பொது செய்தி

இந்தியா

செய்தி சில வரிகளில்...

Added : ஏப் 20, 2019
Advertisement

இடைத்தரகனின் ஜாமின் மனு தள்ளுபடி
புதுடில்லி: வி.வி.ஐ.பி.,க்கள் பயன்பாட்டுக்காக ஹெலிகாப்டர் வாங்கியதில், 3,600 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், இடைத்தரகன் சூசன் மோகன் குப்தாவை, அமலாக்கத் துறையினர் கைது செய்து விசாரித்தனர்.நேற்றுடன் நீதிமன்ற காவல் முடிந்த நிலையில், ஜாமின் கோரிய குப்தாவின் மனுவை, டில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவனை நேரில் ஆஜர்படுத்தவும் கோர்ட் உத்தரவிட்டது.

பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்து

கான்பூர்: மேற்கு வங்க மாநிலம், ஹவுராவில் இருந்து, டில்லிக்கு சென்ற, பூர்வா எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று காலை, உத்தர பிரதேச மாநிலம், கான்பூர் அருகில் வந்த போது, தடம் புரண்டது.ரயிலில், 12 பெட்டிகள் தடம் புரண்டதில், 15 பேர் காயமடைந்தனர். இதனால், அந்த வழித்தடத்தில் செல்ல வேண்டிய, 28 ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டதாகவும், 16 ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாகவும், அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை

ஐதராபாத்: கடந்த ஆண்டு ஆகஸ்டில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பை சேர்ந்த இரண்டு பேரை, என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில், நம் நாட்டு இளைஞர்களை, பயங்கரவாதத்தில் ஈடுபடுத்த, அவர்கள் திட்டமிட்டது தெரிய வந்தது. இதையடுத்து, தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் மற்றும் மஹாராஷ்டிர மாநிலம், வார்தாவில், என்.ஐ.ஏ., அதிகாரிகள் நேற்று சோதனையிட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X