சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
ஜாதிவெறி, இரும்புக்கரம்!

தமிழகத்தில், தேர்தலை மையமாக வைத்து, ஜாதி வெறியை துாண்ட, சில சக்திகள், ரகசிய திட்டம் தீட்டியுள்ள, அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இதனால், பொன்பரப்பி, பொன்னமராவதி கலவர சம்பவங்கள், மேலும் பரவாமல் தடுக்கப்படுமா என்ற கேள்வியும், பீதியும் எழுந்துள்ளது. இதையடுத்து, கலவரத்தை துாண்டும் சக்திகளை, இரும்புக்கரம் கொண்டு அடக்க, போலீஸ் தயாராகி வருகிறது.

அரியலுார் மாவட்டத்தில், பொன்பரப்பி என்ற கிராமம் உள்ளது. அங்கு, இரு சமூகத்தினர் அதிகம் உள்ளனர். இந்த கிராமம், சிதம்பரம் லோக்சபா தொகுதியில் உள்ளது.அந்த தொகுதியில், தி.மு.க., கூட்டணியில், விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன், 'பானை' சின்னத்தில் போட்டியிட்டார்.

எதிர்ப்பு


ஏப்ரல், 18ல், ஓட்டுப்பதிவு தினத்தன்று, பொன்பரப்பியில் உள்ள, ஒரு ஓட்டுச்சாவடியின் அருகில்இருந்த பானையை, ஒரு சமூகத்தை சேர்ந்த சிலர் உடைத்தனர். அதில், ஒருவர் மாற்றுத் திறனாளி. பானை உடைத்ததற்கு, மற்றொரு சமூகத்தினர், எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால், இரு தரப்பிற்கும் இடையில், கைகலப்பு ஏற்பட்டது. உடனே, அந்த தகவல் பரவியதும், ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினர் வசிக்கும்பகுதிக்குள் புகுந்து, வீடுகள், வாகனங்களை அடித்து நொறுக்கினர்.குறிப்பிட்ட சமூகத்தின் பெயரை கூறி, இழிவாக பேசினர். இதனால், அந்த இடத்தில் கலவரம்ஏற்பட்டது.இரு தரப்பினரும் மோதிக் கொள்ளும் சூழல் உருவானதால், பதற்றம் ஏற்பட்டது. உடனே, தேர்தல் டி.ஜி.பி., அஷுதோஷ் சுக்லா உத்தரவில், பொன்பரப்பியில், அமைதி திரும்பும் வகையில், போலீசார் குவிக்கப்பட்டனர். தொடர்ந்து, வீடுகளை தாக்கியவர்களை கண்டறிந்து, அவர்கள் மேல், வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில், இரு சமூகத்தை சேர்ந்த அரசியல் சக்திகள், பொன்பரப்பியில், மேலும் கலவரத்தை ஏற்படுத்தி, அரசியல் ஆதாயம் தேட முயற்சித்தன. உளவு போலீசார் வாயிலாக, அந்த திட்டத்தை, போலீசார் முறியடித்தனர்.தொடர்ந்து, பிரச்னைக்கு உரிய நபர்களை, அவர்கள் கண்காணித்து வருகின்றனர். அங்குள்ள கிராமங்களிலும், போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
தற்போது, பொன்பரப்பியில், அரியலுார் மாவட்ட, எஸ்.பி., தலைமையில், 24 மணி நேரமும், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இதனால், அங்கு, அமைதி திரும்பி உள்ளது. கலவரத்தை துாண்டுவது, நடத்துவது மற்றும் அவை தொடர்பாக, சமூக வலைதளங்களில் தகவல் பதிவிட்டால், அவர்கள் மேல், கடும் நடவடிக்கை எடுக்கப் போவதாக, போலீசார் எச்சரித்துள்ளனர். சமூக வலைதளங்களை கண்காணிக்க, டி.ஜி.பி., அலுவலகம், அரியலுார், எஸ்.பி., அலுவலகத்தில், தனி குழு அமைக்கப்பட்டு உள்ளது.


பொன்னமராவதி


புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில், இரு சமூகத்தை சேர்ந்தவர்கள், அதிகம் வசிக்கின்றனர். தேர்தலுக்கு முன், ஒரு சமூகத்தினர், மற்றொரு சமூகத்தினரை மிகவும் இழிவுப்படுத்தும் வகையில், 'வாட்ஸ் ஆப்' என்ற செயலியில், 'ஆடியோ' பதிவை வெளியிட்டனர். அதில், மிகவும் ஆபாசமானகருத்துகள் இருந்தன.
இதனால், பொன்னமராவதியில் வசிக்கும், அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள், கொதித்து எழுந்தனர். அவர்களில், 1,000க்கும் மேற்பட்டோர், காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். குறிப்பாக பெண்கள், கையில் துடைப்பதுடன் சென்றனர். அப்போது, ஆடியோ பதிவு வெளியிட்ட நபரை, கைது செய்யு மாறு வலியுறுத்தினர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
திடீரென, அந்த கூட்டத்தில் இருந்த இளைஞர்கள், காவல் நிலையம் அருகில் இருந்த, தெரு விளக்குகளை உடைத்ததால், பதற்றம் ஏற்பட்டது.இதனால், 27 பெண்கள், 12 இளைஞர்களை, போலீசார், காவல் நிலையத்திற்குள் அழைத்து சென்றனர். அவர்களை, விடுவிக்க வேண்டும் என, அந்த சமூகத்தினர் போராட்டம் நடத்தியதால், திடீரென கலவரம் ஏற்பட்டது.இந்த கலவரத்தை துாண்டி விட்டு, மேலும் பரவ செய்ய, சில சக்திகள் சதித்திட்டம் தீட்டியுள்ள தகவல், போலீசாருக்கு கிடைத்தது.
அதையடுத்து, மத்திய மண்டல, ஐ.ஜி., வரதராஜு தலைமையில், அதிரடி படை போலீசார், துப்பாக்கி ஏந்தியபடி, கலவரத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, போலீசார் மீதும், கல் வீச்சு உள்ளிட்ட தாக்குதல் நடத்தப்பட்டது.
அதில், மூன்று காவலருக்கு மண்டை உடைந்தது. எனினும் போலீசார், அதிரடி நடவடிக்கை எடுத்து, கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.அங்கு, அமைதி திரும்பும் வகையில், நேற்று முன்தினம், வரதராஜு தலைமையில், போலீசார் அணிவகுப்பு ஊர்வலம் நடத்தினர். தொடர்ந்து

போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.
மேலும், பொன்னமராவதியை சுற்றியுள்ள, 30 கிராமங்களிலும், மூன்று நாட்களுக்கு, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. நேற்று, புதுக்கோட்டையில் உள்ள அனைத்து, 'டாஸ்மாக்' மது கடைகளும் மூடப்பட்டன. இன்றும், மூட உத்தரவிடப்பட்டு உள்ளது.தொடர்ந்து, ரோந்து வாகனத்தில் வலம் வரும் போலீசார், ஒலிபெருக்கி வாயிலாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதோடு மட்டுமின்றி, உளவு போலீசார், அந்த ஊரிலேயே தங்கி, கலவர தகவல்களை சேகரித்து வருகின்றனர்.இதுகுறித்து, ஐ.ஜி., வரதராஜு கூறியதாவது:இரு சமூகங்களுக்கு இடையில், மோதல் ஏற்படுத்தும் விதமாக, 'வாட்ஸ் ஆப்' வாயிலாக, ஆடியோ வெளியிட்டது தொடர்பாக, வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், அடையாளம் காணப்பட்டு, அவர்கள் மீதும், வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.
பொன்னமராவதி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.அங்கு, போலீசார், 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பாதுகாப்பு நடவடிக்கை தொடரும்; மக்கள் அச்சப்பட வேண்டாம்.அதேபோல், பொதுச் சொத்துக்களுக்கு, எந்த சேதமும் ஏற்படாத வகையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன; இதுவும், தொடரும்.
கலவரம் ஏற்படுத்தும் வகையில், விஷமத்தனமான கருத்துக்களை, 'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' என, எந்த வகையில் பதிவிட்டாலும், அவர்கள், உடனே கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்படுவர்.இவ்வாறு, அவர் எச்சரித்தார்.மதுக் கடைகளை மூடஊழியர்களுக்கு அனுமதி?வன்முறை ஏற்படும் இடங்களில், மதுக் கடைகளை, தற்காலிமாக மூடுவது தொடர்பாக, தாங்களே முடிவு எடுக்க அனுமதிக்குமாறு, 'டாஸ்மாக்' நிர்வாகத்திற்கு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழக அரசின், டாஸ்மாக்

நிறுவனத்திற்கு, 5,200 மது கடைகள் உள்ளன. இவை, மதியம், 12:00 மணி முதல் இரவு, 10:00 மணி வரை செயல்படுகின்றன.ஜாதிய ரீதியிலாக செயல்படும் சில அமைப்புகள், ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் ஈடுபடும்போது, அரசுக்கு, தங்களின் எதிர்ப்பை தெரிவிக்க, அந்த பகுதியில், மது கடைகளைத் தாக்க முயற்சிக்கின்றனர்.
இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:சிலர், தாங்கள் நடத்தும் போராட்டத்தில், மது கடைகளுக்குள் புகுந்து, மது பாட்டில்களை துாக்கி போட்டு உடைக்கின்றனர்; ஊழியர்களையும் தாக்குகின்றனர்.பின், போலீசார் வருவதற்குள், கலவரக்காரர்கள் தப்பி விடுகின்றனர். போலீசார், தற்காலிமாக, கடைகளை மூடச் சொல்கின்றனர். அந்த விபரத்தை, டாஸ்மாக் மாவட்ட மேலாளரிடம் தெரிவித்தால், கண்டுகொள்வதில்லை.
கலவரம் ஓயும்வரை, வெளிப்புறமாக மூடி, கடைக்குள் இருக்குமாறு கூறுகின்றனர். சிறிது நேரத்தில், கடையை திறக்க கூறுகின்றனர். ஆனால், போலீசார் மறுக்கின்றனர். தற்போது, லோக்சபா தேர்தலை முன்னிட்டு, சில இடங்களில், வன்முறைகள் நடந்தன. இதனால், பிரச்னைக்கு உரிய இடங்களில், மதுக் கடைகளை, தற்காலிமாக மூட, ஊழியர்களே முடிவு எடுக்க, அதிகாரிகள் அனுமதிக்க வேண்டும். அந்த விபரத்தை, போலீஸ் வாயிலாக உறுதி செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

உளவு துறை, 'பெயில்!'


தேர்தல் சமயங்களில், பதற்றமான இடங்கள், பிரச்னைக்கு உரிய இடங்களை கண்டறிந்து, அங்கு, பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்த, உளவு துறை, முன்கூட்டியே தகவலை சேரித்து, உயர் போலீஸ் அதிகாரிகளிடம், தர வேண்டும். அதற்கு ஏற்ப, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
பொன்பரப்பி மற்றும் பொன்னமராவதியில் ஏற்பட்ட கலவரங்கள் தொடர்பாக, உளவு துறை போலீசார், சரியாக செயல்படாமல் இருந்து உள்ளனர். பொன்பரப்பியில், ஏற்கனவே, இரு சமூகத்தினர் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. அதற்கு ஏற்ப, தற்போது, பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்திருக்க வேண்டும்.அதேபோல், சமூக வலைதளங்களில், இரு சமூகத்தினர் இடையில், மோதல் ஏற்படும் வகையில், வாசகங்கள் வெளியிடுவது தொடர்பாக, ரகசிய கண்காணிப்பு நடத்த வேண்டியது, உளவு துறையின் அன்றாட பணி.
தமிழகத்தின், ஏதோ ஒரு மூலையில், பிரச்னைக்கு உரிய, போஸ்டர் ஒட்டப்பட்டு இருந்தாலும், அதை உளவு துறை கண்டறிந்து, உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்து, மோதலை தடுக்க வேண்டும். ஆனால், பொன்பரப்பி, பொன்னமராவதி ஆகிய ஊர்களில் நடந்த மோதல்களை தடுக்க, உளவு துறை தவறிவிட்டது.
- ஓய்வுபெற்ற உயர் போலீஸ் அதிகாரி
- நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (51)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
21-ஏப்-201920:49:47 IST Report Abuse

kulandhai Kannanஇதில் மதமாற்ற தீய சக்திகளின் சதி உள்ளதா என்ற கோணத்தில் ஆராயவேண்டும்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
21-ஏப்-201918:09:50 IST Report Abuse

oceஆற்ங்கரையோரங்களில் தங்கி வாழ்ந்தவன் ஐம்புல காலைக்கடன்களை கழித்து நீராடி உடம்பையும் மனதையும் துல்லியமாக வைத்து இறைவனை வணங்கினான். அவனை உயர்ந்தவன் என்றனர். காட்டில் திரிந்தவன் மிருகங்களை வேட்டையாடி அதை உணவாக உண்டான். ஐம்பலன்களின் தூய்மை பற்றி அவன் கவலைப்பட்டானில்லை. நாற்றம் என்ன என்பது அவனுக்கு தெரியவில்லை. பசியை. எவ்வகையிலாவது போக்குவதொன்றையே அவன் முக்கியமாக எண்ணினான். தரமற்ற வாழ்வில் அவனே அவனை தாழ்த்திக் கொண்டான். இதற்கு ஜாதி என்ன செய்யும்.

Rate this:
oce - tokyo,ஜப்பான்
21-ஏப்-201917:58:48 IST Report Abuse

oceஅவனவனிடமுள்ள பழக்க வழக்கங்களே அவனை உயர்த்தியும் தாழ்த்தியும் வைக்கின்றன. இவற்றை ஜாதி பெயரிட்டு பிரிவினை செய்வது தவறு.

Rate this:
மேலும் 48 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X