அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஓட்டு எண்ணும் மையத்தில் நுழைந்த பெண் அதிகாரி: தி.மு.க., அ.ம.மு.க., வினர் முற்றுகை

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 20, 2019 | கருத்துகள் (19)
Advertisement

மதுரை: மதுரை லோக்சபா தொகுதி ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவக் கல்லுாரி அறையிலிருந்து ஆவணங்களை பெண் அதிகாரி ஒருவர் எடுத்துச் சென்றதாக சர்ச்சை எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அ.ம.மு.க.,வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை தலைமையில் தொண்டர்கள் முற்றுகையிட்டனர்.







நேற்று பகலில் பெண் அதிகாரி ஒருவர் நுழைந்து மதுரை மேற்குத் தொகுதி ஓட்டுப் பதிவு தொடர்பான ஆவணங்களை நகல் எடுப்பதற்காக எடுத்துச் சென்றதாக தகவல் பரவியது. இதையடுத்து இரவு 10:45 மணிக்கு மார்க்சிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன் மற்றும் தி.மு.க.,வினர் அங்கு திரண்டு முற்றுகையில் ஈடுபட்டனர். அ.ம.மு.க.,வேட்பாளர் டேவிட் அண்ணாதுரையும் அங்கு வந்தார். இதனால் காந்தி மியூசியம் ரோட்டில் போக்குவரத்து பாதித்தது. அவர்களிடம் டி.ஆர்.ஓ.,குணாளன், ஆர்.டிஓ.,முருகானந்தம் பேச்சு நடத்தி வருகின்றனர். அங்கு அ.தி.மு.க.,வேட்பாளர் ராஜ் சத்யனின் ஆதரவாளர்களும் குவிந்தனர்.






தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், 'தேர்தல் கமிஷன் கேட்டுக் கொண்டதற்கிணங்க சம்பூர்ணம் என்ற அலுவலர் ஆவணங்களை எடுத்துச் சென்றார். ஓட்டுப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் 'சீல்' அகற்றப்படவில்லை. எவ்வித தவறும் நடக்கவில்லை' என்றனர்.






வெங்கடேசன் கூறுகையில், 'பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி அதிகாரி சென்றது எப்படி.அறையில் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கட்சிகளிடம் காண்பிக்க வேண்டும். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.







கலெக்டர் விளக்கம்

இது குறித்து கலெக்டர் நடராஜன் கூறியதாவது: அறைக்குள் யார் உள்ளே சென்றார் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அனுமதியில்லாமல் சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்ட அறை பாதுகாப்பாக சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் உள்ள ஒரிரு அறைகள் தான் சீல் வைக்கப்படவில்லை. அதனையும் உடனடியாக சீல் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அறையை பார்வையிட்டு வேட்பாளர்கள் திருப்தி தெரிவித்துள்ளனர். யார் சென்றார்கள் என்பது குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும். அனுமதியில்லாமல் சென்றிருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்றார்.




Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
21-ஏப்-201914:16:46 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam கபட நாடகம் பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுதல் என்பது இதுதானா? ஸ்டாலினும் தினகரனும் என்ன சொன்னாலும், மக்கள் நம்புவார்களா?
Rate this:
Share this comment
Cancel
Ab Cd - Dammam,சவுதி அரேபியா
21-ஏப்-201911:54:20 IST Report Abuse
Ab Cd சில் இட்ட அறையாக இருந்தாலும் மின்னணு இயந்திரங்களை ரிமோட் மூலம் அறைக்கு வெளியே இருந்து இயக்க முடியும்
Rate this:
Share this comment
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
21-ஏப்-201910:38:13 IST Report Abuse
Malick Raja இவிங்க ஒருமாதகாலம் வாக்குகள் இயந்திரங்களை சிறைபிடித்து வைத்திருப்பதே கோல்மாலுக்கு வழிவகுக்கும் .. அதற்க்கு ஏற்ப ஏற்படுகள் நடக்கிறதோ .. என்று எண்ணுவது இயல்பாகத்தானே இருக்கமுடியும்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X