உயிர்த்தெழுந்தார் இயேசு இன்று ஈஸ்டர்

Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (6)
Advertisement
 உயிர்த்தெழுந்தார் இயேசு  இன்று ஈஸ்டர்

இயேசு உயிர் நீத்த பிறகு அவரது உடலையும், சிலுவையில் அவருடன் அறைந்து கொல்லப் பட்டவர்களின் உடல்களையும் அகற்ற ஏற்பாடு செய்தனர். இதன் பிறகு அவரது சீடர் யோசேப்பு, மன்னன் பிலாத்து விடம் சென்று இயேசுவின் உடலை எடுத்துப் போக அனுமதி கேட்டார். மன்னனும் அனுமதித்தான்.

இயேசுவின் உடல் அருகில் வந்த நிக்கோதேமுன் என்பவன் அவரது உடலில் நறுமணப் பொருளைத் தடவி, துணியில் சுற்றி கட்டினான். கண்மலையில் வெட்டியிருந்த கல்லறையில் அவரது உடலை வைத்து, அதன் வாசலில் பெரிய கல்லை புரட்டி வைத்தனர்.

ஞாயிறு காலை இருள் நீங்காத பொழுதில் அவரது கல்லறைக்கு மகதலேனா மரியாள், மரியாள் சலோமி ஆகியோர் சுகந்த வர்க்கங்களைக் கொண்டு சென்றனர். கல்லறை வாசலில் இருந்த பெரிய கல்லை எப்படி புரட்டுவது என்று பேசிக் கொண்டே சென்றனர். அங்கு சென்று பார்த்த போது, கல் தானாக புரண்டு கிடந்ததைக் கண்டனர்.

'இதை யார் அகற்றினர்?' என்ற படியே கல்லறைக்குள் எட்டிப் பார்த்தனர். உள்ளே இயேசுவின் உடல் இல்லை. அவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இயேசுவின் சீடர்களான சீமோன், பேதுரு, யோவான் ஆகியோரிடம் சென்று இந்த தகவலைக் கூறினர். இதற்குள் இன்னும் சில பெண்களும் கல்லறைக்கு வந்தனர். அங்கே பிரகாசமான ஆடையணிந்த இருவரைக் கண்டனர். அவர்கள் அந்தப் பெண்களிடம், “உயிரோடு இருக்கிற ஒருவரை நீங்கள் மரித்தோர் இடத்தில் தேடுகிறது என்ன? அவர் இங்கே இல்லை. அவர் உயிர்த்தெழுந்து விட்டார். நீங்கள் போய் இந்த செய்தியை அவரது சீடர்களிடத்தில் அறிவியுங்கள்,” என்றனர்.

அந்தப் பெண்கள் திகிலடைந்தவர் களாய் நடுங்கிய படியே கல்லறையை விட்டு அகன்றனர். அவர்கள் செல்லும் வழியில் இயேசு வந்து கொண்டிருந்தார். அவர்களை 'வாழ்க' என வாழ்த்தியதுடன், “பயப்படா திருங்கள். நீங்கள் போய் என் சீடர்களை கலிலியோவுக்கு போகும் படி சொல்லுங்கள். அவர்கள் அங்கே என்னைக் காண்பார்கள்,” என்றார்.

இயேசு உயிர்த்தெழுந்த அந்த நாளில், அம்மோவு என்ற நகருக்கு இருவர் சென்றனர். அவர்களது முகம் துக்கமாக இருந்தது.அவர்களை இயேசு பார்த்தார். “ஏன் துக்கமாக இருக்கிறீர்கள்?” என்றார். அதற்கு அவர்கள், “இயேசு என்ற தீர்க்கதரிசி சிலுவையில் அறைந்து கொல்லப்பட்டார். அவரது உடலைக் காணவில்லை,” என்றனர்.

உடனே இயேசு அவர்களை நோக்கி,“கிறிஸ்து தமது மகிமைகளை வெளிப்படுத்தும் நிலையில், இந்தப் பாடுகளை எல்லாம் அடைந்து தீர வேண்டுமல்லவா?” என்றார்.ஆம்..இயேசு உலக மக்களின் பாவங்களை ஏற்று படாத பாடுபட்டார். உயிரையும் கொடுத்தார். தன்னுயிர் கொடுத்தேனும் பிறருக்கு சேவை செய்ய வேண்டும என மக்களுக்கு உணர்த்தினார்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nathan - Hyderabad,இந்தியா
21-ஏப்-201917:43:40 IST Report Abuse
Nathan
Rate this:
Share this comment
Cancel
Arasu - OOty,இந்தியா
21-ஏப்-201916:23:49 IST Report Abuse
Arasu மற்றவர்கள் தங்களுக்காக இறக்கிறார்கள் இயேசு மனித குலத்துக்காக சிலுவையில் மறித்து உயிர்த்தெழுந்தார்
Rate this:
Share this comment
Cancel
Man -  ( Posted via: Dinamalar Android App )
21-ஏப்-201914:41:14 IST Report Abuse
Man Jesus alive
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X