பதிவு செய்த நாள் :
உ.பி., தேர்தல்களில் தடுமாறும் பெண்கள் :
இரண்டு தொகுதிகளில், 'ஆண்கள் மட்டும்'

உத்தரபிரதேசத்தில் கான்பூர் மண்டலத்தில் உள்ள, 11 லோக்சபா தொகுதிகளில், இதுவரை, 11 பெண்கள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளனர்; இரண்டு தொகுதிகளில், எந்த பெண்ணும் வெற்றி பெற முடியவில்லை.

 உ.பி., தேர்தல், பெண்கள், இரண்டு தொகுதி, ஆண்கள்


கான்பூர் மண்டலத்தில் உள்ள, 11 லோக்சபா தொகுதிகளுக்கு, முதன்முதலாக, 1951 முதல், இதுவரை நடந்த தேர்தல்களில், 11 பெண்களே வெற்றி பெற்றுள்ளனர்.இரண்டு தொகுதிகளில், எந்த பெண் வேட்பாளரும் வெற்றி பெற முடியவில்லை.

முதல் பெண் எம்.பி.,



கான்பூர் தொகுதியில், 1989ம் ஆண்டு, மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த, சுபாஷினி அலி

வெற்றி பெற்றார்; அதன்பின், எந்த பெண் வேட்பாளரும் வெற்றி பெறவில்லை. உன்னாவோ தொகுதி யில், 52 ஆண்டு தேர்தல் வரலாற்றில், 2009ம் ஆண்டு தான், காங்கிரசின், அன்னு தாண்டன் என்பவர் முதல் பெண், எம்.பி.,யாக தேர்வானார். எட்டாவா என்ற தொகுதியில், 41 ஆண்டு கால தேர்தல் வரலாற்றில், 1998ல் முதல் பெண்,எம்.பி.,யாக சுக்தா மிஸ்ரா வெற்றி பெற்றார்.

பதேபுர் தொகுதியில், 1957ல் முதல் தேர்தல் நடந்தது. இதில், 57 ஆண்டு களுக்கு பின், 2014 தேர்தலில் தான், பெண்எம்.பி.,யாக பா.ஜ.,வின் சாத்வி நிரஞ்சன் ஜோதி வெற்றி பெற்றார்.ஜான்சி தொகுதியில், 1962ல் சுசிலா நய்யார் என்பவர் வெற்றி பெற்றார். பின், இவர் நான்கு முறை எம்.பி.,யானார். இவருக்கு பின், 1998 மற்றும் 2009ல் உஷா வர்மா வெற்றி பெற்றார்.

நான்காம் இடம்



கன்னாஜ் தொகுதியில், முதல் எம்.பி,யாக ஷீலா தீக்சித், 1984ல் வெற்றி பெற்றார். 2012ல், டிம்பிள் யாதவ் வெற்றி பெற்றார். தற்போது அவர் மூன்றாம் முறையாக தேர்தலில் போட்டியிடுகிறார். பந்தல் கண்ட் மண்டலத்தில், ஜலாவுன் மற்றும் ஹமிர்புர் தொகுதிகளில், இதுவரை ஒரு பெண் எம்.பி., கூட

Advertisement

தேர்வு செய்யப்படவில்லை.பரூக்காபாத் தொகுதியில், 1952ம் ஆண்டுக்கு பிறகு, இதுவரை ஒரு பெண் எம்.பி., கூட தேர்வாக வில்லை. இங்கு, மித்லேஷ் குமாரி என்பவர், 2009ல் பெண் வேட்பாளராக போட்டியிட்டார்; ஆனால், அவர் நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.

இப்படி, சில பெண்கள் மட்டும், சில தொகுதி களில் வெற்றி பெறுவதும், சில தொகுதி களில் பெண்களே வெற்றி பெற முடியாத நிலையும், உ.பி.,யில் உள்ளது. பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வந்த பிறகாவது, இந்த நிலை மாறுமா என, பொறுத்திருந்து பார்க்க வேண்டும். - நமது நிருபர் -


Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
21-ஏப்-201909:03:26 IST Report Abuse

Srinivasan Kannaiyaபெண்களின் மீது நம்பிக்கை இல்லையோ என்னவோ... பொதுவாக பெண்கள் தேர்வு செய்யப்பட்டால் அவர்கள் கணவன்மார்கள்தான் அதிகாரத்தில் இருப்பார்கள்

Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X