அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
தொகுதி வாரியாக ஓட்டு
ஸ்டாலினிடம் விளக்கம்

லோக்சபா தேர்தலில், ஓட்டுச்சாவடி வாரியாக, தி.மு.க.,வுக்கு கிடைக்கும் ஓட்டுகள் குறித்து, அக்கட்சி தலைவர் ஸ்டாலினிடம், மூத்த நிர்வாகிகள் விளக்கினர்.

இது குறித்து, அக்கட்சி வட்டாரங்கள் கூறியதாவது:லோக்சபா தேர்தலுடன், 18 சட்டசபை தொகுதிகளுக்கு, 67 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓட்டுச்சாவடி மையங்களில், 18ல், ஓட்டுப்பதிவு நடந்தது.

 தொகுதி வாரி, ஓட்டு, ஸ்டாலின், விளக்கம்


தலா, ஒரு ஓட்டுச்சாவடியில் சராசரியாக, 700 முதல், 1,200 வரை ஓட்டுகள் உள்ளன. லோக்சபா தேர்தலில், காங்கிரஸ் - ம.தி.மு.க., - இரு கம்யூனிஸ்ட்கள் - விடுதலை சிறுத்தை - முஸ்லிம் லீக் - ஐ.ஜே.கே., உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்று இருந்தன. புதுச்சேரியும் சேர்த்து, மொத்தம் உள்ள, 40 தொகுதிகளில், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கியது போக, தி.மு.க., 20ல் போட்டியிட்டது.

தேர்தல் முடிந்த நிலையில், சென்னை, அறிவாலயம் மற்றும் ஆழ்வார்பேட்டையில் உள்ள, தன் வீட்டில், ஸ்டாலின், கட்சி யின் மூத்த நிர்வாகிகள், மாவட்ட செயலர்களிடம், ஓட்டுப்பதிவு குறித்து, ஆலோசனை நடத்தினார்.

அப்போது, அவரிடம், 'தி.மு.க., போட்டியிட்ட, 20

தொகுதிகளிலும், ஓட்டுச்சாவடி வாரியாக, தி.மு.க., வுக்கு என, 100 முதல், 150 ஓட்டுகள் முழுவதுமாக கிடைத்து உள்ளன; இதை, அந்த நபர்களிடம் பேசி, உறுதி செய்யப்பட்டுள்ளது. 'அ.தி.மு.க.,வுக்கு இணையாக, தி.முக., தரப்பிலும், வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்யப்பட்டது.

இதனால், எந்த கட்சியும் சாராதவர்களின் ஓட்டு களும், தி.மு.க.,வுக்கு கிடைத்து உள்ளது' என, ஒவ்வொரு தொகுதி வாரியாக, விரிவாக, நிர்வாகி கள் விளக்கினர்.இவ்வாறு, அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

மே 1 முதல் பிரசாரம்


இடைத்தேர்தல் நடக்க உள்ள, நான்கு சட்டசபை தொகுதிகளில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மே, 1 முதல், பிரசாரம் செய்ய உள்ளார். நான்கு தொகுதி களுக்கும், தி.மு.க., சார்பில், வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒட்டப்பிடாரம் - சண்முகய்யா, திருப்பரங்குன்றம் - சரவணன், அரவக்குறிச்சி - செந்தில் பாலாஜி, சூலுார் - பொங்கலுார் பழனிசாமி ஆகியோர் வேட்பாளர் களாக போட்டிஇடுகின்றனர்.

இந்த தொகுதிகளுக்கு, முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், மாவட்ட செயலர்கள், தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின், மே, 1, 2 ஆகிய நாட்களில், ஒட்டப்பிடாரம் தொகுதியில் பிரசாரம் செய்கிறார்.

அதைத் தொடர்ந்து, மே, 3, 4 தேதிகளில், திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 5, 6ம் தேதி,

Advertisement

சூலுார் தொகுதியிலும், 7, 8ம் தேதி, அரவக்குறிச்சி தொகுதியிலும், தேர்தல் பிரசாரம் செய்ய உள்ளார்.

ஆலோசனை


இடைத்தேர்தல் தொடர்பாக, சென்னையில் உள்ள, கட்சி அலுவலகமான அறிவாலயத்தில், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், ஒவ்வொரு சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களுடன், தனித்தனியே ஆலோசனை நடத்தினார்.

காலையில், ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களுடனும், மாலையில், அரவக்குறிச்சி, சூலுார் சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களுடனும், ஆலோ சனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில், தி.மு.க., பொருளாளர் துரைமுருகன், அமைப்புச் செயலர், ஆர்.எஸ்.பாரதி, மகளிர் அணி செயலர் கனிமொழி மற்றும் நிர்வாகிகள், கலந்து கொண்டனர்.கூட்டத்தில், தேர்தலில் வெற்றி பெற, மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து, ஆலோசிக்கப்பட்டது.
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-ஏப்-201900:20:50 IST Report Abuse

Girijaயாரு சீனியர் யாரு ஜூனியர் என்றில்லாமல் நிலைமையை பார்த்தீங்களா? வைகோ திருமா அறிவாலயம் கேட்டிலிருந்து தரையில் உருண்டுகொண்டே சூசகமாக கோவிந்தோ கோவிந்தோ என்று கூவிக்கொண்டு உள்ளே சென்றனராம்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
21-ஏப்-201918:23:00 IST Report Abuse

oce2ஜி ஸ்பெக்ட்,ம் பணம் இன்னும் பல திமுகவினரிடம் பிரித்து கொடுத்திருக்கலாம். ரெய்டு பண்ணினால் வெளியே வரும்.

Rate this:
தோலுரிப்பவன் - TAMIL NADU,இந்தியா
21-ஏப்-201919:30:12 IST Report Abuse

தோலுரிப்பவன் 2 G இன்னும் நிரூபிக்கப்படவில்லை ...

Rate this:
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
21-ஏப்-201917:12:51 IST Report Abuse

Natarajan Ramanathanவேலூரில் மாட்டிய பணம் தங்களுடையது அல்ல என்று துக்கம் தொண்டையை அடைக்க புளுகினார்கள். இப்போது கனரா வங்கியில் வேலை பார்க்கும் துரை முருகனின் உறவினர், தனது வங்கியில் இருந்து தான் 11,50 கோடிக்கு 200 ரூபாய் நோட்டுக்களாக மாற்றி தந்ததாக வாக்கு மூலம் கொடுத்து அவரை வங்கி தற்காலிக வேலை நீக்கமும் செய்துவிட்டது. எனவே அந்த சிக்கல் கண்டிப்பாக தீயமுகவுக்கு மிகப் பெரிய பிரச்சனையாக உருவெடுக்கும்.

Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X