பதிவு செய்த நாள் :
ஆவேசம்!
பாலியல் குற்றச்சாட்டுக்கு
தலைமைநீதிபதி மறுப்பு:

புதுடில்லி: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மீது, பெண் ஊழியர் பாலியல் புகார் கூறியுள்ளது, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தப் புகாரை மறுத்துள்ள தலைமை நீதிபதி, பல முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வரவுள்ள நிலையில், தன்னையும், நீதித் துறையையும் மிரட்டும் வகையில், 'மிக பெரிய சக்தி' இந்த சதியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தலைமை நீதிபதி மீதான புகாருக்கு,பார் கவுன்சில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, நீதித்துறைக்கு சதி நடப்பதாக அச்சம் தெரிவித்துள்ளது.


உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக, கடந்தாண்டு, அக்டோபரில் பதவியேற்றார், ரஞ்சன் கோகோய். இந்தாண்டு, நவ., 17ல் அவர் ஓய்வு பெறுகிறார்.விசாரணைகடந்தாண்டு ஜனவரியில், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, பல புகார்களை கூறி, நான்கு மூத்த நீதிபதிகள் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அந்தநான்கு பேரில், ரஞ்சன் கோகோயும் ஒருவர்.இந்த நிலையில், தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மீது, உச்ச நீதிமன்ற பெண் ஊழியர் ஒருவர், பாலியல் புகார் கூறியுள்ளார்.

இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தின், 22 நீதிபதிகள் வீடுகளுக்கு, அந்த பெண், புகார் கடிதத்தை அனுப்பியுள்ளார். இது தொடர்பாக, இணையதள ஆங்கில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.அதையடுத்து நேற்று காலையில், 'மிக மிக முக்கியமான வழக்கு' விசாரிக்கப்பட உள்ளதாக,உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகம் தெரிவித்தது.


தலைமை நீதிபதி,ரஞ்சன் கோகோய்,நீதிபதிகள், அருண் மிஸ்ரா, சஞ்சீவ் கன்னா அமர்வு, இந்த வழக்கை விசாரித்தது.அப்போது, தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் கூறியதாவது:என் மீது, பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் கூறியுள்ளதாக வந்துள்ள செய்தியை அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். கடந்த, 20 ஆண்டுகளாக நீதிபதியாக நேர்மையாக பணியாற்றியதற்கு இதுதான் பரிசா?

இந்தப் புகாரை மறுத்து பேசுவதையே நான் இழி வாக கருதுகிறேன்.நீதிபதிகளுக்கு, அவர்கள்

பெறும் நல்ல பெயர்களே, அவர்களுடைய சொத்து. இவ்வாறு பொய் புகார்கள் கூறப்பட்டால், எந்த நியாயமான மனிதனும், நீதிபதி பதவிக்கு வருவதற்கு தயங்குவர்.இத்தனை ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, என்னுடைய வங்கிக் கணக்கில், 6.80 லட்சம் ரூபாய்தான் உள்ளது.

வருங்கால வைப்பு நிதியாக, 40 லட்சம் ரூபாய் இருக்கும். பணத்தின் அடிப்படையில், என் மீது எந்தப் புகாரையும் கூற முடியாது என்பதால், மாற்று வழியை பயன்படுத்தி உள்ளனர்.இந்தப் புகார் நம்பக் கூடியதாக இல்லை. நீதித் துறையை களங்கப் படுத்தவும், தலைமை நீதிபதி அலுவலகத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும், மிகப் பெரிய சக்தி இந்த சதியில் ஈடுபட்டுள்ளது.

வரும் வாரங்களில், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் விசாரணைக்கு வர உள்ளன. இந்த நிலையில், இதுபோன்ற ஒரு மோசடி, பொய் புகார் கூறப்பட்டு உள்ளது.

அவதுாறுஇதனால், நான்பயந்துவிட மாட்டேன். தொடர்ந்து, என்பணிகளை செய்வேன்.புகார் கூறிய அந்த பெண்ணின் மீது குற்ற வழக்கு நிலுவையில் உள்ளது. அவருடைய கணவரின் மீதும் வழக்குகள் உள்ளன.இது போன்றவர்கள் கூறியதை நம்பி, எனக்கும், இந்தப் பதவிக்கும் அவதுாறு ஏற்படுத்த முயற்சி நடந்துள்ளது.இவ்வாறு, அவர்கூறினார். இணையதள பத்திரிகைகளில் வந்த செய்தி தொடர்பான வழக்கை, இந்த அமர்வு விசாரித்தது. ஆனால், தீர்ப்புஅளிப்பதில் இருந்து, தலைமை நீதிபதி,ரஞ்சன் கோகோய் விலகிகொண்டார்.

அதையடுத்து, மூத்த நீதிபதியான, நீதிபதி மிஸ்ரா, தீர்ப்பைஅளித்தார். அதில் கூறப்பட்டு உள்ளதாவது: இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன், ஊடகங்கள் சரியாக விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில், ஊடகங்களுக்கு எந்த தீர்ப்பையும், உத்தரவையும் நாங்கள் அறிவிக்கப்போவதில்லை. இந்த விவகாரத்தில், எப்படி நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்பதை, ஊடகங்களே முடிவு செய்து கொள்ளட்டும்.

நீதித்துறையை, பலிகடாவாக்க வேண்டாம் என, ஊடகங்களைகேட்டுக் கொள்கிறோம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், தலைமை நீதிபதி மீது ஜோடிக்கப்பட்டுள்ள புகார், நீதித் துறைக்கு எதிரான தாக்குதல் என, இந்திய பார்

Advertisement

கவுன்சில் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்திய பார் கவுன்சில் தலைவர், மனன் குமார் மிஸ்ரா கூறியதாவது:

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி மீது, பொய்யான, ஜோடிக்கப்பட்ட புகார் கூறப்பட்டு உள்ளது.இது, நீதித் துறையை அழிப்பதற்கான முயற்சியாகவே பார்க்கிறோம். இது போன்ற பொய் புகார் கூறியுள்ளதற்கு, கண்டனம் தெரிவிக்கிறோம். இந்த விவகாரத்தில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஆதரவாக இருப்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

24ல் விசாரணை


உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, ரஞ்சன் கோகோய் மீது பாலியல் புகார் கொடுத்த பெண்ணுக்கு, மோசடி வழக்கில் வழங்கப்பட்ட, ஜாமினை ரத்து செய்யக் கோரும் வழக்கு, 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக, அந்தப் பெண், தன்னிடம் இருந்து, 50 ஆயிரம் ரூபாய் வாங்கி ஏமாற்றியதாக, ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜரைச் சேர்ந்த, நவீன் குமார் என்பவர், டில்லி திலக் மார்க் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.மேலும், அந்த பெண், வேறு சிலருடன் சேர்ந்து தன்னை மிரட்டியதாகவும், நவீன் குமார் புகார் கூறியிருந்தார்.

இந்த வழக்கில், டில்லி நீதிமன்றம், அந்த பெண்ணுக்கு, கடந்த மாதம், 12ம் தேதி ஜாமின் வழங்கியது.தற்போது, தலைமை நீதிபதி மீது புகார் கூறியுள்ள நிலையில், அந்த ஜாமினை ரத்து செய்யக் கோரி, டில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், டில்லி போலீஸ் மனு அளித்துள்ளது. இந்த வழக்கு, 24ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

முக்கிய வழக்குகள்


வழக்கின் விசாரணையின்போது, உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி, 'முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வரும் நிலையில், என் மீது பொய் புகார் கூறப்பட்டுள்ளது' என, குறிப்பிட் டார். ஆனால், எந்தெந்த வழக்குகள் என, அவர் குறிப்படவில்லை.

உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கூறிய தாவது:'ரபேல்' போர் விமானம் தொடர்பான வழக்கில், காங்., தலைவர் ராகுல் மீதான, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்கு வருகிறது. தன் பதிலை, ராகுல் தாக்கல் செய்ய வேண்டும். சாரதா சிட்பண்ட் மோசடி வழக்கில், மேற்கு வங்க மாநிலத் தலைநகர், கோல்கட்டா வின் முன்னாள் போலீஸ் கமிஷனர், ராஜிவ் குமாரை, காவலில் எடுத்து விசாரிக்கும், சி.பி.ஐ., மனு மீதான வழக்கும் விசாரணைக்கு வருகிறது.

பிரதமர்மோடியின் வாழ்க்கை வரலாறு தொடர் பான திரைபடம் குறித்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.இதைத் தவிர, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயன்ற தாக, தமிழகத்தின், வேலூர் லோக்சபா தொகுதிக்கான தேர்தல் ரத்து செய்யப்பட்டதை எதிர்க்கும் வழக்கும் விசாரணை வருகிறது. இவ்வாறு, கூறினர்.


Advertisement

வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-ஏப்-201900:08:16 IST Report Abuse

Girijaகிளிண்டன் கூட முதலில் இல்லை நொள்ளை என்றார் அவரை விசாரிக்காமலா விட்டார்கள் ? இந்தியா ஜனநாயக நாடு கண்டிப்பாக நீங்கள் விசாரணையை எதிர்கொள்ள வேண்டும், அந்த விசாரணை பதவியில் இல்லாத நேர்மையான நீதிபதி அல்லது ஐ பி எஸ் விசாரிக்க வேண்டும் . அடுத்தவாரம் முக்கிய வழக்குகள் விசாரணைக்கு வருகிறது என்று யாரை பயமுறுத்துகின்றீர்?

Rate this:
Manian - Chennai,இந்தியா
24-ஏப்-201906:53:18 IST Report Abuse

Manianஉண்மை தெறியாம சொல்வது தப்பு. ...

Rate this:
21-ஏப்-201922:04:43 IST Report Abuse

ஆப்புபுகார் குடுத்தவர் தகுந்த ஆதாரங்களை அளிக்க வேண்டும். பொய் கேஸ் போட்டிருந்தால் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். இந்த கேசையாவது வாய்தா வழங்காமல் சீக்கிரம் முடித்து வையுங்கள்.

Rate this:
Poongavoor Raghupathy - MUMBAI,இந்தியா
21-ஏப்-201920:58:35 IST Report Abuse

Poongavoor RaghupathyThis Lady must be asked to submit evidences on her allegations against CJI and the truth must be found out and the suspicion must be removed completely on the behavior of CJI and then only CJI can function at ease. Truth can not be hidden forever and one day the truth will come out, It is just like Rahul's E-PASSPORTS-RELIGION-QUALIFICATIONS and what not. Truth has to come out and the judiciary is meant for this only. Wheather it is Rahul or CJI the people must know the truth.

Rate this:
மேலும் 16 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X