அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க., மீது அதிக வழக்கு

சென்னை: வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக, அ.தி.மு.க., மீது, அதிக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக, தி.மு.க., மீது அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன.ஒட்டுமொத்தமாக, தேர்தல் விதிகளை மீறியதாக, தி.மு.க., மீது, அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன.

 அ.தி.மு.க.,  அதிக வழக்கு



இது குறித்து, தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது: தமிழகத்தில், தேர்தல் விதிகளை மீறி, சுவர் விளம்பரம் எழுதியதாக, சுவரொட்டிகள் ஒட்டியதாக, 3,732 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. அதில், அ.தி.மு.க., மீது, 1,149; தி.மு.க., மீது, 1,421; மற்றவர்கள் மீது, 1,162 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு, பணம் கொடுத்தல்,

மதுபானம் வழங்குதல், பரிசுப் பொருட்கள் வழங்குவது தொடர்பாக வந்த புகார்கள் அடிப்படையில், 565 வழக்குகள்,பதிவு செய்யப்பட்டுள்ளன.

அ.தி.மு.க., மீது, 194; தி.மு.க., மீது, 155; மற்றவர்கள் மீது, 216 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அடுத்து, மத ரீதியாக, ஜாதி ரீதியாக பேசியது, மற்றவர்களை தரக்குறைவாக பேசியது போன்ற புகார்களின் அடிப்படையில், 393 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில், அ.தி.மு.க., மீது, 107; தி.மு.க., மீது, 118; மற்றவர்கள் மீது, 168 வழக்குகள் பதிவாகி உள்ளன.மக்கள் புகார் அளிப்பதற்காக உருவாக்கப் பட்ட, 'சி விஜில்' எனும், 'மொபைல் ஆப்' வழியே, 2,823 புகார்கள் வந்தன.இவற்றில், 1,916 புகார்கள் தள்ளுபடி செய்யப்பட்டன; 1,264 புகார்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்னும், 43 புகார்கள் நிலுவையில் உள்ளன.இவ்வாறு, அவர்கூறினார்.

மறு ஓட்டுப்பதிவு நடக்குமா?:

தர்மபுரி லோக்சபா

Advertisement

தொகுதிக்கு உட்பட்ட, பாப்பிரெட்டிப்பட்டி சட்டசபை தொகுதியில், எட்டு ஓட்டுச்சாவடி களில், முறைகேடு நடந்ததாக, புகார்கள் வந்தன. அதேபோல், திருவள்ளூர், கடலுார் லோக்சபா தொகுதிகளில், தலா, ஒரு ஓட்டுச்சாவடியில், முறைகேடு நடந்ததாக, புகார் வந்துள்ளது.

இது தொடர்பாக, தேர்தல் பார்வையாளர்கள், தேர்தல் ஆணையத்திற்கு, அறிக்கை அளித்து உள்ளனர். எனவே, அந்த ஓட்டுச்சாவடிகளில், மறு ஓட்டுப்பதிவு நடக்குமா என்ற, எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.


Advertisement

வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201909:10:38 IST Report Abuse

Srinivasan Kannaiyaதேர்தல் முடிந்தபின்னேதான் விசாரிப்பீங்க

Rate this:
blocked user - blocked,மயோட்
21-ஏப்-201908:39:08 IST Report Abuse

blocked userஅடாவடியில் திமுக... காசு கொடுப்பதில் அதிமுக... தெரிந்ததுதானே... திமுகவிடம் இல்லாத காசா? ஜெயிப்போம் என்ற நம்பிக்கை குறைவாக இருப்பதால் குறைவாகவே கொடுக்கிறார் சுடலை...

Rate this:
blocked user - blocked,மயோட்
21-ஏப்-201908:34:15 IST Report Abuse

blocked user"அதற்கு அடுத்தபடியாக, தி.மு.க., மீது அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன.ஒட்டுமொத்தமாக, தேர்தல் விதிகளை மீறியதாக, தி.மு.க., மீது, அதிக வழக்குகள் பதிவாகி உள்ளன" - முன்னுக்குப்பின் முரண் என்பது இதுதான்... வழக்குக்களின் எண்ணிக்கையை போட்டு இருந்தால் பாராட்டலாம்... இப்படியா சொதப்புவது...

Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X