பொது செய்தி

தமிழ்நாடு

குளிர்வித்தது கோடை மழை: தீவன பயிர் சாகுபடி தீவிரம்

Added : ஏப் 21, 2019
Advertisement

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு சுற்றுப்பகுதியில், கடந்த இரண்டு நாட்களில், 27 மி.மீ., மழை பெய்துள்ளதால், விவசாயிகள் சித்திரை பட்ட விதைப்பை துவக்கினர்.கிணத்துக்கடவு சுற்று வட்டார பகுதியில், கடந்த இரண்டு மாதங்ளுக்கு முன் வரை, தடுப்பணைகள் நிறைந்து, பாசன கிணறுகளிலும் நீர் மட்டம் குறையாமல் இருந்தது.
சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கத்தால், தடுப்பணைகளின் நீர் மட்டம் படிப்படியாக சரிந்து, தற்போது வறண்டு காட்சியளிக்கின்றன. பாசன கிணறுகளின் நீர்மட்டமும் வெகுவாக குறைந்து கொண்டுள்ளன. மீண்டும் வறட்சி ஏற்பட்டு விடுமோ, என்ற அச்சத்தில் இருந்த விவசாயிகள், கடந்த இரண்டு நாட்களாக ஆங்காங்கே பெய்யும், கோடை மழையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இரு நாட்களுக்கு முன், கிணத்துக்கடவு மேற்கு பகுதியில், இடியுடன் மழை பெய்தது. நேற்று முன்தினமும், கனமழை பெய்தது. இரு நாட்களில், 27 மி.மீ., மழை பெய்ததால், நிலம் மட்டுமின்றி விவசாயிகள் மனமும் குளிர்ந்துள்ளது.மழையை பயன்படுத்தி, சித்திரை பட்டத்துக்கான சோளம் விதைப்பு பணியை விவசாயிகள் மேற்கொண்டுள்ளனர்.விவசாயிகள் கூறுகையில், 'உழவுப்பணிக்கு வாடகையாக மணிக்கு , 850 ரூபாய் கொடுக்க வேண்டியுள்ளது. கால்நடைகள், கறவைகளின் தீவனத்துக்காக, உழவு பணி மேற்கொண்டு சித்திரை பட்டத்தில் தீவன பயிர் சாகுபடியில் கவனம் செலுத்துகிறோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X