தயார் நிலையில் தி.மு.க.,

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (67)
Advertisement
D.M.K,DMK, தி.மு.க, திராவிட முன்னேற்றக் கழகம்

புதுடில்லி: தமிழகத்தில், ஒரு வழியாக லோக்சபா தேர்தல் முடிந்தது. வெயிலில் அலைந்து, திரிந்து பிரசாரம் செய்த தலைவர்கள், ஓய்வெடுத்து கொண்டிருக்கின்றனர்.

ஜெயலலிதா மற்றும் கருணாநிதி என்ற ஆளுமைகள், இல்லாமல் நடந்த, முதல் தேர்தலின் முடிவுகள், எப்படியிருக்கும் என, அனைவரும் மண்டையை பிய்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால், தி.மு.க., தலைவர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.நடந்து முடிந்த தேர்தலின், கள நிலவரம், ராகுல் பிரசாரம் மற்றும் சாமானியரிடம் இருக்கும், மோடி எதிர்ப்பு மனநிலை, ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, மோடி 'அவுட்' என்கிறார், தி.மு.க., மூத்த தலைவர் ஒருவர்.

'மற்ற மாநிலங்களிலிருந்து, எங்களுக்கு வரும் செய்திகளும், மோடி மீண்டும் பிரதமராக முடியாது; காங்கிரஸ் தான் ஆட்சி அமைக்கும் என சொல்லும் நிலையில், நாங்கள் அமைச்சர்கள் ஆவோம்' என்கிறார் அவர்.தமிழகத்தில், பெரும்பான்மையான இடங்களில், வெற்றி உறுதி என, தி.மு.க.,வினர் சந்தோஷப்படுகின்றனர்.தி.மு.க., தரப்பிலிருந்து யார் யார் மத்திய அமைச்சராவர் என, இப்போதே விவாதம் தொடங்கி விட்டதாம். முக்கிய குடும்பத்திலிருந்து, எத்தனை பேருக்கு பதவி; ஒருவருக்கா அல்லது இருவருக்கா என, கட்சிக்குள் பட்டிமன்றம் நடந்து வருகிறது.



இன்னொரு பக்கம், தி.மு.க., தலைவர்கள் சிலர், இப்போதே, டில்லியில் வீடு தேட ஆரம்பித்து விட்டனர்.ஏற்கனவே, அமைச்சர் பதவி வகித்த, சில, தி.மு.க., பிரபலங்கள், டில்லியில், தங்களுக்கு எந்த இடத்தில் அரசு பங்களா வேண்டும் என முடிவு செய்துவிட்டனராம். 'ஏற்கனவே வசித்த வீட்டில் பிரச்னை, அது வேண்டாம், பார்லிமென்டிற்கு அருகில் வீடு கேட்க வேண்டும்' என, ஒருத்தர் முடிவெடுத்திருக்கிறாராம். இன்னொருவரோ, தான் முன்பு அமைச்சராக இருந்த போது, வசித்த பங்களாவே வேண்டும் என சொல்கிறாராம். இப்படி, தி.மு.க.,வைப் பொறுத்தவரை, தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 வரை காத்திருக்காமல், அலை எந்த பக்கம் என இப்போதே தெரிந்துவிட்டதாம்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R NAGARAJAN - Chennai,இந்தியா
25-ஏப்-201919:38:16 IST Report Abuse
R NAGARAJAN திமுகவுக்கு ஆதரவான நிலை இருந்தது உண்மைதான் . ஆனால் திரு கி வீரமணி பிரச்சாரம் அதிமுகவுக்கு ஆதரவாக மாறியுள்ளது அதிமுக கூட்டணி வெற்றி பெற்றால் திரு கி வீரமணிக்கு நன்றி சொல்ல வேண்டும் .அவரது இந்துவுக்கு எதிரான அவரது பேசசு தமிழகம் முழுவதும் பரவி உள்ளது
Rate this:
Share this comment
Cancel
KUMAR. S - GUJARAT ,இந்தியா
25-ஏப்-201910:42:50 IST Report Abuse
KUMAR. S இந்த முறை தனி பெரும்பான்மை பி ஜெ பி கட்சிக்கு கிடைப்பது கடினமே. இம்முறை பி ஜெ பி கட்சி திரு மோடி அவர்கள் தலைமையில் கூட்டணி ஆட்சிதான் அமைக்கும். ஆட்சி அமைக்க சில மாநில கட்சிகளின் தயவை நாட வேண்டியிருக்கும். தி மு க வும் ஆதரவு கொடுக்க தயங்காது.
Rate this:
Share this comment
Cancel
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
25-ஏப்-201904:30:58 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam நாம் ஒன்றை நினைக்கத் தெய்வம் இன்னொன்றை நினைக்கிறது. என்ன செய்ய முடியும்? இன்னும், தமிழக மக்களை ஏமாளிகள் என்று எண்ணலாமா? மத்திய அமைச்சர் என்றால், வருமானம் அதிகமோ?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X