பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுக்கு முன் - 10 ஆண்டுக்கு பின்' தோற்றங்கள்

Added : ஏப் 21, 2019
Advertisement

சில மாதங்களுக்கு முன், '10 இயர் சேலஞ்ச்' பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலானது. ஆளாளுக்கு, '10 ஆண்டுக்கு முன் - 10 ஆண்டுக்கு பின்' என அவரவர் தோற்றங்களை ஒன்றாக இணைந்து பகிர்ந்து வந்தனர். இதெல்லாம், 'வெட்டி வேலை' என்ற விமர்சனம் இருக்கவே செய்தது.

இப்போது அதே பாணியில் புதிய சவால் சமூக வலைதளங்களில் கலக்கிக்கொண்டிருக்கிறது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் புதிதாக, 'டிராஷ்சேலஞ்ச்' எனும் சவால் பிரபலமாகி உள்ளது. அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்வதை ஊக்குவிப்பதே இதன் சிறப்பம்சம்.இதில் ஆர்வமுள்ளவர்கள் தங்கள் பகுதியில் உள்ள குப்பைகளை அகற்றிவிட்டு குப்பையை அகற்றுவதற்கு முந்தைய படத்தையும், தற்போதைய துாய்மையான காட்சியையும் பகிர வேண்டும் என்பதே கான்செப்ட். இந்த படங்களை, (#TrashTag) பகிர்ந்து கொள்ள வேண்டும். பல்லாயிரக்கணக்கானோர் இன்ஸ்டாகிராம் டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

சமூக ஊடகங்களில் என்ன செய்வது என தெரியாமல் அலுத்து போயிருப்பவர்களுக்கு இந்த புதிய சவால் உற்சாகம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. அதேசமயம், சுற்றுப்புறத்தை துாய்மையாக்கவும் இது வழி செய்கிறது. பலரும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.சுற்றுப்புறத்தை துாய்மையாக்கவும் இது வழி செய்கிறது. பலரும் இதில் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
அமெரிக்கா முதல் இந்தியா வரை பல்வேறு நாடுகளிலும் வரவேற்பை பெற்று வருகிறது. பலரும் குப்பைகளை அகற்றிவிட்டு தாங்கள் சேகரித்த குப்பை மூட்டையோடு போஸ் கொடுத்து எடுத்து, படங்களை பகிர்ந்து வருகின்றனர். மற்றொரு படத்தில் குப்பைகளோடு காட்சி அளிக்கும் நடைபாதை படமும், அருகே துாய்மையாக காட்சி அளிக்கும் படமும் பகிரப்பட்டுள்ளது. இந்த இரண்டு வகை படங்களை பார்க்கும் போது, தங்கள் பகுதியிலும் துாய்மை பணியே மேற்கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தை துாண்டுவதாக உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X