பொது செய்தி

இந்தியா

போர்க் கப்பல் தயார்

Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (2)
Advertisement
 போர்க் கப்பல் தயார்

மும்பை, உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்டுள்ள, அதிநவீன, போர்க் கப்பலான, 'ஐ.என்.எஸ்., இம்பால்' நேற்று அறிமுகம் செய்யப்பட்டது.கடற்படைக்காக, அதிநவீன போர்க் கப்பல்களை தயாரிக்கும், பிராஜெக்ட் - 15பி என்ற திட்டத்தின்கீழ், மும்பையில் உள்ள, மாசகோன் கப்பல் கட்டும் நிறுவனம், நான்கு போர்க் கப்பல்களை தயாரிக்கிறது.இதில், 'ஐ.என்.எஸ்., விசாகப்பட்டினம், ஐ.என்.எஸ்., மோர்முகோ' ஆகிய போர்க் கப்பல்கள் தயாரிக்கப்பட்டு, தற்போது சோதனையில் உள்ளன.அதைத் தொடர்ந்து, ஐ.என்.எஸ்., இம்பால் போர்க் கப்பல் தற்போது தயாராக உள்ளது.
மும்பையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இந்த போர்க் கப்பல் அறிமுகம் செய்யப்பட்டு, தண்ணீரில் விடப்பட்டது.இந்தப் போர்க் கப்பல்கள் அனைத்தும், 535 அடி நீளம், 57 அடி உயரம் கொண்டவை. இந்தக் கப்பல்கள், 7,400 டன் எடை கொண்டவை. மரபுப்படி, கடற்படை தளபதி சுனில் லம்பாவின் மனைவி, ரீனா லம்பா, இந்த போர்க் கப்பலை அறிமுகம் செய்து வைத்தார்.''இதுவரை, போர்க் கப்பல்களை வாங்கி வந்த நாம், தற்போது சொந்தமாக தயாரிக்கிறோம்,'' என, அட்மிரல் சுனில் லம்பா, குறிப்பிட்டார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Darmavan - Chennai,இந்தியா
21-ஏப்-201911:30:41 IST Report Abuse
Darmavan இந்த நிலை எப்போதோ வந்திருக்க வேண்டும் நம் நாட்டுக்கு .60 வருடம் ஆண்ட திருட்டு கூட்டம் கமிஷன் பேரத்தால் நம் நாட்டை இன்னும் இந்த கேவலமான நிலையில் வைத்திருக்கிறது... என்று இந்த திருட்டு காங்கிரஸ் ஒழிகிறதோ அன்றுதான் நாட்டுக்கு நல்ல நாள்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201909:14:16 IST Report Abuse
Srinivasan Kannaiya எங்கெனாலும் உபயோகித்து இருக்கிறோமா
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X