பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளிகளில் மாதிரி பள்ளி

Added : ஏப் 21, 2019
Share
Advertisement
அரசுப்பள்ளிகளில் மாதிரி பள்ளியாக உருவாக தயாராகிக்கொண்டிருக்கிறது திருப்பூர் ஜெய்வாபாய் ெபண்கள் பள்ளி.தமிழக அரசின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் தேர்வாகியுள்ள இப்பள்ளியில், நவீன ஆய்வகம், நுாலக வசதி, கணினி வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிக்கு இணையான வசதிகளுடன் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம், 32 மாதிரி பள்ளிகள்

அரசுப்பள்ளிகளில் மாதிரி பள்ளியாக உருவாக தயாராகிக்கொண்டிருக்கிறது திருப்பூர் ஜெய்வாபாய் ெபண்கள் பள்ளி.தமிழக அரசின் மாதிரி பள்ளி திட்டத்தின் கீழ் தேர்வாகியுள்ள இப்பள்ளியில், நவீன ஆய்வகம், நுாலக வசதி, கணினி வசதி உள்ளிட்ட ஏராளமான வசதிகள் நவீனமயமாக்கப்பட உள்ளன. தனியார் பள்ளிக்கு இணையான வசதிகளுடன் மாவட்டத்திற்கு ஒரு அரசு பள்ளி வீதம், 32 மாதிரி பள்ளிகள் துவக்கப்படவுள்ளன.

இதற்காக, பள்ளிக்கு, 50 லட்சம் வீதம் தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.முதல்கட்டமாக மாணவிகளின் பாதுகாப்பு கருதி பள்ளி வளாகத்தில், 33 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை கண்காணிக்க தலைமையாசிரியர் அறையில் பெரிய திரை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், திருப்பூரிலே முதல்முறையாக அரசு பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட பெருமையை ஜெய்வாபாய் பள்ளி பெற்றுள்ளது.பள்ளி தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறியதாவது:

இத்திட்டத்தின் கீழ் உயர்தர வசதிகளுடன் கூடிய கணினி ஆய்வகம், 'சிசிடிவி' வசதி, சோலார் விளக்குகள், பைபர் பெஞ்சுகள், ஊட்டச்சத்து வசதிகள் என மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. விதிமுறைப்படி, எல்.கே.ஜி., முதல் வகுப்புகள் துவக்கப்பட வேண்டும். முதல்கட்டமாக, இவ்வாண்டுக்கான எல்.கே.ஜி., மாணவர்களுக்கான அட்மிஷன் முடிந்துள்ளது. நுாற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். படிப்படியாக ஒன்பதாம் வகுப்பு முதல், 5ம் வகுப்புகள் வரை கொண்டுவரப்படும்.திருப்பூர் மாவட்டத்தின் மாதிரி பள்ளியாக ஜெய்வாபாய் மகளிர் மேல்நிலைப்பள்ளி திகழும்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X