பதிவு செய்த நாள் :
'நியாய்' வாக்குறுதி தோல்வியடையும்!
மும்பை இளைஞர்கள் விளாசல்

'வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு, ஆண்டுக்கு, 72 ஆயிரம் ரூபாய் வழங்கும், காங்கிரசின், 'நியாய்' திட்டத்தால் மக்களின் வாழ்க்கை தரம் உயராது' என, மஹாராஷ்டிரா தலைநகர், மும்பை நகர இளைஞர்கள் தெரிவித்துள்ளனர்.

நியாய், வாக்குறுதி, தோல்வியடையும்,மும்பை இளைஞர்கள்

லோக்சபா தேர்தலில், காங்., மற்றும் பா.ஜ., அணிகள் இடையே, கொள்கை அளவிலும், எதிர்கால திட்டங்கள் அடிப்படையிலும் கடும் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு அணியும், ஒவ்வொருதிட்டங்களை அறிவித்து, மக்கள் மத்தியில் பிரசாரம் செய்கின்றன.காங்கிரசின் நியாய் உதவி தொகை வழங்கும் பிரசாரம், இளைஞர்கள் மத்தி யில் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு

இந்த உதவித் தொகை வழங்கப்படும் என, காங்கிரசார் பிரசாரம் செய்கின்றனர். ஆனால், நியாய் திட்டம், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தாது என, மும்பை இளைஞர்கள் தெரிவித்து உள்ளனர்.

நாட்டின் பொருளாதாரமும், தொழில்களும் நிரந்தர வளர்ச்சி பெறும் வகையிலான ஆட்சியே, மத்தியில் வர வேண்டும். வெறும் காற்றடைத்த பந்து போன்று, வாக்குறுதிகளை வீசுவது எந்த பலனை யும் தராது.நியாய் திட்டம் என்பது, அனைத்து மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான அறிவிப்பாக இல்லை; வெறும் ஓட்டு அரசியல் யுக்தி என, தெரிவித்து உள்ளனர்.

இந்தியாவின் நிலையை உலக தரத்துக்கு உயர்த்தும் தலைவர் வேண்டும். இன்னும் இலவசம் கொடுப்பது, உதவி தொகை வழங்குவது என்ற அறிவிப்பு இல்லாமல், வேலைவாய்ப்பையும், பொருளாதாரத்தையும் உயர்த்த வேண்டும்.அதுவே, நாட்டின் முன்னேற்றத்துக்கு உதவும் ஆட்சியாக இருக்கும் என, இன்னொரு தரப்பினர் தெரிவித்து உள்ளனர்.

புதிய வாக்காளர்களில் சிலர், பா.ஜ.,வும்,

Advertisement

காங்.,கும் மாறி, மாறி குற்றஞ்சாட்டுகின்றன. இந்த குற்றச்சாட்டுகள் தேர்தலுடன் நின்று விடும். அதன் பின், உள்ளுக்குள் அரசியல்வாதி கள் கூட்டு சேர்வர். மக்கள் தனித்து விடப் படுவர். தற்போதைய நிலையில், 'நோட்டா' ஓட்டுகளை அதிகரிக்க வேண்டும் என, தெரிவித்துள்ளனர்.

எனவே, மும்பை இளைஞர்களை கவர, காங்கிரசும், பா.ஜ.,வும் புதிய பிரசார யுக்திகளை தேடி வருகின்றன. இங்கு, 48 தொகுதிகளுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கின்றன. இரண்டு கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன.
- ஸ்மிதா தாஸ் - சிறப்பு செய்தியாளர்


Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Girija - Chennai,இந்தியா
22-ஏப்-201900:14:22 IST Report Abuse

Girijaஇவர்கள் ஆட்சி அமைத்தால் தானே தரணும் ? அப்ப பாத்துக்கலாம். ரூபாய்க்கு மூணு படி அரிசி என்ற ஏமாற்று கட்சியின் கூட்டணிதானே இது ? தரமுடியாவிட்டால் " வருடத்திற்கு எழுபத்திரெண்டாயிரம் லட்சியம் ஆனால் எழுபத்திரண்டு பைசா நிச்சயம் " என்று துண்டை உதறி தோளில் போட்டுகொண்டு போய்விடுவர்.

Rate this:
Kalam - Salem,இந்தியா
21-ஏப்-201917:17:15 IST Report Abuse

Kalamஏழைகளுக்கு இது அநியாய திட்டம். ஏனென்றால் அவரகள் இலவச ஆசையில் வோட்டை போட்டு அடிமைகள் அண்ட் சோம்பேறிகள் ஆக்க படுவார்கள் . மிடில் கிளாஸ்ஸிற்கு இது அநியாய திட்டம் வரி சுமை அதிகரிக்கும் , பணக்காரர்களுக்கும் இது அநியாய திட்டம் வரி சுமை அதிகரிக்கும் . சோனியா குடும்பத்துக்கு மட்டும் இது நியாய திட்டம் , மீண்டும் ஆட்சியை பிடித்து கொள்ளை அடிக்கலாம்

Rate this:
jannett warrior - chennai,இந்தியா
21-ஏப்-201913:39:49 IST Report Abuse

jannett warriorஅனைத்து மக்களுக்கும் அக்கௌண்டில் பதினைந்து லட்சம் என்ற வாக்குறுதி மட்டும் சாத்தியமானதா

Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X