அமெரிக்காவில் இந்தியர் கைது

Updated : ஏப் 21, 2019 | Added : ஏப் 21, 2019 | கருத்துகள் (1)
Advertisement

நியூயார்க், அமெரிக்காவிற்குள் சட்ட விரோதமாக நுழைய முயன்று, வழிதெரியாமல் தவித்த இரு இந்தியர்களை அந்நாட்டு ரோந்துப் படை போலீசார் கைது செய்தனர்.

அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக ஊடுருவ முயற்சிப்போர், பாலைவனப் பகுதியில் வழிதெரியாமல் சிக்கித் தவிப்பது உண்டு. அத்தகைய அகதிகளை மீட்பதற்காக மெக்சிகோ எல்லைப்பகுதியில் சூரிய மின்சக்தி மூலம் இயங்கும் மீட்பு சிக்னல் டவர்கள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து, தொலைபேசி மூலம் 911 என்ற எண்ணுக்கு தொடர்பு கொண்டோ அல்லது மீட்பு சிக்னலை ஆக்டிவேட் செய்தோ உதவி கேட்கலாம். இதன்மூலம் ஏராளமான அகதிகள் மீட்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர்.சில நாட்களுக்கு முன், அரிசோனா மாநிலத்தில் உள்ள மீட்பு சிக்னல் டவரில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அங்கு விரைந்த எல்லை ரோந்துப் படை போலீசார், சிக்னல் டவர் அருகே வழிதெரியாமல் நின்றிருந்த 2 நபர்களை மீட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியதில்,இருவரும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்பதும், சட்டவிரோதமாக அமெரிக்காவிற்குள் நுழைய முயன்றதும் தெரியவந்தது. அவர்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு, பின், இந்தியாற்கு அனுப்பி வைக்கப்படுவர் என கூறப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
21-ஏப்-201907:36:25 IST Report Abuse
Amirthalingam Sinniah மக்கள் தெரிந்துகொண்டு குழியில் விழுகிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X