர்தல், அதிகாரி, விசாரணை

லக்னோ: காங். தலைவர் ராகுல், தனது குடியுரிமை, மற்றும் கல்வித்தகுதி குறித்து தவறான தகவல் அளித்துள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது.

லோக்சபா தேர்தலில் உ.பி மாநிலம் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட காங். தலைவர் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில் அமேதியில் ராகுலை எதிர்த்து சுயேட்சை வேட்பாளர் துருவ்லால் என்பவர் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் புகார் மனு கொடுத்துள்ளார். அதில், காங். வேட்பாளர் ராகுல் 2004-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட்டபோது தனது பிரமாண பத்திரத்தில், பிரிட்டீஸ் நிறுவனம் ஒன்றில் சில முதலீடுகளை செய்திருப்பதாகவும் அதில் தாம் பிரிட்டீஸ் குடிமகன் எனவும் தாம் கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் பெற்றுள்ள பட்டபடிப்பில், 'ராகுல் வின்சி' என்ற இத்தாலிய பெயர் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.




இதன் மூலம் ராகுல் உண்மையை மறைத்து தேர்தல் அதிகாரிக்கு தவறான தகவல் கொடுத்துள்ளதால் அவரது வேட்புமனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.
தேர்தல் நடத்தும் அதிகாரி கூறுகையில், புகார் மனுவில் குறிப்பிட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக விளக்கம் அளிக்க ராகுலுக்கு அவகாசம் அளிக்கும் வகையில் அவரது வேட்புமனு மீதான பரிசீலனை மற்றும் விசாரணை ஏப்.22-ம் தேதி நடைபெறும் என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramalingam Shanmugam - mysore,இந்தியா
25-ஏப்-201913:46:30 IST Report Abuse
Ramalingam Shanmugam இவனுக்கெல்லாம் காவடி தூக்கும் கேவலமான பிறவிகள் மக்கள் தான்
Rate this:
Share this comment
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
22-ஏப்-201911:05:58 IST Report Abuse
KUMAR. S பிரதமரும் ஸ்மிர்தி இராணியும் கல்வி தகுதி விஷயத்தில் குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள். ..தேர்தல் ஆணையம் என்ன நடவடிக்கை எடுத்தது.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
21-ஏப்-201916:40:07 IST Report Abuse
Darmavan இதில் புரியாதது எதற்கெடுத்தாலும் press meet நடத்தும் காங்கிரஸ் சத்தமே காணவில்லை ஏன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X