எக்ஸ்குளுசிவ் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
இணைந்த கைகள்!
ரஜினியை வீழ்த்த இணைந்த கைகள்

'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற தத்துவம், எந்தச் சூழலுக்குப் பொருந்துமோ, இல்லையோ, நம்ம ஊர் அரசியலுக்கு, நுாற்றுக்கு, 100 பொருந்தும்.

 ரஜினி, இணைந்த கைகள்

கொள்கைகளில் குத்து, வெட்டு நடத்தும் கட்சிகள் கூட, தேர்தல் களத்தில் கூட்டணி அமைத்து, 'மக்கள் நலனுக்காக, நாட்டின் முன்னேற்றத்திற்காக இந்த கூட்டணியை அமைத்துள்ளோம்' என, தங்களை நியாயப் படுத்தி கொள்கின்றன.உ.பி.,யில், சமாஜ் வாடியை அழிக்கவெனத் துவக்கப்பட்டது, பகுஜன் சமாஜ் கட்சி. ஆனால், இப்போது அசுர பலம் பெற்றுள்ள, பா.ஜ.,வை எதிர்கொள்ள, பரம வைரிகளான பகுஜன் மாயாவதியும், சமாஜ் வாடி அகிலேஷும் ஒட்டிக் கொண்டு விட்டனர்.

இவர்களை போன்றவர்கள் உருவாக்கியது தான், 'அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை; நிரந்தர பகைவரும் இல்லை' என்ற தாரக மந்திரம்.அந்த வகையில், தமிழகத்தில் உள்ள எல்லா கட்சிகளுமே, ஒன்றுடன் ஒன்று என, ஏதாவது ஒரு கூட்டணியில் இருந்தவை தான். சில நேரங்களில், 'தி.மு.க., - அ.தி.மு.க., மட்டும் தான், தமிழக அரசியலில் இதுவரை கூட்டணி வைக்கவில்லை' என, கிண்டலாக சொல்லப்படுவதும் உண்டு.


ஆனால், அந்த கிண்டல், நிஜமாகும் நாள் தொலைவில் இல்லை.ஆம்... நடிகர் ரஜினி, 'சட்டசபை தேர்தல் தான் என் இலக்கு' என, தெளிவாக அறிவித்து விட்டார். 2021 சட்டசபை தேர்தலில், அவர் களம் காண்பது, 100 சதவீதம் உறுதியாகி விட்டது. அதற்கு, இன்னும் இரண்டாண்டுகள் உள்ளன. அப்போது, இப்படி கூட கூட்டணி அமையலாம் என்பதை, கற்பனையாக சிந்தித்தபோது, எழுந்த கதை இது.


இது நடக்காது என்பதற்கு, எந்த உத்தரவாதமும் இல்லை.இனி, அந்த கற்பனை காட்சிகள்.


ஜனவரி, 1, 2021...


ரஜினி புதிய கட்சியை ஆரம்பித்து, தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுபயணம் செய்கிறார். போகும் இடமெல்லாம், அவருக்கு ஆதரவும், வரவேற்பும் பெருமளவில் கிடைக்கின்றன. மாநில, தேசிய, சர்வதேச அளவிலான கருத்துக் கணிப்புகளில், 2021 ஏப்ரல் மாதம் நடக்கும் சட்டசபை தேர்தலில், 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெற்று, அவர் ஆட்சியமைப்பார் என, தெரிவிக்கப்படுகிறது.

'இவை எல்லாம் கருத்துத் திணிப்புகள்' என, ஆளும், அ.தி.மு.க., அரசும், எதிர்க்கட்சியான, தி.மு.க.,வும், 'உதாராக' பேசினாலும், உள்ளூர உதறல் எடுத்து, ராத்துாக்கமின்றி, கூட்டி, கழித்து கணக்கு போடுகின்றன.திரைமறைவாக, இரண்டாம் கட்ட தலைவர்கள் மூலம் நடந்த பல சுற்று பேச்சுகளின் இறுதிக் கட்டமாக, வரலாற்று சிறப்பு மிக்க ஒரு சந்திப்பு, நள்ளிர வில் நடக்கிறது. ஆம்... ஸ்டாலின் - இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., என, மூவரணி, ஓரிடத்தில் சந்தித்து பேசுகிறது.

இ.பி.எஸ்.: வணக்கம் ஸ்டாலின்... நம்ம 2 பேரும், 1989ல் ஒன்றாகவே சட்டசபைக்குள் நுழைந்தோம். ஞாபகம் இருக்கா...?

ஸ்டாலின்: எப்படி ண்ணே மறக்க முடியும்... அன்னைக்கு, சட்டசபை கேன்டீன்ல நீங்க சாப்பிட்ட வடைக்கு கூட, நான் தான், 15 பைசா கொடுத்தேன்...

ஓ.பி.எஸ்.: பழைய கதை எல்லாம் இப்ப எதுக்கு...?

இ.பி.எஸ்.: நாங்கள்ளாம் அப்பவே நண்பர்கள்... ஆனா, நீங்க அப்ப பெரியகுளம் டீ கடையில, பாலுக்கு எடை கட்டிட்டு இருந்தீங்க...

ஓ.பி.எஸ்.: அதை விடுங்க... ரஜினிக்கு, நாளுக்கு நாள் ஆதரவு பெருகிட்டே போகுது... அவரை சமாளிக்க, வேற வழியே இல்லை. நம்ம ரெண்டு கட்சிகளும் கூட்டணி அமைச்சா

தான், சரிப்பட்டு வரும்... நீங்க என்ன சொல்றீங்க...!

ஸ்டாலின்: சரி தான்...இருந்தாலும், எங்க கட்சியின் செயற்குழு, பொதுக்குழுவில் விவாதித்து விட்டு...
இ.பி.எஸ்.: இந்த கதை எல்லாம் இங்க வேண்டாம்... செயற்குழு, பொதுக்குழு எல்லாம்,நீங்களும், உங்க குடும்பமும் தானே... எங்களுக்கு தெரியாதா...?


ஸ்டாலின்: சரி... அதை விடுங்க... நம்ம கூட்டணியை மக்கள் ஏத்துப்பாங்களா...?ஓ.பி.எஸ்.: என்னையே, சி.எம்.,மா ஏத்துக்கிட்டவங்க, நம்ம கூட்டணியை ஏத்துக்காம போயிடுவாங்களா... ஏன்னா, அவங்களுக்கும் பொழுது போக்குக்கு வேற வழியில்லையே...!
இ.பி.எஸ்.: ஆமாங்க... ரொம்ப யோசிக்காதீங்க... உங்களுக்கு ஜூனியரா இருந்த எத்தனை பேர், நாட்டுல முதல்வர் ஆகிட்டாங்க... உங்கமகன் வயசுள்ள அகிலேஷ் கூட, ஒரு ரவுண்டு, சி.எம்.,மா இருந்துட்டாரு... அப்புறம், ரஜினி கோட்டையில கொடி ஏத்துறதை நாம மிக்சர் சாப்பிட்டு, 'டிவி'யில பார்த்துட்டு இருக்கணுமா...?

ஸ்டாலின்: அய்யோ சொல்லாதீங்க... நினைக்கவே நெஞ்சு நடுங்குது... சரி... நாம கூட்டணி அமைச்சுக் கலாம்... ஆனா, என்னையே நம்பியிருக்கிற வைகோ, திருமாவளவன் மாதிரி குட்டி கட்சிகளை என்ன செய்றது...?
இ.பி.எஸ்., (முணுமுணுப்பாக): அவங்க, உங்களை விட்டு போயிருந்தா தான், என்னைக்கோ, சி.எம்., ஆகிருப்பீங்களே...!
ஓ.பி.எஸ்.: ரஜினி, யார் கூடவும் கூட்டணி கிடையா துன்னு தெளிவா சொல்லிட்டாரு... அதனால, இந்த குட்டி கட்சிகளை, நம்ம கூட்டணியில வச்சுக்க லாம்...ஆனா, 'சீட்' கிடையாது..உங்கப்பா பாணியில, இதயத்துல மட்டும் இடம் குடுத்துடுங்க...


அப்புறம் வேணும்னா,உள்ளாட்சி தேர்தல்ல, வைகோ, திருமா, கம்யூ., தலைவர்களுக்கு, தலைக்கு ஒரு கவுன்சிலர் சீட், தாராளமா குடுத்துரலாம்... ஏன்னா, அவங்களுக்கும் நம்மை விட்டா வேற கதி இல்லை...!

ஸ்டாலின்: நல்ல ஐடியா தான்... 'சீட் ஷேரிங்' எல்லாம் எப்படி...?இ.பி.எஸ்.: சரி பாதியா பிரிச்சுக்குவோம்... 234ல, ஆளுக்கு, 117 சீட்... எப்படி...?ஸ்டாலின்: அப்படின்னா முதல்வர் பதவி...?

ஓ.பி.எஸ்.: அதுல, யார் அதிக இடங்களை ஜெயிக்கிறாங்களோ, அந்த கட்சிக்கு, முதல்வர் பதவின்னு வச்சுக்கலாம்...!

ஸ்டாலின்: இந்த கதை எல்லாம், 1980ல, இந்திரா காங்கிரஸ் காலத்துல, எங்கப்பா எழுதி பார்த்து, ஒருத்தர் காலை ஒருத்தர் வாரினது தான் மிச்சம்... நானும் முதல்வர் பதவிக்காக, 30 வருஷமா காத்துட்டு இருக்கேன்... எனக்கும் இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது... முதல்வர் பதவின்னா, கூட்டணிக்கு ஓகே...!
இ.பி.எஸ்.: பரவாயில்லைங்க... நீங்களே எடுத்துக்குங்க...!

ஸ்டாலின்: அப்ப நீங்க என்ன பண்ணுவீங்க...?

ஓ.பி.எஸ்.: எங்களுக்கு ரெண்டு துணை முதல்வர் பதவி மட்டும் தந்துருங்க...!

இ.பி.எஸ்.: உங்களுக்கு வேணும்னா, முதல்வரா இருந்து, துணை முதல்வராகிறது சகஜமா இருக்கலாம்... ஆனா, நாலு வருஷமா முதல்வரா இருக்கிற எனக்கு, ஒரு மாதிரி இருக்குங்க... அதனால, இணை முதல்வர்னு, அவரை விட ஒரு படி மேல ஒரு பதவியை உருவாக்கி, எனக்கு தந்துருங்க...
ஸ்டாலின்: அதை பத்தி எனக்கு கவலையில்லை... 'டீல்' ஓகே... நாளைக்கு பத்திரிகை காரங்களைபார்த்துரலாமா...?

இ.பி.எஸ்.: பார்த்துரலாம்.மறுநாள், ஐந்து நட்சத்திர ஓட்டலில் நடக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில், மூவரும் சேர்ந்து, தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி அறிவிப்பை வெளியிடுகின்றனர்.

இவர்களுடன், மற்ற கட்சி தலைவர்கள் ராமதாஸ், வைகோ, முத்தரசன், பாலகிருஷ்ணன்,

Advertisement

திருமாவளவன், பிரேமலதா உள்ளிட்டோரும் உள்ளனர்

.பத்திரிகையாளர்: இது, பொருந்தா கூட்டணி இல்லையா...?
ஸ்டாலின்: உண்மை தான்... இது, ரஜினிக்கு பொருந்தா கூட்டணி. ஆனால், தமிழகத்துக்கு பொருத்தமான கூட்டணி. காவிரி தண்ணீர் தர மறுக்கும் கர்நாடகாவில் இருந்து வந்தவர், பச்சை தமிழ் மண்ணை ஆள விடலாமா... அதற்காகவே, தமிழர்களான நாங்கள் ஒன்று சேர்ந்துள்ளோம்.
பத்திரிகையாளர்: 50 ஆண்டுகளாக எதிரும், புதிருமாக இருந்தவர்கள், இன்று பதவிக்காக ஒன்று சேர்வதை, மக்கள் ஏற்று கொள்வார்களா....?
ஓ.பி.எஸ்.: பதவிக்காக, இந்த கூட்டணியை அமைக்கவில்லை. எந்த கொள்கையும், கோட் பாடும் இல்லாத ஒருவர் கையில் தமிழகம் சிக்கிவிட கூடாது என்பதற்காக ஏற்படுத்தப் படுற கூட்டணி இது... இன்னும் சொல்லப் போனால், இது ஒரு தர்மயுத்தம்... கருணாநிதி, ஜெயலலிதா வழியில், ஆட்சி அமையும் வரை, இந்த தர்மயுத்தத்தைத் தொடர்வோம்.

ஸ்டாலின்: பத்திரிகையாளர்கள் ஏதோ, வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என பேசக் கூடாது.உடனே,பின் புறத்திலிருந்து, ராமதாஸ்,அன்புமணி,வைகோ, திருமாவள வன், பிரேமலதா ஆகியோர், பின்னணியில் இருந்து ஓடோடி வந்தனர்.

ராமதாஸ்: நடிகர் கையில் நாட்டை சிக்க விடக் கூடாது என்பதற்காக, இந்த கூட்டணிக்கு ஆதரவு தருகிறோம். கார் உள்ள வரை, கடல் நீர் உள்ள வரை எங்கள் ஆதரவு, தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணிக்கே. இது சத்தியம்; வேண்டும் என்றால், பத்திரம் எழுதிக் கூட தருகிறேன்.

அன்புமணி: ரஜினிக்கு என்னங்க தெரியும்... தமிழ்நாட்டுல எத்தனை மாவட்டம், தாலுகா இருக்குன்னே அவருக்கு தெரியாது... சிகரெட்டை துாக்கி போட்டு, வாயில கவ்வுற போட்டி வச்சா மட்டும் தான், அவரால ஜெயிக்க முடியும். தமிழ்நாட்டை ஜெயிக்க முடியாது.
திருமாவளவன்: ஆதிக்க, எதேச்சதிகார, சனா தன சக்திகளின் கைப்பாவையாக விளங்கும் ரஜினியை, இந்த தேர்தலில் வீழ்த்துவதே எங்களின் முதல் இலக்கு.

வைகோ: இலங்கை தமிழர்களை வாழ வைக்க, அவர்கள் வாழ்வில் வசந்தம் மலர, என் சகோதரர் ஸ்டாலின், முதல்வர் நாற்காலியில் அமர்ந்தே தீர வேண்டும். அதுவரை இந்த வைகோ துாங்க மாட்டான். ரஜினி வெற்றி பெற்றால், மதசார்பு அரசியல் நடத்துவார். இந்தியாவின் ஒருமைப்பாட்டை கேள்விக் குறியாக்கி விடுவார். அதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
பிரேமலதா: கேப்டன் ஆதரவு பெற்ற ஸ்டாலின், இ.பி.எஸ்., - ஓ.பி.எஸ்., சகோதரர் கள் ஆட்சிக்கு, எங்கள் ஆதரவு என்றென்றும் தொடரும்.பத்திரிகையாளர்கள் சந்திப்பு முடிந்து, நட்சத்திர ஓட்டலின் தனியறையில், தலைவர்கள் மிக்சர், காபி சாப்பிட்டபடி, 'டிவி' பார்த்து கொண்டிருக்கின்றனர்.


அப்போது, 'பிரேக்கிங் நியூஸ்' ஒளிபரப்பா கிறது.அதில், 'தமிழகத்தில், ரஜினி கட்சி, தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியை தோற் கடிக்க, தேசிய கட்சிகளான, பா.ஜ.,வும், காங்.,ம் கூட்டணி அமைத்தன' என, 'திடும் திடும்' பின்னணி இசையுடன், செய்தி வெளியாக, 'ம்ஹும்... இவரு, சி.எம்., ஆன மாதிரி தான்' என, மற்ற தலைவர்கள், ஸ்டாலினை பரிதாபமாக பார்க்க, அவரோ அதிர்ச்சியில் உறைகிறார். - நமது சிறப்பு நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.Selvaperumal - kuwait,குவைத்
22-ஏப்-201917:20:29 IST Report Abuse

R.Selvaperumalஇது கற்பனை அல்ல ......இது நிஜமாகும் நாள் வெகுதொலைவில் இல்லா ......no need to wait till 2021

Rate this:
Suri - Chennai,இந்தியா
21-ஏப்-201923:18:22 IST Report Abuse

Suriஇவர்களின் ஆசை நிராசை ஆகும். இன்னும் எத்தனை காலத்துக்கு ஒட்டை விழுந்த பலூனுக்கு காற்று அடிப்பார்கள்?

Rate this:
gokul -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201920:19:28 IST Report Abuse

gokulBJP ku next election la rajini a face a vechu jaikanum nu oru nappasai...

Rate this:
மேலும் 21 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X