அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டளிப்பதை கட்டாயமாக்க பொது விவாதம்: ராமதாஸ்

Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (19)
Advertisement
 ஓட்டளிப்பதை கட்டாயமாக்க  பொது விவாதம்: ராமதாஸ்

சென்னை,:'ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவது குறித்து, பொது விவாதத்தை, தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும்' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:தமிழகத்தில், 38 லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தலில், 71.90 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. நான்கில் ஒரு பங்குக்கும், கூடுதலான வாக்காளர்கள், தங்களின் விலை மதிப்பற்ற வாக்குரிமையை, செலுத்த தவறியதை, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் செயலாக பார்க்க முடியவில்லை.

ஊரகப் பகுதிகளில், ஓட்டுப்பதிவு அதிகமாக இருப்பது, கிராமப்புற மக்களிடம், ஓட்டளிக்கும் ஆர்வமும், துடிப்பும், அதிகமாக இருப்பதை உறுதி செய்கிறது. ஓட்டுப்பதிவு மிகவும் குறைவாக உள்ள தொகுதிகள் பட்டியலில், தென் சென்னை, மத்திய சென்னை, ஸ்ரீபெரும்புதுார், வட சென்னை தொகுதிகள், முன்னணியில் உள்ளன. அதேபோல், கோவை, மதுரை மாநகரத் தொகுதிகளிலும், குறைந்த ஓட்டுகள் பதிவாகி இருப்பது, பெருமைப்படக்கூடிய விஷயமல்ல.வசதிகளை அனுபவிக்காத ஊரக மக்கள், அதிகம் ஓட்டளிக்கும்போது, அதிநவீன வசதிகளை அனுபவிக்கும் நகர்ப்புறங்களில், பெரும்பான்மையினர், ஓட்டளிப்பதில் ஆர்வம் காட்டாதது சரியா என்பதை, அவர்களின் மனசாட்சி தான் தீர்மானிக்க வேண்டும்.

தேர்தலில் ஓட்டுப் போடாதவர்கள், தங்கள் செயலை, எந்த வகையிலும், நியாயப்படுத்தவே முடியாது. ஜனநாயகத்தின் முக்கியத்துவம் குறித்து, சமூக வலைதளங்களில், பக்கம் பக்கமாக எழுதித் தள்ளும் புரட்சியாளர்கள், வெயிலுக்கு கூட, ஓட்டுச்சாவடி பக்கம் ஒதுங்காதது, முரண்பாடுகளின் உச்சம்.மக்களுக்காக நடத்தப்படும் ஆட்சியை, நுாறு சதவீதம் மக்களும் இணைந்து தேர்ந்தெடுக்காவிட்டால், அது முழுமையான ஜனநாயகமாக இருக்காது.ஜனநாயகம், நமக்கு அளித்திருக்கும், அனைத்து உரிமைகளையும் அனுபவிக்கும் நாம், ஓட்டு செலுத்துவதற்கு மட்டும் மறுப்பது, மிகப்பெரிய கடமை தவறுதலாக பார்க்கப்பட வேண்டும்.
உலகில், 38 நாடுகளில், ஓட்டளிப்பது கட்டாயம். அதேபோல், இந்தியாவிலும் கட்டாயமாக்க வேண்டும் என்ற, குரல்கள் ஒலிக்கின்றன. நாட்டின், எந்தப் பகுதியிலும் ஓட்டளிக்கலாம் என்பது உள்ளிட்ட, சீர்திருத்தங்களை செய்வதன் வழியே, இதை சாத்தியமாக்க முடியும்.இந்தியாவில், ஓட்டளிப்பதை கட்டாயமாக்குவது குறித்த, பொது விவாதத்தை, தேர்தல் ஆணையம் முன்னெடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
21-ஏப்-201920:24:36 IST Report Abuse
sankar ராமதாஸ் அவர்களே ஓட்டளிப்பது கட்டாயமாக்கலாம் . ஓட்டளிக்க ஒரு வரம் அவகாசம் அளிக்கலாம் . அதே போல் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வரவு செலவுகளை ஐந்தாண்டுக்கு ஒரு முறை சரிபார்த்து இதில் ஊழல் இருந்தால் அப்பொழுதே அவர்களை தகுதி நேரம் செய்து விட்டு பின்னர் தேர்தல் நடத்தலாம் . அதாவது அந்த தேர்தலில் அந்த ஆட்சி போட்டி போடா கூடாது . இதுக்கு நீங்க ரெடியா
Rate this:
Share this comment
Cancel
oce - tokyo,ஜப்பான்
21-ஏப்-201918:26:44 IST Report Abuse
oce வீட்டுக்கு வர யோக்கியன் சொம்பைத்தான் திருடுவானா. வீட்டுக்குள் உள்ள மற்றதை எடுக்க மாட்டானா.
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-201917:06:32 IST Report Abuse
Malick Raja யோக்கியர் வர்ரார் செம்பெடுத்து உள்ளே வை என்று சொல்லுமளவுக்கு ராமதாஸ் தமது மனிதமாண்பையே இழந்துவிட்டார் அப்படிப்பட்ட ஒருவர் இதுபோன்ற ஆலோசனைகள் கூற தகுதியற்றவர் என்பதற்கு இவரது நடவடிக்கைகள் சில .. 1. நானோ ,என்குடும்பத்தாரோ அரசியல் பதவிகளை பெறமாட்டோம் .. அப்படி பெற்றால் செருப்பால் அடியுங்கள் என்றார் .. ஆனால் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி என்ற போது இவரின் வாக்குறுதி கழிவு நீரோடு சென்றது .. 2.திராவிட கட்சிகளுடன் மாறி மாறி மானமில்லாமல் கூட்டுவைத்து ,, பின்னர் அவர்களோடு சேர்வது பெற்றதாயுடன் கூடுவதற்கு சமம் என்று சொல்லி இப்போது அதிமுகவுடன் கூட்டுப்பொட்டு மனிதமாண்பை இழந்தது 3.அதிமுக ஊழலை புத்தகமாக வெளியிட்டு ,ஊழல் புகாரை கவர்னரிடம் கொடுத்து , அதன்பின் இபிஎஸ் ,ஓபிஎஸ் இருவரையும் டயர் நக்கிகள் என்று ஆபாசமாக பேசி அவர்களை புகழ்ந்து பேசுவது மனித பண்பை இழந்தது . 4.ஊழலுக்கு எதிராக பேசி தனது மகனே ஊழல் வழக்கில் இருப்பது .. வன்னிய பெருங்குடி மக்களை ஏமாற்றி அவர்களைவைத்து அரசியல் செய்து இன்று 5,000.கோடிரூபாய்கள் மதிப்பில் சொத்துக்களுக்கு அதிபதியாக இருப்பது .. எனவே இனியும் பேசினால் மக்கள் ஓட ஓட விரட்டும் நிலை வந்தே தீரும்
Rate this:
Share this comment
Abdul Rahman - Madurai,இந்தியா
21-ஏப்-201921:44:01 IST Report Abuse
Abdul Rahmanமிக சரியான கருத்து. நீங்கள் பதிவிட்ட கருத்துக்களில் இதில் ஒன்றில் தான் நான் ஒத்துப்போகிறேன்....
Rate this:
Share this comment
Darmavan - Chennai,இந்தியா
22-ஏப்-201907:35:02 IST Report Abuse
Darmavanஉண்மையில் எந்த அரசியல்வாதியின் பேச்சையும் நம்பக்கூடாது. அதுவும் தற்கால அரசியல்வாதிகளை. எவனும் யோகியானில்லை. இதற்கு முதல் காரணம் சட்டத்தில் இவர்களுக்கு எந்த கட்டுப்பாடுமில்லை.. இதற்கு எந்த போராட்டமும் மக்கள் செய்வதில்லை.. இந்த பதவிக்கான வசீகரத்தை முதலில் எடுக்க வேண்டும். அப்போது கொஞ்சம் சீர்படும்.ஆனால் யார் செய்வது...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X