அபுதாபியில் ஹிந்து கோவில்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (18)
Advertisement

துபாய்: வளைகுடா நாடுகளுள் ஒன்றான, ஐக்கிய அரபு எமிரேட்சின், தலைநகர் அபுதாபியில், முதல் ஹிந்து கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.



இதில், ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்றனர்.ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, அபுதாபி, துபாய், ஷார்ஜா, அஜ்மான் உள்ளிட்ட ஏழு அமீரகங்களில், நம் நாட்டைச் சேர்ந்த, ஏராளமான ஹிந்துக் கள் வசிக்கின்றனர். அபுதாபியில், மசூதிகளை தவிர, 40 தேவாலயங்கள் மற்றும் இரண்டு சீக்கிய குருத்வாராக்கள் மட்டுமே உள்ளன. கோவில் இல்லாமல் இருந்தது.






கடந்த, 2015ல், பிரதமர் நரேந்திர மோடி இங்கே வந்த போது, அபுதாபியில், ஹிந்து கோவில் கட்டுவது குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.இதையடுத்து, அபுதாபி - துபாய் நெடுஞ்சாலையில், அபு முரீக்கா என்ற இடத்தில், ஹிந்து கோவில் கட்டுவதற்கு, அந்நாட்டு அரசு, 14 ஏக்கர் நிலத்தை வழங்கியது.கோவிலின் கட்டுமான பணிகள், ஹிந்து சமய மற்றும் சமூக பணிகளை செய்து வரும், 'பாப்ஸ்' எனப்படும், போச்சசான்வாசி அக்ஷர் புருஷோத்தம் சுவாமி நாராயண் அமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள, ஏழு அமீரகங்களை குறிக்கும் வகையில், ஏழு கோபுரங்களுடன் கோவில் கட்டப்படுகிறது.நம் நாட்டின், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து, சிலைகள் மற்றும் கோவில் கட்டுவதற்கு தேவையான கற்கள் வடிவமைக்கப்பட்டு, அபுதாபிக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளன.சுவாமி நாராயண் அமைப்பைச் சேர்ந்த தலைமை மஹந்த், சுவாமி மஹாராஜ் தலைமையில், அஸ்திவாரம் அமைப்பதற்கான, பூமி பூஜை நேற்று நடந்தது. இதில், அந்நாட்டுக்கான இந்திய துாதர் மற்றும் அமைச்சர்களுடன், ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் பங்கேற்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anwar - kuwait city,குவைத்
25-ஏப்-201916:58:35 IST Report Abuse
Anwar
Rate this:
Share this comment
Cancel
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
23-ஏப்-201919:16:42 IST Report Abuse
தமிழ்வேல் வரவேற்கவேண்டும். இது காலத்தின் கட்டாயம்.
Rate this:
Share this comment
Cancel
Ramesh - Chennai,இந்தியா
23-ஏப்-201915:23:40 IST Report Abuse
Ramesh ஹிந்து மதத்திற்கு வெளி நாட்டில் அங்கீகாரம் அளிக்கபடுகிறது மிக்க மகிழ்ச்சி ஆனால் இங்கு சுடலை , ஓசிசோறு ,சோபா ,அமைக்கறி ,மே மாசம் ,நடு நிலை நக்கிகள் அசிங்க படுகிறார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X