சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் டைரி

Added : ஏப் 20, 2019
Advertisement

கடையின், 'ஷட்டர்' உடைத்து திருட்டு திருநின்றவூர்: திருநின்றவூர், சி.டி.எச்., சாலையில், எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருபவர், சீனிவாசன், 48. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல் கடையை அடைத்து, வீட்டிற்கு சென்றார். நேற்று காலை, அவரது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டிருப்பதாக, அக்கம்பக்கத்தினர், சீனிவாசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வந்து பார்த்த போது, கல்லாவில் இருந்த, 15 ஆயிரம் ரூபாய் திருட்டு போனது தெரியவந்தது. திருநின்றவூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
பெண்ணிடம் 8 சவரன் பறிப்பு மயிலாப்பூர் : மந்தைவெளியைச் சேர்ந்தவர், லதா, 58. நேற்று முன்தினம் இரவு, மயிலாப்பூர், முண்டகக்கண்ணி அம்மன் கோவிலில், சித்ரா பவுர்ணமியை ஒட்டி, சிறப்பு வழிபாட்டிற்காக சென்றார். கூட்ட நெரிசலில், மர்ம நபர் ஒருவன், அவரது, 8 சவரன் செயினை பறித்து தப்பினான். மயிலாப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர். கஞ்சா விற்ற ஒன்பது பேர் கைதுடி.பி.சத்திரம்: டி.பி.சத்திரம், கு.மா.வாரிய குடியிருப்பு பகுதியில், நேற்று முன்தினம் இரவு, போலீசார் கண்காணிப்பின்போது, சந்தேகத்திற்கு இடமாக தெரிந்த, ஒரு வீட்டில் சோதனை செய்தனர்.
அங்கு, ஒன்பது பேர் கும்பல், விற்பனைக்காக கஞ்சா பொட்டலம் தயார் செய்வது தெரிய வந்ததையடுத்து, டி.பி.சத்திரம் பகுதியைச் சேர்ந்த, குணசேகரன், 26, ஞானசேகரன், 24, கீர்த்திவாசன், 21, உள்ளிட்ட ஒன்பது பேரை, நேற்று காலை, கைது செய்த போலீசார், கார், இருசக்கர வாகனம் மற்றும் 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மது விற்றவன் கைது செம்மஞ்சேரி: செம்மஞ்சேரி, நுாக்கம்பாளையம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் கடை பாரில், காலை, 6:00 மணி முதல், சட்ட விரோதமாக மது விற்பனை நடந்துள்ளது.
செம்மஞ்சேரி போலீசார், நேற்று, 'பார்' ஊழியன் பிரபு, 35, என்பவனை கைது செய்தனர். அவனிடம் இருந்து, 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.மொபைல் போன் திருடன் கைதுசென்ட்ரல்: சென்னை, எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பயணியரின் மொபைல் போன்கள் திருடு போவதாக, அடிக்கடி ரயில்வே போலீசாருக்கு புகார்கள் வந்தன. நேற்று மதியம், 1:00 மணிக்கு, போலீசார், சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த, பெங்களூரைச் சேர்ந்த நாகராஜ் என்பவனிடம் விசாரித்தனர்.
அதற்கு அவன், முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தான். பையை சோதனை செய்ததில், மூன்று விலையுயர்ந்த மொபைல் போன்கள் இருந்தன. மேலும் விசாரித்ததில், ரயில் நிலையத்தில், தொடர் திருட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததையடுத்து, அவனை கைது செய்த போலீசார், மொபைல் போன்களை பறிமுதல் செய்தனர்.உண்டியலை உடைத்து பணம் திருட்டுசெங்குன்றம்: செங்குன்றம் அடுத்த பாலவாயல் - சோத்துப்பாக்கம் சாலையில், முனீஸ்வரன் கோவில் உள்ளது. நேற்று காலை, 7:00 மணிக்கு, அதன் நிர்வாகி, மோகன், 60, என்பவர் கோவிலை திறக்க சென்ற போது, உண்டியல் உடைக்கப்பட்டு, அதில் இருந்த பணம் திருடு போயிருந்தது. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.
வீட்டின் பூட்டை உடைத்து திருட்டுசெங்குன்றம்: செங்குன்றம், அழிஞ்சிவாக்கத்தைச் சேர்ந்தவர் வாசுதேவன், 38; வழக்கறிஞர். தாயாருக்கு திதி கொடுப்பதற்காக, 14ம் தேதி, குடும்பத்தினருடன் மதுராந்தகம், செய்யூருக்கு சென்றிருந்தார்.நேற்று காலை, 6:30 மணிக்கு, வீடு திரும்பிய போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த, 20 சவரன் நகை, 35 ஆயிரம் ரூபாய் மற்றும் அரை கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தன. செங்குன்றம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X