சம்பவம் செய்தி

தமிழ்நாடு

முன்விரோதத்தில் இருவர் கொலை மயிலாடுதுறை அருகே 4 பேர் கைது

Added : ஏப் 20, 2019
Advertisement
முன்விரோதத்தில் இருவர் கொலை மயிலாடுதுறை அருகே 4 பேர் கைது

மயிலாடுதுறை மயிலாடுதுறை அருகே, முன்விரோத தகராறில் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பாக, நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.நாகை மாவட்டம், நீடூரைச் சேர்ந்தவர், இளங்கோவன், 60; அ.தி.மு.க., கிளை செயலர். அதே பகுதியைச் சேர்ந்தவர், கண்ணதாசன், 61. இருவரது குடும்பத்தினர் இடையே முன்விரோதம் ஏற்பட்டு, கடந்த மாதம் தகராறு உருவானது. மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து, இரு தரப்பிலும், தலா இருவரை கைது செய்தனர். அவர்கள் ஜாமினில் வெளிவந்தனர்.இளங்கோவன் மகன், இளவரசன், 36, உறவினரான, தங்கமணி, 32 என்பவருடன் நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வந்தார். அவர்களை கண்ணதாசன், தன் ஆதரவாளர்களுடன் வழிமறித்து தாக்கியுள்ளனர்.இதையறிந்து, அங்கு வந்த இளவரசன் சகோதரர், எழிலரசன் மற்றும் உறவினர்கள் ஆறு பேர் தடுத்தனர். அப்போது கண்ணதாசன் ஆதரவாளர்கள், கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியுள்ளனர். இதில், இளவரசன், தங்கமணி உட்பட ஒன்பது பேர் படுகாயமடைந்தனர்.அவர்களை மயிலாடுதுறை போலீசார், திருவாரூர் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளவசரன், தங்கமணி இருவரும் வழியிலேயே இறந்தனர். எழிலரசன் புகாரின்படி, மயிலாடுதுறை போலீசார் வழக்கு பதிந்து, நான்கு பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள கண்ணதாசன் உட்பட எட்டு பேரை தேடி வருகின்றனர்.ஒரே தெருவைச் சேர்ந்தவர்களிடையே மோதல் ஏற்பட்டு, இருவர் படுகொலையானதால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இளம்பெண் சடலம்கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே பாலகுன்றாயன துர்க்கம் செல்லும் வழியில், வனத்துறைக்குச் சொந்தமான புறம்போக்கு நிலத்தில், பாறைகள் நிறைந்த, போதை குட்டை உள்ளது.பாறை குட்டையில் தேங்கிய தண்ணீரில், 30 - 35 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம், தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. சுடிதார் மற்றும் காலில் சாக்ஸ் அணிந்திருந்த நிலையில், பெண்ணின் சடலம் காணப்பட்டது.கொலை செய்யப்பட்ட பெண்ணின் தலை மட்டும் தண்ணீரில் இருந்தது. தகவலறிந்து சென்ற சூளகிரி போலீசார், சடலத்தை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை.கையில் பிரேம் என ஆங்கிலத்தில் பச்சை குத்தப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X