அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
துவக்கம்!
நான்கு தொகுதிகளுக்கான வேட்புமனு நாளை...
மே.2 -ல் வேட்பாளர் இறுதி பட்டியல் வெளியீடு

தமிழகத்தில், காலியாக உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கு, மே, 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்க உள்ளது. அதற்கான வேட்பு மனு தாக்கல், நாளை துவங்குகிறது.

நான்கு தொகுதி, வேட்புமனு, வேட்பாளர் இறுதி பட்டியல், வெளியீடு

தமிழகத்தில், வேலுார் தவிர, 38 லோக்சபா தொகுதிகளுக்கும், 18 சட்டசபை தொகுதிகளுக் கும்; புதுச்சேரியில், தலா, ஒரு தொகுதியில், லோக்சபாவுக்கும், சட்டசபைக் கும், 18ம் தேதி ஓட்டுப்பதிவு நடந்தது.

இத்தொகுதிகளுக்கு, தேர்தல் அறிவிக்கப் பட்டபோது, காலியாக இருந்த, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி சட்டசபை தொகுதி களுக்கு, நீதிமன்ற வழக்கு காரணமாக, இடைத்தேர்தல் அறிவிக்கப்படாமல் இருந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், சூலுார், எம்.எல்.ஏ., கனகராஜ் இறந்தார்.அதன் காரணமாக, அந்த தொகுதியும் காலியானதாக அறிவிக்கப் பட்டது.

'காலியாக இருந்த, நான்கு சட்டசபை தொகுதி களுக்கும், லோக்சபா தேர்தலுடன், இடைத் தேர்தலை நடத்த வேண்டும்' என, அரசியல் கட்சிகள் வலியுறுத்தின.அதற்கு வசதியாக, நீதிமன்றத்தில் இருந்த வழக்குகளும், முடிவுக்கு வந்தன. இது குறித்து, தேர்தல்

ஆணையம், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் கலந்தாலோசித்தது.

அதன் தொடர்ச்சியாக, 'நான்கு தொகுதிகளுக்கும், ஏழாவது கட்ட லோக்சபா தேர்தலுடன் சேர்த்து, இடைத்தேர்தல் நடத்தப்படும்' என, 9ம் தேதி, தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி,நான்கு சட்டசபை தொகுதிகளுக்கும், நாளை மனு தாக்கல்துவங்குகிறது; வரும், 29ம் தேதி, கடைசி நாள். 30ம் தேதி, மனுக்கள் பரிசீலனை செய்யப் படும்.மனுவை வாபஸ் பெற, மே, 2 கடைசி நாள். அன்று மாலை, வேட்பாளர் இறுதி பட்டியல் வெளி யிடப்படும்.மே, 19ம் தேதி, ஓட்டுப்பதிவு நடக்கும். பதிவான ஓட்டுகள், மே, 23ல், அனைத்து தொகுதி களுடன் சேர்த்து எண்ணப்படும்.

இரண்டு கட்சிகளும் மல்லுக்கட்டு!
தமிழக சட்டசபையில், தற்போது, அ.தி.மு.க., விற்கு, 114 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். இவர்களில், அறந்தாங்கி - எம்.எல்.ஏ., ரத்தினசபாபதி, விருத்தா சலம் - எம்.எல்.ஏ., கலைச்செல்வன், கள்ளக்குறிச்சி - எம்.எல்.ஏ., பிரபு ஆகியோர், தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர்.கொங்கு இளைஞர் பேரவை நிறுவனர் தனியரசு, மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலர் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் ஆகியோர், அ.தி.மு.க.,சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்க ளாக கருதப்படுகின்றனர்.

இவர்களில், தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர், அ.தி.மு.க.,விற்கு எதிராக உள்ளனர். தனியரசு, ஊசலாட்டத்தில் உள்ளார்.

Advertisement

இவர்களை தவிர்த்து விட்டால், அ.தி.மு.க., விற்கு, 108 எம்.எல்.ஏ.,க்கள் மட்டுமே உள்ளனர். எனவே, தனிப் பெரும்பான்மைக்கு, இன்னும், 10 தொகுதிகளில், வெற்றி பெற்றாக வேண்டும். தி.மு.க., கூட்டணிக்கு, தற்போது, 97 எம்.எல். ஏ.,க்கள் உள்ளனர். அந்தக் கூட்டணி, 21 இடங்களில் வெற்றி பெற்றால், ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளது. எனவே, அ.தி.மு.க.,விற்கும், தி.மு.க.,விற்கும், அடுத்த மாதம், 19ல் நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், மிகவும் முக்கியமாக உள்ளது.

ஏற்கனவே முடிந்துள்ள, 18 சட்டசபை தொகுதி களில், எத்தனை தொகுதிகளில், வெற்றி கிடைக்கும் என்பது தெரியாததால், நான்கு தொகுதிகளிலும் வெற்றிக்கு, இரு கட்சிகளும் மல்லுக்கட்டும்; பிரசாரம் களைகட்டும். அதற் கேற்ப, இரு கட்சி தலைமைகளும், அனைத்து மாவட்ட நிர்வாகிகளையும், நான்கு தொகுதி களில் குவித்து வருகின்றன. அ.தி.மு.க.,வில், அமைச்சர்கள் அனைவருக்கும், இடைத் தேர்தல் பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201909:05:47 IST Report Abuse

Srinivasan Kannaiyaதேர்தல்கள் வர வர வாக்காளர்களுக்கு அக்ஷ்யபாத்திரமாக மாறி வருகிறது

Rate this:
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
21-ஏப்-201909:04:57 IST Report Abuse

ஆரூர் ரங்22 இல் 21 வெல்வது சாத்தியமில்லை என்பது தீயமுக குறுநில மன்னர்களுக்கு நன்கு தெரியும். அதனாலதான் கட்சி மேலிடம் அனுப்பும் பெட்டிகளை பதுக்குவதிலேயே குறியாக இருப்பதாக செய்தி. மருமகன் டரியலீசனை நம்பி சுடலி மோசம் போகிறார்

Rate this:
blocked user - blocked,மயோட்
21-ஏப்-201908:35:19 IST Report Abuse

blocked userசுடலை புலி வருது, புலி வருது என்று பயந்து கொண்டு இருந்தார்... உணமையாகவே புலி வரப்போகிறது...

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X