தயார் நிலையில் தி.மு.க.,

Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (1)
Advertisement
 தயார் நிலையில் தி.மு.க.,

தயார் நிலையில் தி.மு.க.,

தமிழகத்தில், ஒரு வழியாக லோக்சபா தேர்தல் முடிந்தது. வெயிலில் அலைந்து, திரிந்து பிரசாரம் செய்த தலைவர்கள், ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றனர்.ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற ஆளுமைகள், இல்லாமல் நடந்த, முதல் தேர்தலின் முடிவுகள், எப்படியிருக்கும் என, அனைவரும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தி.மு.க., தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.நடந்து முடிந்த தேர்தலின், கள நிலவரம், ராகுல் பிரசாரம் மற்றும் சாமானியரிடம் இருக்கும், மோடி எதிர்ப்பு மனநிலை, ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, மோடி 'அவுட்' என்கிறார், தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர்.'மற்ற மாநிலங்களிலிருந்து, எங்களுக்கு வரும் செய்திகளும், மோடி மீண்டும் பிரதமராக முடியாது; காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என சொல்லும் நிலையில், நாங்கள் அமைச்சர்கள் ஆவோம்' என்கிறார் அவர்.தமிழகத்தில், பெரும்பான்மையான இடங்களில், வெற்றி உறுதி என, தி.மு.க.,வினர் சந்தோஷப்படுகின்றனர்.தி.மு.க., தரப்பிலிருந்து யார் யார் மத்திய அமைச்சராவர் என, இப்போதே விவாதம் தொடங்கி விட்டதாம். முக்கிய குடும்பத்திலிருந்து, எத்தனை பேருக்கு பதவி; ஒருவருக்கா அல்லது இருவருக்கா என, கட்சிக்குள் பட்டிமன்றம் நடந்து வருகிறது.இன்னொரு பக்கம், தி.மு.க., தலைவர்கள் சிலர், இப்போதே, டில்லியில் வீடு தேட ஆரம்பித்து விட்டனர்.ஏற்கனவே, அமைச்சர் பதவி வகித்த, சில, தி.மு.க., பிரபலங்கள், டில்லியில், தங்களுக்கு எந்த இடத்தில் அரசு பங்களா வேண்டும் என முடிவு செய்துவிட்டனராம்.'ஏற்கனவே வசித்த வீட்டில் பிரச்னை, அது வேண்டாம், பார்லிமென்டிற்கு அருகில் வீடு கேட்க வேண்டும்' என, ஒருத்தர் முடிவெடுத்திருக்கிறாராம்.இன்னொருவரோ, தான் முன்பு அமைச்சராக இருந்த போது, வசித்த பங்களாவே வேண்டும் என சொல்கிறாராம்.இப்படி, தி.மு.க.,வைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 வரை காத்திருக்காமல், அலை எந்த பக்கம் என இப்போதே தெரிந்துவிட்டதாம்.
தவிக்கும் மம்தா
மேற்கு வங்க மாநிலத்தில், ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில், எதற்கு ஏழு கட்ட தேர்தலை அறிவித்தனர் என, மாநில முதல்வர் மம்தா பானர்ஜி எரிந்து விழுகிறார். காரணம், தேர்தல் பிரசாரத்திற்காக அங்குமிங்குமாக சுற்ற வேண்டியிருப்பது தான்.மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்ய, மம்தாவிற்கு ஹெலிகாப்டர் தேவைப்பட்டது. ஆனால், அது கிடைக்கவில்லை.நம் நாட்டில், மொத்தமாக, 250 தனியார் ஹெலிகாப்டர்கள் தான் உள்ளன. இவற்றில், பெரும்பாலானவற்றை பா.ஜ., முந்திக்கொண்டு, 'புக்' செய்துவிட்டது. மிச்சம், மீதியிருந்ததை காங்கிரசும், மற்ற கட்சிகளும் வளைத்து விட்டன.தவிர, இதில் இன்னொரு பிரச்னையும் உள்ளது. முன்பெல்லாம், ஹெலிகாப்டர் புக் செய்ய, கட்டணத்தை ரொக்கமாக கொடுக்கலாம். இதன்மூலம், குறைந்த வாடகையை, கணக்கில் காட்டலாம். ஆனால், இப்போது எல்லாம் மாறிவிட்டது. கட்டணத்தை, 'செக்' அல்லது 'ஆன்லைன் டிரான்ஸ்பர்' மூலமாகத்தான் செலுத்த முடியும். இதனால், கறுப்புப் பணத்தை பயன்படுத்த முடியாத நிலை.உடனே, ஆந்திர முதல்வர், சந்திரபாபு நாயுடு உதவியை, தேடி ஓடினார் மம்தா. 'ஆந்திராவில் தான் தேர்தல் முடிந்துவிட்டதே; நீங்கள் உபயோகித்த ஹெலிகாப்டரை எனக்கு கொடுங்கள்' என்றாராம். ஆனால், நாயுடுவோ, 'தேர்தல் முடிந்தாலும், மற்ற மாநிலங்களுக்கு, நான் பிரசாரம் செய்யவிருக்கிறேன்; இப்போதைக்கு தர முடியாது' என, கைவிரித்துவிட்டாராம்.எப்படியோ போராடி, மம்தாவிற்கு, ஒரு ஹெலிகாப்டர் கிடைத்தது. அப்பாடா என, பிரசாரம் செய்ய அதில் கிளம்பி சென்றார். பிரசாரம் முடிந்த பிறகு, ஹெலிகாப்டர் கிளம்பாமல், 'மக்கர்' செய்ய, கடுப்பாகி விட்டார் மம்தா. வேறு வழியின்றி, காரிலேயே திரும்பினார் மம்தா.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
29-ஏப்-201917:37:56 IST Report Abuse
r.sundaram மற்ற கட்சிக்காரர்களுக்கு, முக்கியமாக பி ஜெ பி கட்சிக்காரர்களுக்கு ஹெலிகாப்டர் கொடுக்காமல் சர்வாதிகாரியாக ஆட்டம் போட்டவர்க்கு அந்த ஹெலிகாப்டர் பெப்பே சொல்லி விட்டது போலும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X